Published:Updated:

இந்தக் கார் செய்த சாதனை... ரியல்லி 'அமேஸிங்'

இந்தக் கார் செய்த சாதனை... ரியல்லி 'அமேஸிங்'
இந்தக் கார் செய்த சாதனை... ரியல்லி 'அமேஸிங்'

2018-ம் ஆண்டு கார் விரும்பிகளின் நல்ல ஆண்டாக இருந்தது என்றே கூறலாம். காரணம், குடும்பத்துக்கு ஏற்ற, பட்ஜெட்டுக்குள் அடங்கும்அட்டகாசமான கார்கள் சந்தையில் அறிமுகம் ஆகியிருந்ததுதான்! கார், என்றால் கடலை வாங்குவது போலவா? 10 ரூபாய் கொடுத்து பொட்டலம் கட்டி வாங்க... நிறைய ரிவ்யூஸ், நிறைய ஆராய்ச்சி, நிறைய அறிவுரைகள், இதையெல்லாம் தாண்டி பார்த்தவுடனே பிடிக்கணும், இடவசதி ஏராளமாகவும் தொழில்நுட்ப வசதி தூக்கலாகவும் இருக்கணும், மேலும் டெஸ்ட் டிரைவில் ஃபன்னாகவும் பாதுகாப்பாகவும் இருந்தால் மட்டுமே ஒரு காரை நாம் வாங்க வேண்டும்... இதில் பவர் பிரியர்கள் ஒருபக்கம், மைலேஜ் பிரியர்கள் ஒருபக்கம் இருவரையும் திருப்தி செய்யும் அளவுக்கு வெகு சில கார்கள் மட்டுமே சந்தையில் இருக்கின்றன. அதில் ஃபர்ஸ்ட் பெஞ்ச் மாணவனாக முதல் மார்க் எடுத்து தனித்து நிற்கிறது புகழ்பெற்ற ஹோண்டா நிறுவனத்தின் காரான ஆல் நியூ 'அமேஸ்'!

இந்தக் கார் செய்த சாதனை... ரியல்லி 'அமேஸிங்'

6 மாதத்தில் 50000 கார்கள் விற்பனை செய்து சாதனை!!!

இந்தியாவில் ஒரு பிராண்ட் ஏன் பிரபலமாக இருக்கிறது எனக் கேட்டால் சுலபமாகச் சொல்லிவிடலாம், மக்கள் விரும்பும் அம்சத்தை, நியாயமான விலையில் தரத்துடன் வழங்கினாலே போதும், இந்திய வாடிக்கையாளர்களை வசப்படுத்திக்கொள்ளலாம்! இதைக் கண்கூடாக நிரூபித்துள்ளது ஹோண்டா அமேஸ். ``கடந்த 6 மாதத்தில் மட்டும் 50,000 அமேஸ்-2018 வெர்ஷன் கார்களை விற்றுவிட்டோம்! இன்னும் ஆர்டர்கள் வந்தவண்ணம் உள்ளன" என அதிகாரபூர்வமாக ஆர்ப்பரிக்கிறது ஹோண்டா நிறுவனம். உண்மையிலேயே இது அமேஸிங்கான செய்திதான்! என்ட்ரி லெவல் செடான் வகையில் மளமளவென பிற கார்களைப் பின்னுக்குத் தள்ளி விற்பனையில் முன்னேறிவருவதை இந்தச் செய்தி உறுதிசெய்கிறது...

குடும்பத்தின் காராக ஹிட் அடித்துள்ள அமேஸ்!

இந்தியாவிலேயே, டீசல் CVT ஆட்டோமேட்டிக் அம்சம் ஹோண்டா அமேஸ் காரில்தான் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வேறு எந்தக் காரும் இந்த மாடலில் தற்போது இந்திய சந்தையில் இல்லை என்பதாலும், இவ்விடத்தை நிரப்ப இன்னும் சில மாதங்கள் ஆகவே செய்யும் என்பதாலும், செடான் கார் ரக சேல்ஸில் ஒரு ரவுண்டு வளமாக வலம் வரப்போகிறது அமேஸ் என்பது நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது. சாதாரண ஆட்டோமேட்டிக் வகையைக் காட்டிலும் CVT  ஆட்டோமேட்டிக் ஓட்டுவதற்கு ஸ்மூத்தாக இருக்கிறது, எஃபீஷியென்சி பிரமாதம், மேலும் மைலேஜிலும் எந்த சமரசமும் இல்லை எனபதால் டெஸ்ட் டிரைவிங்கில் செல்லப் பிள்ளையாக தேர்வாகிறது அமேஸ்.

உயரம் மற்றும் அகலத்தில் முன் சீட் பயணிகளுக்கு தாராளமாக இடமுள்ளது. வீல் பேஸ் அதிகரித்துள்ளதால், சரியான கோணத்தில் பின்சீட்டுகளின் சாய்மானம் இருப்பதால், வயதானவர்கள் பின்சீட்டில் உட்கார  வசதியாக இருக்கிறது, காலை நீட்டி மடக்கவும் போதுமானஇடம் இருக்கிறது. வயதான பெற்றோர் நிம்மதியாக பின் சீட்டில் உட்கார்ந்து வரலாம்! பாட்டில், போன் போன்ற விஷயங்களை வைக்க காரில் போதுமான இடம் இருக்கிறது. 420 லிட்டர் கெப்பாசிட்டி டிக்கியில், ஒரு குடும்பத்துக்குத் தேவையான அளவு பொருள்களை வைத்துச்செல்ல வசதியிருக்கிறது!

இந்தக் கார் செய்த சாதனை... ரியல்லி 'அமேஸிங்'

பாதுகாப்புக்கு முக்கியத்துவம்:

குடும்பத்தோடு காரில் பயணிக்கும்போது, அதிகமாக பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது ஹோண்டா. ஆன்டி லாக் பிரேக்கிங் & எலெக்ட்ரானிக் பிரேக் போர்ஸ் சிஸ்டம் வீல்கள் லாக் ஆவதைத் தடுத்து, கார் அதிக வேகத்தில் சறுக்கமால் காக்கிறது. ஆபத்து சமயங்களில் உதவ 2 காற்றுப்பைகள் இருப்பது பெரிய அனுகூலம். குழந்தைகளின் பாதுகாப்புக்கான isofix சீட் ஆகியவை எல்லா வேரியன்ட்டுகளிலும் இருக்கிறது. மொத்தமாகச் சொன்னால் குடும்பத்துக்கு ஏற்ற வகையில் ஸ்டைலான, பாதுகாப்பான, இட வசதி கொண்ட காராக ஹோண்டா அமேஸ் திகழ்கிறது!

மைலேஜ்: 

19.5 kmpl (MT)/ 19kmpl (CVT)

27.4kmpl (MT)/ 23.8kmpl (CVT)

பிற கவரும் அம்சங்கள்...

ஸ்டைலான வடிவமைப்பு, ஐந்து நிறங்களில் வருவது, நீண்ட வீல்பேஸ், அழகான டேஷ் போர்டு, சொகுசான லுக் அண்ட் ஃபீல், பெட்ரோல் மேனுவல் & CVT ஆட்டோமேட்டிக் (1.2 லிட்டர்), டீசல் மேனுவல் & CVT ஆட்டோமேட்டிக் (1.5 லிட்டர்) இன்ஜின்கள் என்று நான்கு விதமான ஆப்ஷன்கள்,  ஐந்து கியர்களைக் கொண்ட கியர்பாக்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டியரிங் அட்ஜஸ்ட்மென்ட், கிளைமேட் கன்ட்ரோல், சாவி இல்லாமல் பட்டன் ( Keyless Smart Entry) மூலம் காரை ஸ்டார்ட்செய்யும் வசதி, மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன், பின்பக்க கேமரா என ஒரு பெரிய அம்சங்கள் பட்டியலை எழுதித் தீர்க்கலாம்... சும்மாவா 50,000 கார்கள் விற்பனை ஆகியிருக்கும்?

இறுதித் தீர்ப்பு...

என்ட்ரி லெவல் செடான் வகை 5.80 லட்ச ரூபாய் (தொடக்க விலை) எனும் பட்ஜெட் விலையில் தனி அதிகாரம் செலுத்திக்கொண்டிருக்கிறது ஹோண்டா அமேஸ். இடவசதி, பவர், மைலேஜ், பாதுகாப்பு, இதையெல்லாம் ஒருசேர கிடைப்பதால், இப்போதைய சென்டிமென்டிற்கு, அனைவருக்கும் ஏற்ற சிறப்பான காராக திகழ்கிறது ஆல் நியூ 'அமேஸ்'. அதற்காக கண்ணை மூடி அமேஸ் காரை வாங்க வேண்டாம், கண்ணைத் திறந்துகொண்டே டெஸ்ட் டிரைவ் செய்து வாங்கலாம்! இப்போதே டெஸ்ட் டிரைவிங் புக் செய்ய/மேலும் தகவல்களை அறிய இந்தப் படிவத்தை பூர்த்தி செய்யவும்....

விவரங்களைப் பெற

ஹோண்டாவின் ஆல் நியூ 'அமேஸ்'... தரம், வசதி, பிரமாண்டம்!

அடுத்த கட்டுரைக்கு