கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

மாறிடுச்சு ஆஸ்பயர்!

மாறிடுச்சு ஆஸ்பயர்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாறிடுச்சு ஆஸ்பயர்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஃபோர்டு ஆஸ்பயர் ஃபேஸ்லிஃப்ட்

டிசையர், டிகோர் என காம்பேக்ட் செடான்களைக் காலத்துக்கு ஏற்றபடி ஃபேஸ்லிஃப்ட் செய்துவிட்டன மாருதியும் டாடாவும். ஃபோர்டும் அலெர்ட் ஆகவேண்டிய நேரம் இது. ஆகிவிட்டது. ஆம்... மொத்தமாக மாறிவிட்டது ஆஸ்பயர். புது பெட்ரோல் இன்ஜின், புது கியர்பாக்ஸ், புது லுக் என எல்லாவற்றையும் புதுசாக மாற்றிவிட்டது ஃபோர்டு. இந்த காம்பேக்ட் செடானின் 1.2 பெட்ரோல் மற்றும் 1.5 டீசல் இன்ஜின்களில் செல்லமாக ஒரு ரைடு போனேன்.

மாறிடுச்சு ஆஸ்பயர்!

வெளியே

ஆஸ்பயரின் டிரேட்மார்க்கே - இதன் ஆஸ்டன் மார்ட்டின் ஸ்டைல் முன்பக்க டிசைன்தானே! கிரில் மாறிவிட்டது. ஆனால், ஆஸ்ட்டன் மார்ட்டின் ஸ்டைல் மாறிவிடவில்லை. தாடைக்குக் கீழே கறுப்பு மயம். ஹெட்லைட், கிரில் காம்போ ஸ்போர்ட்டியாக இருக்கிறது. மற்றபடி பின்பக்கத்தில் பெரிதாக மாற்றம் இல்லை - பின்பக்க பம்பரைத் தவிர. டாப் வேரியன்ட் ஆஸ்பயரில் 195/55 செக்‌ஷன்கொண்ட 15 இன்ச் வீல்கள், காரை கொஞ்சம் பல்க்கியாகக் காட்டுகின்றன. மல்ட்டி ஸ்போக் அலாய் வீல்கள், க்ளாசிக்காக பாடியுடன் பொருந்துகின்றன.

உள்ளே

டூயல் டோன் கறுப்பு மற்றும் பீஜ் வண்ண இன்டீரியர், காருக்குள் நுழைந்ததும் வரவேற்கிறது. பழைசுக்கும் புதுசுக்கும் பெரிய வித்தியாசம் எதுவென்றால், 6.5 இன்ச் டச் ஸ்க்ரீன்தான். இதில் ஃபோர்டின் ஃபேவரைட்டான SYNC3 சிஸ்டத்துடன் ஆப்பிள் கார்ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் உண்டு. டாப் வேரியன்ட்டான டைட்டானியம் ப்ளஸ்-ல் மட்டும்தான் இந்தக் கவர்ச்சி. ப்ளூடூத் சிஸ்டத்தை இதற்காக இம்ப்ரூவ் செய்திருப்பதாகச் சொல்கிறது ஃபோர்டு. எக்ஸ்ட்ராவாக USB ஸ்லாட்டும் இருந்தது.

மாறிடுச்சு ஆஸ்பயர்!

உற்றுப் பார்த்தால்தான் தெரிந்தது, டயல்களையும் அப்கிரேடு செய்திருப்பது. கார்பன் ஃபைபர் போன்ற டெக்‌ஷரில் பழைய டயல்களைவிட கவர்ச்சியாக இருந்தன டயல்கள். இதில் உள்ள பியானோ கறுப்பு ஏரியாக்கள், பழைய ஆஸ்பயரில் இருந்து எடுக்கப்பட்டவை. மோசமான மெட்டீரியல்கள் எதுவும் தென்படவில்லை. ஆனால், டிசையர் அளவுக்குத் தரம் இல்லாததுபோல் தோன்றியது. அதேபோல் மாருதி கேபினின் இடவசதியும் ஃபோர்டில் இல்லையோ? ஆனால், பிராக்டிக்கலாக இருக்கிறது இன்டீரியர். டோர் பாக்கெட்டுகள், ஆங்காங்கே பாட்டில் ஹோல்டர்கள் இருந்தன. க்ளோவ் பாக்ஸும் பெருசுதான். சீட்களுக்கு இடையில்கூட ஸ்டோரேஜ் ஸ்பேஸ்.

முன்பக்க சீட்கள் அகலமாகவும், சப்போர்ட்டிவ் ஆகவும் இருக்கின்றன. உயரமானவர்களுக்குக்கூட கம்ஃபர்ட் ஆன சீட்டிங் பொசிஷன் கிடைக்கும். உட்கார்ந்து பார்த்தால், வெளிச்சாலை நன்றாகத் தெரிந்தது. குஷனிங்கும் சூப்பர். லெக்ரூமை அளந்து பார்த்தேன். நிச்சயம் வேறு எந்த கார் அளவுக்கும் இல்லை. ஆம், ஆஸ்பயர்தான் இந்த செக்மென்ட்டில் நீளமான வீல்பேஸ்கொண்ட கார். ஆனால், ஷோல்டர் ரூம் மற்றும் ஹெட்ரூம் கொஞ்சம் டைட்தான். 6 அடி மனிதர்களுக்குச் சிக்கலாகத்தான் இருக்கும்.

பெட்ரோல் டிரைவ்

முதலில் புதிய 1.2 லிட்டர் பெட்ரோலை ஸ்டார்ட் செய்தேன். ஃப்ரீஸ்டைலில் இருந்த 3 சிலிண்டர் டிராகன் இன்ஜின். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இருந்தது. 96bhp பவர் என்பது, பெரிய காம்பேக்ட் மேனுவல் செடான் கார்களுக்கு ஓகே ரகம் இல்லை; சூப்பர் ரகம். லோ ரெவ்களில் சூப்பர் ஸ்மூத் ஆக இருந்தது. லான்ச் ஆகும்போது நான்கு சிலிண்டராகத்தான் இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால், இது மூன்று சிலிண்டர் இன்ஜின் என்றால் நம்ப முடியவில்லை.

அதே லோ ஸ்பீடில் புல்லிங் பவரைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. ஃபோர்டு பெட்ரோல் கார்களில் இந்தக் குறை ரொம்ப நாளாகவே இருக்கிறது. (எக்கோஸ்போர்ட் டிராகன் சீரிஸ் வேற லெவல்). அதாவது, போக்குவரத்து நெரிசலில்... 2,000 rpm-க்குக் கீழே... ஒன்று - முதல் கியரில்தான் இருக்க வேண்டும் அல்லது முதல் கியருக்கு மாற ரெடியாக இருக்க வேண்டும். நல்லவேளையாக இதன் கியர்பாக்ஸ், ஷார்ட் கியரிங் செட்-அப்பில் இருந்தது. கிளட்ச்சும் லைட் வெயிட்தான். அதனால், சட் சட் என கியர் மாற்றிக்கொள்ளலாம்.

2,500 rpm-மைத் தாண்டினால் ஆஸ்பயரின் இன்னொரு முகத்தைப் பார்க்கலாம். பவர் டெலிவரி இப்போது செம ஸ்ட்ராங்காக இருந்தது. அதிலும் 3,000 rpm-மை நெருங்கியதும் பவர் டெலிவரியில் ஒரு ஸ்போர்ட்டினெஸ்ஸை உணர்ந்தேன். ஃபன் பார்ட்டிகள் நிமிர்ந்து உட்காரவேண்டிய நேரம் இது. 6,000 rpm வரை புகுந்து விளையாடலாம். நல்லவேளை - ஃபோர்டு தன் பெயரைக் காப்பாற்றிவிட்டது. செம ஃபன் டு டிரைவ் ஆஸ்பயரில் உறுதி. அதாவது இந்த ஃபன், நெடுஞ்சாலைகளில் மட்டும்தான்.
 
டீசல் டிரைவ்


முந்தைய ஆஸ்பயரில் இருந்த அதே 1.5 லிட்டர், 100 bhp டீசல் இன்ஜின். பெரிய மாற்றமெல்லாம் இல்லை. அதனாலேயோ என்னவோ, டர்போ லேக்தான் ஃபோர்டில் கொஞ்சம் படுத்துகிறது. ஆம், 1,500 - 1,700 rpm வரை பவர்ஃபுல் ஆக்ஸிலரேஷன் கொடுக்க வேண்டும். அதேநேரம், ஒரு தடவை ஆக்ஸிலரேட்டரில் முழுவதுமாக கால் வைத்து இறக்கிவிட்டால், ஃபோர்டு டீசல் இன்ஜினின் ஃபன் டு டிரைவை நீங்கள் உணரலாம். பவர் குவிகிறது. 

மாறிடுச்சு ஆஸ்பயர்!

பெட்ரோலைவிட டீசலை ஓட்ட செம த்ரில்லாக இருக்கிறது. ஃபிகோ டீசல் ஓட்டுபவர்களுக்கு இது புரியும். ஆனால், டாப் ஸ்பீடில் இத்தனை அதிர்வுகளா ஃபோர்டு? டீசல் கியர்பாக்ஸும் செம லைட் வெயிட் ஆகப் பயன்படுத்துவதற்கு ஜாலியாக இருக்கிறது. துல்லியமாக விழுகிறது கியர். கிளட்ச் சரியான எடையில் இருக்கிறது. சிட்டி டிராஃபிக்குக்கும் ஃபோர்டு டீசல் அருமையாக இருக்கும்.

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

ரிஸ்க்கான ரோடுகள் எல்லாம் ஃபோர்டைப் பொறுத்தவரை ரஸ்க் சாப்பிடுவது மாதிரி. சஸ்பென்ஷனை அதற்கேற்றபடி வாட்டமாக டியூன் செய்திருக்கிறார்கள். சத்தமில்லாமல் ஸ்மூத்தாக தன் வேலையைச் செய்கிறது சஸ்பென்ஷன். கூடவே எலெக்ட்ரிக்கல் லைட் வெயிட் ஸ்டீயரிங் வேறு. அற்புதமாக இருக்கிறது ஹேண்ட்லிங். உடைந்த சாலைகளைக் கடக்கும் போது மட்டும் கேபினுக்குள் அந்த அதிர்வு தெரிகிறது. ஹைஸ்பீடு ஸ்டெபிலிட்டி ஆஸ்பயரில் சூப்பர். ஜிவ்வெனப் பறக்கிறது ஆஸ்பயர். சில கார்னரிங்கில் மட்டும் பாடி ரோலைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஏபிஎஸ் பிரேக்ஸ் செம ஷார்ப். தன்னம்பிக்கையோடு பறக்கலாம்.

புது ஆஸ்பயர் ஓகேவா?

ஃப்ரெஷ்ஷாக செம அப்பீலோடு வந்திருக்கும் ஆஸ்பயரின் ப்ளஸ், பார்த்தவுடன் எல்லோருக்குமே பிடித்து விடும் டிசைன்தான். கேபினையும் அற்புதமாக அப்டேட் செய்திருக்கிறார்கள். கியர்பாக்ஸ், கிளட்ச்சும் லைட் வெயிட்டாக, ஓட்டுவதற்கு உற்சாகம் கொடுக்கிறது. பெட்ரோல் இன்ஜின், சிட்டி டிராஃபிக்கில் கொஞ்சம் சுமார்தான். ஆனால், ஹைவேஸில் செம ஃபன். டீசலில் டர்போ லேக் தவிர்த்து விட்டுப் பார்த்தால், இத்தனை ஸ்ட்ராங்கான பர்ஃபாமென், இந்த செக்மென்ட்டில் இருந்ததாக ஞாபகம் இல்லை. 6 முதல் 10 லட்சம் ரூபாய்க்குள் பிராக்டிக்கலான, ஓட்டுவதற்கு ஃபன்னான கார் வேண்டும் என்பவர்கள், ஆஸ்பயரை டெஸ்ட் டிரைவ் செய்யலாம்.

தமிழ்