கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

இசுஸூ MU-X ஃபேஸ்லிஃப்ட் - புதுசில் என்ன புதுசு?

இசுஸூ MU-X ஃபேஸ்லிஃப்ட் - புதுசில் என்ன புதுசு?
பிரீமியம் ஸ்டோரி
News
இசுஸூ MU-X ஃபேஸ்லிஃப்ட் - புதுசில் என்ன புதுசு?

ஃபர்ஸ்ட் லுக் - இசுஸூ MU-X ஃபேஸ்லிஃப்ட்

ர்வதேசச் சந்தையில் விற்பனைக்கு  வந்து ஒன்றரை ஆண்டு கழித்து, நம் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கிறது இசுஸூவின் MU-X ஃபேஸ்லிஃப்ட். 26.23-28.19 லட்சம் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை. இந்த செக்மென்ட்டின் ஜாம்பவான்களான ஃபோர்டு எண்டேவர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் இரண்டையும்விட விலை குறைவு. சரி, புது MU-X எஸ்யூவியில் என்ன புதுசு?

இசுஸூ MU-X ஃபேஸ்லிஃப்ட் - புதுசில் என்ன புதுசு?
இசுஸூ MU-X ஃபேஸ்லிஃப்ட் - புதுசில் என்ன புதுசு?

வெளியே

பழைய காரை ஒப்பிடும்போது, புது காரின் முகத்தில் கொஞ்சம் சதை கூடி ‘கொழுக் மொழுக்’ எனக் காட்சியளிக்கிறது. அந்த மொழுக் முகத்தில் கோபமாகப் பார்ப்பதுபோல இருக்கும் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்-DRL மற்றும் செங்குத்தான கிரில்லும் உள்ளன. முன்பக்க பம்பரில் ஏர் டேம் பெரிதாகிவிட்டது. பனி விளக்கைச் சுற்றி கறுப்பு நிற ஹவுஸிங் உள்ளன. 17-இன்ச் அலாய் வீல்கள் இப்போது 18 இன்ச்சாக மாறிவிட்டன. பின்பக்கம் LED டெயில் லைட், புது பம்பர், டூயல் டோன் ஃபினிஷ்கொண்ட ஸ்பாய்லர் மற்றும் Shark Fin Antenna புது வரவுகள்.

இசுஸூ MU-X ஃபேஸ்லிஃப்ட் - புதுசில் என்ன புதுசு?

உள்ளே

வெளியே கொடுத்த மாற்றங்களைப் போலவே உள்ளேயும் சில மாற்றங்கள் உள்ளன. கேபினின் லே-அவுட்டில் எந்த மாற்றமும் இல்லை. பவர்டு டிரைவர் சீட், க்ரூஸ் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்டோரேஜ் ஸ்பேஸ், ரிவர்ஸ் கேமரா, மூன்று வரிசைக்கும் ரூஃப் மவுண்டட் ஏசி போன்ற வசதிகள் இருக்கின்றன. சாஃப்ட் டச் ப்ளாஸ்டிக் மற்றும் குவில்ட்டட் சீட் டிசைன் கொடுத்துள்ளார்கள். சென்டர் கன்சோலில் சில்வர் வேலைப்பாடுகள் புதுவரவு. மூன்று USB சார்ஜிங் போர்ட்டுகள் இருக்கின்றன. இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. பழைய காரில் இருக்கும் அதே 4JJ1 சீரிஸ் 3.0 லிட்டர் Ddi VGS டீசல் இன்ஜின் மற்றும் 5 ஸ்பீடு Sequential Shift ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணிதான். இந்த இன்ஜின் 177bhp பவரையும் 38kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

பாதுகாப்பு

பெரிய அப்டேட் என்றால், அது பாதுகாப்பு அம்சங்கள்தான். முந்தைய காரில் இரண்டு காற்றுப்பைகள் மட்டுமே! புது காரில் மொத்தம் ஆறு காற்றுப்பைகள். ABS, ECS, EBD, எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற வசதிகளும் இப்போது ஸ்டாண்டர்ட்.

முந்தைய மாடலுக்குக் கொடுக்கப்பட்டு வந்த 5 வருட வாரன்ட்டி மற்றும் 5 வருடம்/1.5 லட்சம் கி.மீ இலவச Periodic மெயின்டனன்ஸ் திட்டம் புதிய மாடலுக்கு வருகிறது.

ரஞ்சித் ரூஸோ