Published:Updated:

நிஸான் கார்களின் டிசைன்... இனி சென்னையில்!

நிஸான் கார்களின் டிசைன்... இனி சென்னையில்!
பிரீமியம் ஸ்டோரி
நிஸான் கார்களின் டிசைன்... இனி சென்னையில்!

நேர்காணல் - நிஸான் டிசைன் பிரிவுத் தலைவர்

நிஸான் கார்களின் டிசைன்... இனி சென்னையில்!

நேர்காணல் - நிஸான் டிசைன் பிரிவுத் தலைவர்

Published:Updated:
நிஸான் கார்களின் டிசைன்... இனி சென்னையில்!
பிரீமியம் ஸ்டோரி
நிஸான் கார்களின் டிசைன்... இனி சென்னையில்!

ட்ஸன்... ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு வந்த நிறுவனம். இந்தியாவில் வெறும் 3 மாடல்கள்தான்; ஆனால் பட்ஜெட் பிரியர்கள் மத்தியில் அந்த மூன்றுக்கும் தனி பாசம் உண்டு.

நிஸான் கார்களின் டிசைன்... இனி சென்னையில்!

குளோபல் மாடல்களைப் போல, டட்ஸன் கார்களை ஸ்டைலாக மாற்றவிருக்கும் பணியை, நிஸான் நிறுவனத்தின் டிசைன் பிரிவுத் தலைவரான அல்ஃபோன்ஸோ அல்பைஸா (Alfonso Albaisa) மேற்கொள்ளவிருக்கிறார். டிசைன் துறையில் ஆர்வமாக இருக்கும் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கக் கூடிய ‘Roots Of Design' அமைப்பைத் தொடங்குவதற்காக சென்னை வந்திருந்த அல்ஃபோன்ஸாவைச் சந்தித்தேன்.

டட்ஸனில் இருந்து வெளிவரப்போகும் புதிய கார்களில் என்ன எதிர்பார்க்கலாம்?

அடுத்த ஆண்டில் 'Dynamic Purity' எனும் டிசைனுடன் புதிய ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட கார்களை (கோ-க்ராஸ்) நீங்கள் பார்க்க முடியும். அதிக இடவசதி, அதிக பாதுகாப்பு, குறைவான எடை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால், டட்ஸனின் வரலாறுக்கு (240Z/Fairlady) ஏற்ற கார்களாக அவை இருக்கும்

டிசையர், அமேஸுக்குப் போட்டியாக, நிஸானில் ஏன் ஒரு காம்பேக்ட் செடான் இல்லையே?

ஒரு சிறிய செடானை  4 மீட்டருக்குள் ஸ்டைலாக டிசைன் செய்து, அதில் 5 பேர் சொகுசாக உட்கார்ந்து பயணிக்கும்படி செய்வது கொஞ்சம் கடினமான விஷயம்தான். மேலும் அந்த செக்மென்ட்டில் போட்டி அதிகமாக இருப்பதுடன், விற்பனை எண்ணிக்கையும் சீரற்ற முறையில் இருக்கிறது. அதற்குப் பதிலாக, நாங்கள் டிரெண்டிங்கில் இருக்கும் எஸ்யூவி செக்மென்ட்டில் ஒரு புதிய மாடலை களமிறக்க உள்ளோம்.

டஸ்ட்டரில் இருந்து முளைத்ததுதான் டெரானோ. அதேபோல கேப்ச்சரில் இருந்து தான் கிக்ஸ் கார் வருமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிஸான் கார்களின் டிசைன்... இனி சென்னையில்!

ஆம். இது கேப்ச்சர் தயாரிக்கப்படும் அதே B0 ப்ளாட்ஃபார்மில்தான்  வரும். கிக்ஸ் பார்க்க காம்பேக்ட்டாகத் தெரிந்தாலும் - பெரிய வீல்கள், கட்டுமஸ்தான தோற்றம், அதிக உயரம் என அசத்தலாக இருக்கும். உலகளவில் 4 லட்சம் கிக்ஸ் கார்கள் விற்பனையாகி விட்டன. வெளிநாடுகளில் இருக்கும் கிக்ஸ் - இந்தியாவில் அறிமுகமாக உள்ள கிக்ஸ் இரண்டுக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது.

‘மேக் இன் இந்தியா’ என்பது தற்போது பெரிய பேசும் பொருளாகி இருக்கிறது. இது பற்றி?

ஒரு காரின் உதிரிபாகங்களை மட்டும் உள்நாட்டிலிருந்து பெற்றால் போதாது. காரின் டிசைனையும் உள்நாட்டிலேயே செய்ய விரும்புகிறோம். அதனால், பிரத்யேகமாக ஒரு டிசைன் ஸ்டுடியோவை சென்னையில் உருவாக்கி வருகிறோம். எக்ஸ்போக்களில் வைக்கக்கூடிய கான்செப்ட் கார்களைக்கூட இங்கிருந்தே டிசைன் செய்யும் எண்ணம் இருக்கிறது.

நிஸானின் சர்வதேச திட்டங்கள்?


இந்தியாவில் கிக்ஸ் எஸ்யூவியின் நீட்சியாக டெர்ரா எஸ்யூவி இருக்கலாம். அது பற்றிய விவரங்களை இப்போது சொல்ல இயலாது. இந்தியாவில் எலெக்ட்ரிக் ஃபீவர் உருவாகியிருக்கிறது. அதற்கும் எங்களிடம் பதில் இருக்கிறது (லீஃப், நோட் E-Power). போர்ஷே 911 சீரிஸ் கார்களுக்கான நிஸானின் பதிலாக, புதிய காட்ஸில்லா (GT-R) வெளிவரும். இது ItalDesign கான்செப்ட் காரை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம். வேகத்தை முன்னிறுத்தி அது தயாரிக்கப்படும்.

ஒரு டிசைனராக, உங்களுக்குப் பிடித்த மற்ற நிறுவனத் தயாரிப்புகள் என்ன?

எனக்கு போர்ஷே 911 கார் மிகவும் பிடிக்கும். 55 வயதானாலும், தனது பாரம்பரியத் தோற்றத்தில் இருந்து விலகாமல், ட்ரெண்டுக்கு ஏற்ப கலக்குகிறது. அதேபோல பிஎம்டபிள்யூ கார்களின் பொறியியல் திறன் அசத்தலாக உள்ளது. புதிய 7 சீரிஸ் மற்றும் Z4 கார்களில் இது பளிச்செனத் தெரிகிறது.

ராகுல் சிவகுரு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism