கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

கடிதங்கள்

கடிதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கடிதங்கள்

கடிதங்கள்

ட்டைப் படத்தில் ‘சுறா’ என்றதும் பயந்துவிட்டேன். மஹிந்திராவின் மராத்ஸோ, நிஜமாகவே சுறா மீன் மாதிரிதான் இருக்கிறது. இனோவாவுக்குக் கடும் போட்டி காத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

- ஆனந்தன் ஜோ, திருவண்ணாமலை.
 

கடிதங்கள்

ங்கீதாவின் நீண்ட சாகசப் பயணம், பிரம்மாண்டப் பயணம். இந்தியா முழுக்க 165 நகரங்களை தனி ஒருத்தியாக ஒரு பெண் கடப்பது என்றால் சாதாரணமான விஷயமா? சில அனுபவங்கள் மயிர்க்கூச்செறிய வைத்தன. வாழ்த்துகள் சகோதரி.

- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பி
எம்டபிள்யூ பைக்குகள் சூப்பர்தான். ஆனால், என்னைப் போன்ற ட்வின் சிலிண்டர் எதிர்பார்க்கும் பெர்ஃபாமென்ஸ் பார்ட்டிகளுக்கு ஏமாற்றம்தான். கவாஸாகி நின்ஜா 300, அந்தக் குறையைத் தீர்க்கிறது. 3.65 லட்சம் என்பதும் சூப்பர்.

- பாலாஜி ஹெக்டே, அரியலூர்.

ந்த வாரம் பைக் ஸ்பெஷலா? ஏகப்பட்ட பைக் ரைடுகள், செய்திகள். ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர், பார்ப்பதற்கு 650 சிசி பைக் மாதிரி தெரியவில்லை. இருந்தாலும் இதன் ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜினின் பீட்டைக் கேட்க ஆவலாக உள்ளேன்.

- மகேஷ்ராஜன், ஆலந்துறை.

லா
ஞ்ச் ஆவதற்கு முன்பே CR-V-யின் டெஸ்ட் ரிப்போர்ட் கொடுத்து அசத்திவிட்டீர்கள். 7 சீட்டர் என்பதற்காக 30 லட்சம் என்பது, இந்த சின்ன இன்ஜின் கொண்ட எஸ்யூவிக்கு அதிகம்தான். மேலும் எண்டேவர், ஃபார்ச்சூனர்போல் கரடுமுரடாக இல்லாமல், சாஃப்ட் ஆக இருப்பது ரஃப் பிரியர்களுக்குப் பிடிக்குமா?

- பிரவீன் ஜாதவ், கவுண்டாம்பாளையம்.

மி
னி கார் டிரைவ் எக்ஸ்பீரியன்ஸ், பரவசமாக இருந்தது. சில டிரைவிங் டிப்ஸ் பயனுள்ளதாகவும் இருந்தன.

- ராபின்சன், கருங்குழி.

ன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இமெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால்தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.