Published:Updated:

மஹிந்திராவில் சத்தம் போடாத கார்!

மஹிந்திராவில் சத்தம் போடாத கார்!
பிரீமியம் ஸ்டோரி
மஹிந்திராவில் சத்தம் போடாத கார்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV500 AT (பெட்ரோல்)

மஹிந்திராவில் சத்தம் போடாத கார்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV500 AT (பெட்ரோல்)

Published:Updated:
மஹிந்திராவில் சத்தம் போடாத கார்!
பிரீமியம் ஸ்டோரி
மஹிந்திராவில் சத்தம் போடாத கார்!

பெட்ரோல் பங்க்கில் ஒரு கார் நுழையும்போது, ‘டீசலா... பெட்ரோலா’ என்று கேட்டுவிட்டுத்தான் எரிபொருள் நிரப்புவார்கள் பங்க் ஊழியர்கள். அவர்களுக்குக்கூடத் தெரியும். மஹிந்திரா கார் நுழைகிறது என்றால், நிச்சயம் அது டீசல் காராகத்தான் இருக்க முடியும். வெரிட்டோவில் பெட்ரோல் வேரியன்ட்டை ஒரு காலத்தில் லாஞ்ச் செய்தது மஹிந்திரா. அதற்கப்புறம், டீசலைத்தான் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தது. ஆம்! மஹிந்திராவில் பெட்ரோலே இல்லை. இப்போது பெட்ரோல் மாடல் வந்துவிட்டது. அதுவும் எஸ்யூவி-யான XUV 500 காரில் என்றால், வியப்பாகத்தான் இருக்கிறது. பெட்ரோல் எஸ்யூவி-க்கான மார்க்கெட் குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் மஹிந்திராவின் இந்த முடிவு சரியானதாக இருக்குமா? எக்ஸைட் மென்ட்டோடு எக்ஸ்யூவி-யில் ஒரு க்விக் டிரைவ்! 

மஹிந்திராவில் சத்தம் போடாத கார்!

ஸ்மூத் டிரைவ்?

2.2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினை, ஒரு மஹிந்திரா காரின் உள்ளே இருந்து இயக்குவது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. முதன் முதலாக சத்தம் போடாத ஒரு மஹிந்திரா காரை ஓட்டப் போகிறேன். டீசல் இன்ஜினின் அதே சிலிண்டர் பிளாக்கில்தான் பெட்ரோல் இன்ஜினைச் செய்திருக்கிறார்கள். இங்கும் ஃப்ரன்ட் வீல் டிரைவ்தான். ஃபன்னாகத்தான் இருக்கும்.

6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ஸ்மூத்தாக இருந்தது. 140 bhp பவர். கிட்டத்தட்ட 1.7 டன் எடை கொண்ட இந்த எஸ்யூவி-க்கு இது ஓகேவா? ‘D’ மோடில் வைத்து ‘நறுக்’ என ஆக்ஸிலரேட்டர் மிதித்தால்... கார் விருட்டெனப் பறந்தது. 0-100 கி.மீக்கான நேரத்தை செக் செய்தால். 12.77 விநாடிகள் எனக் காட்டியது. பெரிய எஸ்யூவி-க்கு இந்த பர்ஃபாமென்ஸ் சூப்பர் என்றும் சொல்ல முடியாது; சுமார் என்றும் சொல்ல முடியாது. ஓகே ரகம்! ஆனால், பெட்ரோலைவிட 15 bhp அதிகம் கொண்ட டீசல் XUV-யைவிட இது வேகம்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மஹிந்திராவில் சத்தம் போடாத கார்!

32 kgm டார்க் ஓகேதான். டீசலை ஓட்டிவிட்டு பெட்ரோலை ஓட்டும்போது, ரிஃபைன்மென்ட்டுக்கு ஒரு லைக் போட்டே ஆக வேண்டும். ஆனால், இதுதான் மிகச் சிறந்த ரிஃபைண்டு பெட்ரோல் இன்ஜின் என்று சொல்ல முடியாது. ஸ்லோ ஸ்பீடு டிராஃபிக்கில், இதன் ரெஸ்பான்ஸ் அருமை. பவர் டெலிவரி செம ஸ்மூத். சிட்டி டிரைவிங்குக்கு எனக்குப் பிடித்திருந்தது XUV-யை. காரணம், இதன் கியர் ஷிஃப்ட்டில் எந்தத் தங்குதடையும் இல்லை. இத்தனைக்கும் டார்க் கன்வெர்ட்டர் யூனிட்தான்.

டர்போ லேக்?

டீசல் XUV-யில் டர்போ லேக்கை உணர்ந்துவிட்டு, இதில் பவர் டெலிவரி ஷார்ப்பாகக் கிடைத்ததும் உற்சாகமாக இருந்தது. 1,800 ஆர்பிஎம்-லேயே இதன் டர்போ சார்ஜர் வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறது. அதிவேகங்களின்போது கியர்பாக்ஸில் டவுன் ஷிஃப்ட்டிங்கில் மட்டும் ஏதோ சுணக்கம் இருந்ததுபோல் தெரிகிறது. டவுன்ஷிஃப்ட்டிங்கில் தாமதம் இருந்தால், ஓவர்டேக்கிங் ஈஸியாகப் பண்ண முடியாதே? 

மஹிந்திராவில் சத்தம் போடாத கார்!

மேனுவல் மோடில் மாற்றி வைத்து ஓட்டினேன். அதுவும் பெரிதாக வேலைக்கு ஆகவில்லை. 4,300 ஆர்பிஎம்-க்கு மேல் ஆட்டோமேட்டிக்காக அப்ஷிஃப்ட் ஆகி விடுகிறது கியர்பாக்ஸ். ஒரு பெரிய பெட்ரோல் இன்ஜினுக்கு இது ஸ்லோதான். பொதுவாக ஃப்ரன்ட் வீல் கார்களில் ‘டார்க் ஸ்டீயர்’ என்றொரு குறை உண்டு. அதாவது, ஹார்டு ஆக்ஸிலரேஷனில் வாகனத்தின் மொத்த டார்க்கும் ஸ்டீயரிங்கில் ஃபீல் ஆகும். இதனால், ஸ்டீயரிங் ஒரு பக்கமாக இழுக்கும். இது டிரைவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும். XUV பெட்ரோலில் இந்தக் குறை தெரிந்தது.

சிட்டி டிரைவிங்கில் அற்புதமாக இருந்தது. அப்படியென்றால், இதன் மைலேஜ் சாதகமாக இருந்தால்தானே நலம்? ஒற்றை இலக்கங்களில்தான் இதன் மைலேஜ் இருக்கும்போல் தெரிந்தது. கம்யூட்டர் ரைடர்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

ரைடு குவாலிட்டி

ஓட்டுதலில் பழைய XUVதான். குறைந்த வேகங்களில் கொஞ்சம் ஸ்டிஃப் ஆகவும், அதிவேகங்களில் நிலைத் தன்மையுடனும் கார் பயணிக்க உதவுகிறது இதன் சஸ்பென்ஷன் செட்-அப். பெரிய கார் என்பதால், கார்னரிங்கில் அண்டர் ஸ்டீயர் ஆகிறது. சில மோசமான பள்ளங்களில் இதன் தாக்கம் ஸ்டீயரிங்கில் ஃபீல் ஆகிறது. மேலும், பெரிய காருக்கு 17 இன்ச் வீல்கள் போதவில்லை. 

மஹிந்திராவில் சத்தம் போடாத கார்!

இன்டீரியரைப் பொறுத்தவரை கறுப்பு கேபின் தீம். டீசல் டாப் மாடல்போல எங்கேயும் லெதர் ஃபினிஷ் இல்லை. வழக்கம்போல், ஃபிட் அண்ட் ஃபினிஷில் இன்னும் முன்னேற்றம் தேவை. சொகுசான டேன்-ஃபேப்ரிக் சீட்கள், இந்தக் குறையை மறக்கடிக்கின்றன. அவை உட்கார்ந்து ஓட்டவும் சொகுசாக இருக்கின்றன. 7 சீட்டர் கார் என்பதால், நடுவரிசையில் மூன்று பல்க்கியான ஆசாமிகள் தாராளமாக உட்காரலாம். ஆனால், தொடைக்கான சப்போர்ட்டில்... ஸாரி! அந்த மூன்றாவது வரிசை, குழந்தைகளுக்குத்தான் செட் ஆகும். நீண்ட தூரப் பயணங்களுக்கு இளசுகள் கூட செட் ஆக மாட்டார்கள்.

மஹிந்திராவில் சத்தம் போடாத கார்!

வசதிகளில் டீசன்ட்டாக இருக்கிறது XUV 500. ESP, ரோல்ஓவர் மிட்டிகேஷன், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் டிஸன்ட் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மட்டும் உண்டு. இத்தனை பெரிய காருக்கு ரிவர்ஸ் கேமரா எங்கே மஹிந்திரா? அதுவும் டூயல் காற்றுப் பைகள்தான்.

பெட்ரோலில் ‘G Automatic’ எனும் ஒரே வேரியன்ட்டில்தான் வருகிறது XUV500.  இதன் சென்னை ஆன்ரோடு விலை சுமார் 19.28 லட்சம். அதாவது, W11 AT டீசல் வேரியன்ட்டைவிட 2.5 லட்சம் குறைவு! சிட்டி டிரைவிங்குக்கு சூப்பராக இருந்தாலும், மைலேஜில் திருப்திப்படுத்தவில்லை பெட்ரோல் XUV500.

இதைத் தாண்டி ரிவர்ஸ் கேமரா, எக்ஸ்ட்ரா காற்றுப் பைகள், சன் ரூஃப், லெதர் வேலைப்பாடுகள், 18 இன்ச் வீல்கள் இதெல்லாம் மஹிந்திரா கொடுத்திருக்கலாம்!

தமிழ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism