கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு... www.vikatan.com

மோட்டார் நியூஸ்

BS-4 வாகனங்களுக்கு கிரேஸ் பீரியட் கிடையாது!

ப்ரல் 2020-க்கு மேல் BS IV வாகனங்களை விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோ கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஏப்ரல் 2020 வரை வாகனங்களை உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால், மார்ச் 2020 இறுதியில் தயாரிக்கும் வாகனங்களை விற்பனை செய்யவும், பதிவு செய்யவும் நேரம் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. ``இந்தியாவில் காற்று மாசு அபாயகரமான நிலையில் உள்ளது. இதைக் குறைக்கவே BS-VI வாகனங்களைக் கொண்டுவருகிறோம். பணத்தைவிட உடல் ஆரோக்கியத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதனால் ஏப்ரல் 1, 2020 முதல் BSIV வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்யக்கூடாது`` என்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்

ராஸிக்குப் பக்கத்துல..!

ப்பானின் மோடிகி சர்க்யூட்டில் ஹோண்டா அணியின் மார்க் மார்க்கஸ், தனது 7-வது மோட்டோ ஜீபி சாம்பியன்ஷிப் வெற்றியைப் பெற்றிருக்கிறார். 17 வயதில் மோட்டோ 3 போட்டியில் 125cc டெர்பி RSA பைக்கில், தனது முதல் சாம்பியன்ஷிப் வெற்றியைப் பெற்றார். அதைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு 600cc பைக்கில் மோட்டோ 2 சாம்பியன்ஷிப்! 2013-ம் ஆண்டு மோட்டோ ஜீபியில் அடியெடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே மோட்டோ ஜீபி சாம்பியன். உலகிலேயே இளம் வயது மோட்டோ ஜீபி சாம்பியன் என்ற சாதனை, 2014, 2016, 2017, 2018 எனத் தொடர்ந்து மோட்டோ ஜீபி-யில் சாம்பியன்ஷிப் பட்டங்களைக் குவித்துவருகிறார் மார்க்கஸ். #Level7 அடைந்திருக்கும் மார்க் மார்க்கஸ், இன்னும் 2 சீஸனில் வென்றால், தனது இன்ஸ்பிரேஷனான வாலன்ட்டினோ ராஸியின் சாதனையைச் சமன் செய்துவிடுவார்!

மோட்டார் நியூஸ்

5 ஆண்டுகளுக்குப் பிறகு அசத்தல் வெற்றி!

னது ஃபார்முலா-1 ரேஸிங் கெரியரில், ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் கிமி ராய்க்கோனன். கடந்த 21-ம் தேதி, அமெரிக்காவின் ஆஸ்டின் சர்க்யூட்டில் நடந்த போட்டியில் முதல் இடத்தில் வென்றிருக்கிறார் கிமி. ஃபெராரியின் செபாஸ்டின் வெட்டலைவிட 8 பாயின்ட்டுகள் அதிகம் கிடைத்தால் சாம்பியின்ஷிப் வென்றுவிடலாம் என்ற நிலையில், ஹாமில்ட்டனின் ஃபேவரைட்டான சர்க்யூட்டிலேயே அவரை வீழ்த்தியுள்ளார் கிமி ராய்க்கோனன். வெட்டல் இருந்தவரைக்கும் அவரை மீறி யாரும் போடியம் ஏறிவிட முடியவில்லை. அதை முறியடித்த முதல் ஃபெராரி ரேஸரும் கிமி ராய்க்கோனன்தான். அடுத்த ஆண்டு சாபர் டீமுக்காகப் போட்டிபோடவிருக்கும் கிமி ராய்க்கோனன், தனது ரேஸிங் கெரியர் இன்னும் முடியவில்லை என உணர்த்தியிருக்கிறார்.