கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

``நான் கடந்த ஏழு ஆண்டுகளாக ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ டீசல் காரைப் பயன்படுத்தி வருகிறேன். நான் தற்போது அந்த காரைக் கொடுத்துவிட்டு, எனது மனைவிக்காக ஒரு சிறிய காரை வாங்க விரும்புகிறேன். எங்கள் குழந்தைகளை பள்ளியில் விட மட்டுமே அது பெரும்பாலும் தேவைப்படும். எனவே, அதன் மாதாந்திரப் பயன்பாடு 1,500 - 1,800 கிமீ-க்குள்ளாகவே இருக்கும். எனக்கு போலோவின் கட்டுமானத்தரம் மற்றும் ஓட்டுதல் அனுபவம் பிடித்திருக்கிறது. கார் ஓகேவா?’’

- எம். ஈஸ்வரமூர்த்தி, இமெயில்.

மோட்டார் கிளினிக்

``நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஃபோக்ஸ்வாகன் போலோ நல்ல சாய்ஸ். அதில் BS-VI மாசு விதிகளுக்கு அப்டேட் செய்யக்கூடிய 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இருந்தாலும், இதன் மைலேஜ் மற்றும் இன்ஜின் பர்ஃபாமென்ஸ், போட்டியாளர் களைவிடக் குறைவு என்பதை நினைவில்கொள்ளவும். இந்த நிறுவன கார்களின் பராமரிப்புச் செலவுகள் மற்றும் ரீ-சேல் மதிப்பும் அவ்வளவு சிறப்பாக இல்லை. எனவே, ஆறு காற்றுப்பைகளுடன் வரும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரைப் பரிசீலிக்கலாம்.’’

மோட்டார் கிளினிக்

``ஆக்டிவா ஸ்கூட்டரை வைத்திருக்கும் நான், முதுகுவலியால் அவதிப்படுகிறேன். அதன் எடையை என்னால் சரியாக பேலன்ஸ் செய்ய முடியவில்லை. எனவே, டிவிஎஸ் XL 100 iTouch மாடலை வாங்கலாம் என முடிவுசெய்து, ஷோரூமில் கேட்டால், `அது இன்னும் தமிழ்நாட்டில் விற்பனைக்கு வரவில்லை’ என்கிறார்கள். எனக்கு வேறு ஏதெனும் ஆப்ஷன்கள் இருக்கின்றனவா?’’

- ஐ.உத்தமகுமார், தஞ்சாவூர்.


``டிவிஎஸ் நிறுவனத்தின் மொபெட்டைவிட,  ஜூபிட்டர் ஸ்கூட்டர் உங்களுக்கு ஏற்ற சாய்ஸ். ஆக்டிவாவுக்குச் சமமான எடையில் இருந்தாலும், பெரிய 12 இன்ச் வீல்கள் - டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் கேஸ் மோனோஷாக் சஸ்பென்ஷன், எளிதாகப் பயன்படுத்தக்கூடிய சென்டர் ஸ்டாண்ட் மற்றும் கிக் ஸ்டார்ட் லீவர் - சீட்டுக்கு வெளியே பெட்ரோல் டேங்க் மூடி - USB சார்ஜர் ஆகியவை இருப்பதால், தினசரிப் பயன்பாட்டுக்கான பிராக்டிக்கலான ஸ்கூட்டராக  இருக்கும். இதில் புதிதாக வந்திருக்கும் கிராண்ட் எடிஷனில் Semi-டிஜிட்டல் மீட்டர் மற்றும் LED ஹெட்லைட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளன.’’

மோட்டார் கிளினிக்

``எனது பட்ஜெட் 12 லட்ச ரூபாய். 5 சீட்டர்தான் வேண்டும். அது எஸ்யூவி அல்லது க்ராஸ் ஓவர் காராக இருப்பது அவசியம். நல்ல மைலேஜ், சிறப்பான ஓட்டுதல் அனுபவம், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றில் அசத்தும் கார் எது?’’

- சந்தோஷ், இமெயில்.


``சிறப்பான தயாரிப்பாக இருப்பினும், ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டின் விலை அதிகமாக இருக்கிறது. எனவே, மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களின் டாப் வேரியன்ட்களை நீங்கள் பரிசீலிக்கலாம். இவை இரண்டுமே காம்பேக்ட் எஸ்யூவி டிசைன் - திடமான மோனோகாக் சேஸி - க்ராஷ் டெஸ்ட்டில்  4 ஸ்டார் ரேட்டிங் - சிறப்பான ஓட்டுதல் அனுபவம் மற்றும் மைலேஜ் - AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் எனப் பல ஒற்றுமைகளைக்கொண்டுள்ளன. இதில் நெக்ஸான் கூடுதல் பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தினால், பிரெஸ்ஸா சிறப்பான ரீசேல் மதிப்பைக்கொண்டுள்ளது. வசதிகளில் இரண்டுமே சமம்தான். எனவே, இரண்டையும் ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து முடிவெடுக்கவும்.’’

மோட்டார் கிளினிக்

``நான் புதிதாக 125 சிசி ஸ்கூட்டர் வாங்க உள்ளேன். அதை நானும் என் தந்தையும் ஓட்டுவோம். பெரும்பாலும் கரடுமுரடான சாலைகளில்தான் அது பயன்படுத்தப்படும் என்பதால், அதன் ஓட்டுதல் அனுபவம் சொகுசாக இருத்தல் அவசியம். பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால், மைலேஜும் சிறப்பாக இருக்கவேண்டும்.’’

- எஸ். ராஜா கணேஷ், சேலம்.


``125சிசி பிரிவில் சுஸூகி ஆக்ஸஸ் மற்றும் 110சிசி பிரிவில் டிவிஎஸ் ஜூபிட்டர் ஆகிய ஸ்கூட்டர்கள், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். தனது வகையிலேயே குறைவான எடையைக்கொண்டிருக்கும் ஆக்ஸஸ், 125சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டின் தலைவராக விளங்குகிறது. ஆக்டிவாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் அதிகளவில் விற்பனையாவது ஜூபிட்டர்தான். இருப்பினும் இரண்டையும் ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பது நலம்.’’

``என்னிடம் பஜாஜ் பல்ஸர் 150 சிசி பைக் இருக்கிறது. நான் இந்தியாவுக்கு வரும் சமயத்தில் மட்டுமே (ஆண்டுக்கு ஒரு மாதம்) அதை உபயோகப்படுத்துவேன். மீதம் 11 மாதமும் வீட்டில்தான் பைக் நிற்கும். எனவே, அதைப் பராமரிப்பது எப்படி?’’

- மஹம்மது ஆரிஃப், அபுதாபி.


``முதலில் டேங்க்கில் இருக்கும் பெட்ரோலை முழுவதுமாக இறக்கிவிடவும். பிறகு கார்புரேட்டர் - ஃப்யூல் லைனில் இருக்கும் பெட்ரோலையும் வெளியே எடுத்துவிட வேண்டும். பேட்டரி கனெக்‌ஷனை கழட்டிய பிறகு, நிழலான இடத்தில் பைக்கை மெயின் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிடவும். டயர்களுக்கு அடியே டால்கம் பவுடரைத் தூவிவிட வேண்டும். மிகவும் முக்கியமாக, பைக்குக்கு கவர் போட்டுவிடுவது நலம். ஒருவேளை இவை சாத்தியமில்லை என்றால், தினசரி பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு, 5 நிமிடம் ஐடிலிங்கில் ஓடவிடலாம்.’’

மோட்டார் கிளினிக்

``நான் யூஸ்டு கார் மார்க்கெட்டில் மாருதி சுஸூகி எர்டிகா டீசல் காரைப் பார்த்தேன். 2012-ம் ஆண்டைச் சேர்ந்த அது, இதுவரை 83,000 கி.மீ ஓடியிருக்கிறது; டாப் வேரியன்ட் ZDi மாடல். காரின் உரிமையாளர் அதற்கு 6 லட்சம் ரூபாய் கேட்கிறார். அதை வாங்கலாமா? நான் காரை வாரம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்துவேன்.’’

- எஸ். நடராஜன், இமெயில்.


``நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எர்டிகா, பர்ஃபெக்ட்டான கண்டிஷனில் இருந்தால் மட்டுமே அந்த விலை சரியானது. அதாவது காரின் சேஸி & பாடி -  டயர்கள் - சஸ்பென்ஷன் - பேட்டரி & காரின் எலெக்ட்ரிக் பாகங்கள் - பவர் ஸ்டீயரிங் - இன்ஜின் & கியர்பாக்ஸ் ஆகியவை பக்காவாக இருந்தால் ஓகே. இல்லையெனில், 10 சதவிகிதம் குறைவான விலைக்கு காரைக் கேட்கலாம். அதேபோல, காரின் service History - Flood Damage - Accidental Claim - Insurance ஆகியவை குறித்தும் விசாரிக்கவும். எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில், காரை ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு வாங்கவும்.’’

மோட்டார் கிளினிக்

ங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com