கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

நிஸானின் கிக் ஸ்டார்ட்டர்!

நிஸானின் கிக் ஸ்டார்ட்டர்!
பிரீமியம் ஸ்டோரி
News
நிஸானின் கிக் ஸ்டார்ட்டர்!

ஃபர்ஸ்ட் லுக் - நிஸான் கிக்ஸ்

சில மாதத்துக்கு முன்புதான், இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போகும் கிக்ஸ் காரின் டிசைன் ஸ்கெட்ச்சை நிஸான், சில மாதங்களுக்கு முன்புதான் வெளியிட்டது. சான்ட்ரோவின் டிசைன் ஸ்கெட்ச்சுக்கு அடுத்தபடியாக, டிரெண்டிங்கில் இருந்த டிசைன் ஸ்கெட்ச் இதுதான். இந்தச் சூழ்நிலையில்தான், கிக்ஸ் நேரில் பார்க்க எப்படி இருக்கும் என்பதை, ஆட்டோமொபைல் பத்திரிகையாளர்களிடம் பிரத்யேகமாகக் காட்டியது நிஸான். விழா மேடையில் இருந்த காரின் கண்ணாடிகள், கறுப்பு ஸ்டிக்கரால் மூடப்பட்டிருந்தன என்பதால், கேபின் எப்படியிருக்கும் என்பது மூடுமந்திரமாகவே இருக்கிறது. டெரானோ உற்பத்தி நிறுத்தப்படலாம் என்பதால், அதற்கு மாற்றாக கிக்ஸ் இந்தியாவில் பொசிஷன் செய்யப்படலாம்.

நிஸானின் கிக் ஸ்டார்ட்டர்!

டிசைன் மற்றும் வசதிகள்

லேட்டஸ்ட் நிஸான் கார்களுக்கே உரித்தான V-Motion கிரில்லுடன், சர்வதேச மாடலை நினைவுப்படுத்தும்படியே இந்திய கிக்ஸ் இருக்கிறது. LED ஹெட்லைட், LED டெயில்லைட், பூமராங் பாணி LED DRL என கிக்ஸின் விளக்குகள் எல்லாமே LED மயம். பெரிய வீல் ஆர்ச், கறுப்பு நிற A-B-C பில்லர்கள், Floating ரூஃப், ரூஃப் ரெயில், 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், Contrast ஆரஞ்சு நிற ரூஃப், கதவுகளில் ஷார்ப்பான பாடிலைன் என இரண்டுக்கும் டிசைனில் ஏகப்பட்ட ஒற்றுமைகள். எனினும்  காரைக் கவனிக்கும்போது வித்தியாசங்கள் புலப்படுகின்றன.

முன்பக்கத்தில் அகலமான Faux ஏர் இன்லெட்க்குக் கீழே இருக்கும் பனிவிளக்குகள், அலுமினியத்தால் ஆன Skid பிளேட், கிரில்லின் Mesh Pattern ஃபினிஷ் செய்யப்பட்ட விதம், டெயில்கேட்டில் இருக்கும் க்ரோம் பட்டை, காரின் வலதுபுறத்தில் இருக்கும் பெட்ரோல் டேங்க் மூடி ஆகியவற்றை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். புதிய மைக்ராவின் லேட்டஸ்ட் வெர்ஷன் V-ப்ளாட்ஃபார்மில்தான், சர்வதேச கிக்ஸ் தயாரிக்கப்படுகிறது. ஆனால் ரெனோ கேப்ச்சர் தயாரிக்கப்படும் லேட்டஸ்ட் MO பிளாட்ஃபார்மில்தான், இந்தியாவுக்கான கிக்ஸ் தயாரிக்கப்பட இருக்கிறது.  

நிஸானின் கிக் ஸ்டார்ட்டர்!

பிளாட்ஃபார்மில் கோட்டைவிட்டதை, காரின் அளவுகளில் சரி செய்திருக்கிறது நிஸான். ஆம், சர்வதேச மாடலைவிட இந்திய கிக்ஸ் பெரிதாக இருக்கிறது. காரின்அளவுகள் (நீளம்-4,384மிமீ, அகலம்-1,813மிமீ, உயரம்-1,656மிமீ) இதை உறுதிப்படுத்துகின்றன. கேப்ச்சர் மற்றும் இந்திய கிக்ஸ் இடையே உள்ள ஒற்றுமை, பிளாட்ஃபார்மைத் தாண்டியும் நீள்கிறது. அதாவது 2,673 மிமீ வீல்பேஸ் என்பது, முன்னே சொன்ன இரு கார்களுக்கும் பொருந்தும்! தவிர கேப்ச்சருக்குச் சமமான கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருக்கிறது இந்திய கிக்ஸ் (210மிமீ).

சர்வதேச மாடலின் 432 லிட்டர் பூட் ஸ்பேஸைவிட இங்கே இடவசதி அதிகமாக இருக்கலாம். Shark Fin Antenna உடனான மாடர்ன் க்ராஸ்ஓவர் டிசைனைத் தாண்டி, ஸ்டைலான கலர் காம்பினேஷன் (பாடி கலர் மற்றும் ரூஃப்), ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி என கேபின், தற்போதைய நிஸான் கார்களைவிட அசத்தலாக இருக்கலாம். விழா மேடையில் நாம் பார்த்த காரில், 360 டிகிரி கேமரா வசதி இருந்தது. போட்டி கார்களில் இருக்கும் கேமராவைவிட இது ஒரு படி மேலே!

இன்ஜின் - கியர்பாக்ஸ்


டஸ்ட்டர், டெரானோ, கேப்ச்சர் என ரெனோ - நிஸான் குழும கார்களில் இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்தான் கிக்ஸிலும் வரும். பெட்ரோல் இன்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்/CVT ஆப்ஷன் என்றால், டீசல் இன்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருக்கலாம். Badge Engineering செய்யப்பட்ட தயாரிப்பாக இருப்பினும், டஸ்ட்டரைவிட நிஸான் டெரானோவின்  விலை மிகவும் அதிகமாக இருந்தது. விலையே அந்த காருக்கு எதிரியாக அமைந்ததால், கிக்ஸ் காரின் விலை விஷயத்தில் நிஸான் கவனமாகவே இருக்கும். உள்நாட்டு உற்பத்தி மற்றும் உதிரிபாகங்கள் அதற்குக் கைகொடுக்கும். எனவே, க்ரெட்டா - எஸ்-க்ராஸ் - BR-V ஆகிய கார்களுக்குப் போட்டியாக வரப்போகும் கிக்ஸ், 10 - 15 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், நிஸானின் புத்தாண்டுப் பரிசாக அறிமுகமாகலாம்.

ராகுல் சிவகுரு