Published:Updated:

சரக்குப் பெயர்ச்சிப் பலன்கள் - 9 - கார் தயாரிப்பில் தவறு நடக்குமா?

சரக்குப் பெயர்ச்சிப் பலன்கள் - 9 - கார் தயாரிப்பில் தவறு நடக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
சரக்குப் பெயர்ச்சிப் பலன்கள் - 9 - கார் தயாரிப்பில் தவறு நடக்குமா?

தொடர் - 9

சரக்குப் பெயர்ச்சிப் பலன்கள் - 9 - கார் தயாரிப்பில் தவறு நடக்குமா?

தொடர் - 9

Published:Updated:
சரக்குப் பெயர்ச்சிப் பலன்கள் - 9 - கார் தயாரிப்பில் தவறு நடக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
சரக்குப் பெயர்ச்சிப் பலன்கள் - 9 - கார் தயாரிப்பில் தவறு நடக்குமா?

இன்பவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் என்றால் என்ன?

ஒரு தயாரிப்பு நடப்பதற்கு முக்கியமானது இந்த இன்பவுண்ட் லாஜிஸ்டிக்ஸ்தான். பெரிய தொழிற் சாலை ஒன்று இருக்கிறது. அதற்குள்ளேயே நடக்கும் பொருட்களின் இடமாற்றம்தான் இன்பவுண்ட் லாஜிஸ்டிக்ஸ். அதாவது, ரா மெட்டீரியல்களை, தயாரிக்கும் இடத்தின் தேவைக்கேற்ப விநியோகம் செய்வது.

சரக்குப் பெயர்ச்சிப் பலன்கள் - 9 - கார் தயாரிப்பில் தவறு நடக்குமா?

ஒரு பிசினஸில் முக்கியமாகக் கருதக் கூடிய `வேல்யூ செயின்’ எனும் அம்சத்தின் முதல் ஸ்டேஜ் இதுதான்.மூலப் பொருட்களை ‘இன்-டை’முக்குக் கொண்டுவந்து, சரியான ‘அவுட்-டை’முக்கு மார்க்கெட்டுக்கு அனுப்புவது தான் வேல்யூ செயின் முறை. இதில் குளறுபடி ஏற்பட்டால், மொத்த பிசினஸும் பாதிக்கப்படும். உதாரணத்துக்கு, நம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியையே எடுத்துக் கொள்ளலாம். ஒரு பிரபலமான கார் நிறுவனத்திலிருந்து ஒரு மாதத்துக்கு கிட்டத்தட்ட 50,000 கார்கள் உற்பத்தியாகின்றன. அதாவது, ஒரு நாளைக்கு சுமார் 1,600 கார்கள். இந்த 1,600 கார்களையும் மிகச் சரியாக ரிலீஸ் செய்வது என்பது சாதாரண விஷயமல்ல. இங்குதான் மிகப் பெரிய சவால் மறைந்திருக்கிறது.

உதாரணத்துக்கு, ஒரு கார் நிறுவனத்திலிருந்து ஒரு கார் மட்டும் விற்பனை ஆவதில்லை. எத்தனை மாடல்கள் விற்பனையாகின்றனவோ, அத்தனை மாடல்களையும் ஒரு தொழிற்சாலையில் தயார் செய்வது என்பதில் கவனம் அதிகம் தேவை. கார் மாடல் தாண்டி, வேரியன்ட் என்று பார்த்தால் அதுவும் எக்ஸ்ட்ரா கணக்குதான். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வேரியன்ட்டுகளையும் கணக்கிலெடுத்தால் இந்தக் கணக்கு மேலும் அதிகமாகும். இதில் ஒரு காருக்கான டயர்களை வேறு ஒரு மாடலிலோ, ஹேட்ச்பேக்குக்கான டேஷ்போர்டை செடானிலோ தவறுதலாக ஃபிட் செய்து விட்டால் என்னாகும் என யோசித்துப் பாருங்கள். நம் வீட்டு அடுக்களையில் உப்பு, மிளகு, கடுகு டப்பாக்களே நம்மைக் குழப்பியடிக்கும். ஆனால், கார் தொழிற்சாலையில் இவை எல்லாமே அச்சுப் பிசகாமல் நடக்க வேண்டும் என்றால், அதற்குப் பின்னால் இன்பவுண்ட் லாஜிஸ்டிக்ஸின் நேர்த்தியும், அதற்கான கட்டளைகளும் அடங்கியிருக்கின்றன.

இந்த 1,600 கார்களில் மதியம் வரை ஒரு மாடல் என்றும், இரவு வரை வேறு ஒரு மாடல் கார் என்றும், மறுநாள் காலை வரை இன்னொரு கார் என்றும் பிரித்து வைக்கப்பட்டு, அதற்கான க்ளீன் ஸ்கெட்ச் போடப்படும். இதை `பெல்ட் ஸ்பீடு’ என்று சொல்வார்கள். இதற்கேற்ப அதற்குரிய மெட்டீரியல்களை சப்ளை செய்வதுதான் சவால். அசெம்பிளி லைனில் ஒவ்வொரு பிரிவையும் `ஸ்டேஷன்’ என்று சொல்வார்கள். இப்படி ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்டேஷன்கள் கொண்டதுதான் ஒரு அசெம்பிளி லைன்.

உதாரணத்துக்கு, ஸ்டேஷன் 1-ல் காரின் சேஸி என்றால், ஸ்டேஷன் 2-ல் டேஷ்போர்டு...ஸ்டேஷன் 3-ல் டயர்கள்..  இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்டேஷனில் சேர்க்கப்படும். இதற்கு ஏற்றவகையில்தான் உதிரிபாகங்கள் அந்தந்த ஸ்டேஷன்களுக்குச் சென்று சேரும். தொழிற் சாலைகளின் லாங்வேஜில் இதை `சிங்க்ரனைசேஷன்  ஆஃப் மெட்டீரியல்ஸ்’ என்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரக்குப் பெயர்ச்சிப் பலன்கள் - 9 - கார் தயாரிப்பில் தவறு நடக்குமா?

10 ஸ்டேஷன்கள் இருக்கின்றன என்றால், அதற்கான ரா மெட்டீரியலை அந்தந்த ஸ்டேஷனில் சரியாக இறக்குவதுதான் இன்பவுண்ட் லாஜிஸ்டிக்ஸ். அந்தந்த கார்களுக்கு உரிய ஸ்பேர்கள் மட்டும்தான் அன்றைக்கு வந்து இறங்கும். எஸ்யூவிதான் அன்றைய தயாரிப்புப் பணி என்றால், செடானுக்கோ ஹேட்ச்பேக்குக்கோ உரிய ரா மெட்டீரியல்கள் அந்தத் தேதியில் மருந்துக்குக்கூட இருக்கக் கூடாது. என்றைக்காவது ஒரு தொழிற்சாலையில் இப்படிப்பட்ட மிகப்பெரிய தவறு நேர்ந்ததாக நீங்கள் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? இதனால்தான் அங்கே மேனுஃபேக்ச்சரிங் டெஃபெக்ட்கள் தவிர்க்கப் படுகின்றன.

இதற்கான வேர்ஹவுஸ், லாஜிஸ்டிக்ஸ் சமாச்சாரங்களை அந்த நிறுவனங்களே வைத்துக்கொண்டால், அது பெரும் சுமையை ஏற்படுத்தும் என்பதால்தான், பெரிய நிறுவனங்கள் இதற்கான கான்ட்ராக்ட்டை வேறு ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு, தயாரிப்புப் பணியில் மட்டும் கவனம் செலுத்துகின்றன. இதுதான் இப்பொழுது நடைமுறையில் இருக்கும் தயாரிப்பு முறை.

அவுட்பவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் என்றால் என்ன?

தயாரித்து முடிக்கப்பட்ட கார்களை வெளி மார்க்கெட்டுக்கோ, ஷிப்பிங் ஏரியாவுக்கோ, கஸ்டமருக்கோ சரியான நேரத்தில் டெலிவரி கொடுப்பது அவுட்பண்ட் லாஜிஸ்டிக்ஸ். பொருள்களை ஏற்றிவிட்டு இறக்கினால் முடிந்தது என்று இதைச் சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது.  இந்த அவுட்பவுண்ட் புராசஸிலும் ஏகப்பட்ட கட்டங்கள் உண்டு.

தயாரிக்கப்பட்ட பொருள்கள் முதலில் அந்தந்த நிறுவனத்தின் வேர்ஹவுஸுக்கு செக்‌ஷன்வாரியாக எடுத்துச் செல்லப்படும். சேல்ஸ் செக்‌ஷன், டீலரிடமிருந்து முதலில் பர்ச்சேஸ் ஆர்டரைப் பெற வேண்டும். அந்த ஆர்டருக்கான ரெக்கார்டுகளை கம்ப்ளீட் செய்து, இதை சேல்ஸ் செக்‌ஷன் முதலில் உறுதிப்படுத்த வேண்டும். அந்த ஆர்டர், அதற்குப் பிறகு வேர்ஹவுஸுக்குச் சென்றால்தான், பொருள்கள் கஸ்டமருக்கு ஷிப்பிங் டெலிவரியோ, ரோடு டெலிவரியோ செய்யப்படும். நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் அத்தனை பொருள்களும் உங்களுக்கு வந்து சேர்ந்து, நீங்கள் பணம் கொடுத்து கேஷ்-ஆன் டெலிவரி பெறும் வரை அவுட்பவுண்ட் லாஜிஸ்டிக்ஸின் அடிப்படைத் தத்துவம் இருக்கிறது.

ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரு பொருள் உங்கள் வீடு தேடி வரும் அந்தக் காலகட்டத்துக்குள் டெலிவரி டிலே, ஃப்யூல், டீலர் பிரச்னை, விநியோகஸ்தர்கள், அவுட்சோர்ஸிங், ஸ்டோர், பில்லிங், RTO என எக்கச்சக்க விஷயங்கள், தடைக்கற்களாக நிற்கும். அவற்றை எல்லாம் சொன்னால் பக்கங்கள் போதாது. தடைகளைத் தகர்த்து வாழ்க இன்பவுண்ட்/அவுட்பவுண்ட் லாஜிஸ்டிக்ஸ்.

- சரக்கு பெயரும்

தொகுப்பு: தமிழ்

சரக்குப் பெயர்ச்சிப் பலன்கள் - 9 - கார் தயாரிப்பில் தவறு நடக்குமா?

ரவிச்சந்திரன் துணை நிர்வாக இயக்குநர், டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ்

ந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும், அதற்குள் சில உட் பிரிவுகள் உண்டு.

உதாரணத்துக்கு, ஒரு ஹோட்டல் இருக்கிறது. அதற்கு கிச்சன் இருக்கும்; அதில் சமையல்காரர் இருப்பார். ஸ்டோர் ரூம் இன்சார்ஜ் என்று இன்னொருவர் இருப்பார். அவர் சமையல்காரருக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றைச் சரியான நேரத்தில் சரியான அளவு எடுத்துக் கொடுப்பார். சர்வர் என்பவர், கிச்சனுக்கும் வாடிக்கையாளர் களுக்கும் பில் செக்‌ஷனுக்கும் உண்டான பாலமாக இருப்பார். இப்படி கிச்சன், டைனிங், பில் செக்‌ஷன் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயரும் பொறுப்பும் உண்டு அல்லவா?

அதேபோல்தான் லாஜிஸ்டிக்ஸிலும் பல அம்சங்கள் உண்டு. அதில் முக்கியமான இரண்டு அம்சங்கள் பற்றித்தான் இந்த இதழில் பார்க்கப் போகிறோம்.

‘இன்பவுண்ட் லாஜிஸ்டிக்ஸ், அவுட்பவுண்ட் லாஜிஸ்டிக்ஸ். பெயரே குழப்பமாக இருக்கிறதே? ஏதாவது ஃபார்முலாவாக இருக்குமோ.. இந்த லாஜிக்படிதான் லாஜிஸ்டிக்ஸ் நடக்க வேண்டுமோ’ என்றெல்லாம் பயந்து விடாதீர்கள். இவையெல்லாமே நாமே சூட்டிக்கொண்ட பெயர்கள்தான். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism