கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

புது டட்ஸன் என்ன சொல்லுது?

புது டட்ஸன் என்ன சொல்லுது?
பிரீமியம் ஸ்டோரி
News
புது டட்ஸன் என்ன சொல்லுது?

ஃபர்ஸ்ட் டிரைவ் - டட்ஸன் கோ & கோ ப்ளஸ்

சின்னச் சின்ன மாற்றங்கள்தான்; ஆனால் அது காரை முற்றிலும் புதிய காராக மாற்றிவிட்டது. டட்ஸன் ரெடி கோவுக்குக் கிடைத்த வரவேற்பில் இருந்து, டட்ஸன் ஒரு சூத்திரத்தை நன்றாகப் புரிந்து கொண்டது. ‘பார்ப்பதற்கு ட்ரெண்டி யாகவும், நிறைவான சிறப்பு அம்சங்கள் கொண்டதாகவும் ஒரு கார் இருந்தால், அது ஹிட் அடிக்கும்’ என்பதுதான் அந்தச் சூத்திரம்.  அந்த  ஃபார்முலாவை கோவுக்கும் கோ ப்ளஸ்-க்கும் இப்போது அப்ளை செய்து பார்த்திருக்கிறது டட்ஸன். காரணம் - தோற்றத்திலும் சரி, விற்பனையிலும் சரி, 2014-ம் ஆண்டு அறிமுகமான காலம் தொட்டு இன்றுவரை டட்ஸன் கோ அப்படியே தான் இருக்கிறது. 2015-ம் ஆண்டு அறிமுகமான டட்ஸன் ரெடி கோ ப்ளஸ்ஸும் ‘மாற்றம் முன்னேற்றம்’ என்று எதுவுமே இல்லாமல் இத்தனை வருடங்களாக அப்படியேதான் இருந்தது.

புது டட்ஸன் என்ன சொல்லுது?

காம்பேக்ட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டையே மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட டட்ஸன் கோவின் ஃபேஸ்லிஃப்ட் இப்போது அறிமுகமாகியிருக்கிறது. கூடவே கோ ப்ளஸ் பேஸ்லிஃப்ட்டும். வெளிப்புறத் தோற்றம், கேபின் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் இந்த இரண்டு கார்களுமே முதல் பார்வையிலேயே ‘அட' போட வைக்கின்றன. பழைய கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களைப் பொறுத்தவரை பாதுகாப்பு அம்சங்கள் என்பது கேள்விக்குறியாகவே இருந்தன. காரணம், குளோபல் NCAP க்ராஷ் டெஸ்டில் டட்ஸன் கோ, ஜீரோ ரேட்டிங் வாங்கியிருந்தது. அது மட்டுமல்ல; ஸ்டாண்டர்டாக ஒரே ஒரு காற்றுப்பைகூட அப்போது வழங்கப்படவில்லை. காசு கொடுத்தால்கூட டிரைவர் சீட்டுக்கு மட்டும்தான் காற்றுப்பை பொருத்த முடியும். இந்த இமேஜில் இருந்து வெளியே வரவேண்டும் என்ற எண்ணத்தில் கோவுக்கு இப்போது இரட்டைக் காற்றுப்பைகள், ABS, EBD, பிரேக் அசிஸ்ட் ஆகிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த முறை NCAP க்ராஷ் டெஸ்ட்டில் பாஸ் ஆகிவிடும் நம்பிக்கையோடு இருக்கிறது டட்ஸன்.

வெளித்தோற்றம்

முன்பு உற்பத்தி செய்யப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் டட்ஸன் கோ இப்போது தயாரிக்கப்படுகிறது. அதனால் அகல நீள உயரங்களில் பெரிதாக மாற்றங்கள் செய்ய முடியாது.  ஆனால் கார் ‘பளிச்’சென்று விளக்கி வைத்த மாதிரி புதிய தோற்றத்தில் ஃப்ரெஷ்ஷாகக் காட்சியளிக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட இந்த டட்ஸன் கோ - உயரத்தில் 3 மி.மீட்டரும், அகலத்தில் 1 மி.மீயும், உயரத்தில் 17 மி.மீயும்தான் வளர்ந்திருக்கிறது. இதன் வீல் பேஸ் 2450 மி.மீதான் என்றாலும், கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மி.மீ-ஆக உயர்ந்திருப்பதால் இப்போது சீட்டுகள் சற்றே உயர்ந்திருக்கின்றன. 13 இன்ச்சாக இருந்த வீல்கள், இப்போது 14 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்களாக மாறியிருப்பதால், கார் முன்பைவிட கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. அலாய் வீல் T (O)  வேரியன்ட்டுக்கு மட்டுமே!  ரியர் வைப்பரும் உண்டு. ஆனால் அதுவும் டாப் வேரியன்ட்டில்தான். அதேபோல ரூஃப் ரெயில்ஸும் காருக்குக் கம்பீரம் சேர்க்கின்றன. ஆனால் இது அழகுக்கு மட்டுமே; காரில் கயிறெல்லாம் கட்ட முடியாது.

புது டட்ஸன் என்ன சொல்லுது?

கிரில் அதே டிசைனில் இருந்தாலும், அது பெரிதாகியிருக்கிறது. கிரில்லைச் சுற்றிலும் இருக்கும் க்ரோம், காரின் முகப்புக்குப் புதிய முகத்தைக் கொடுக்கிறது. முன் பக்க பம்பர், ஸ்வெப்ட் பேக் ஹெட்லாம்ப், அழுத்தமான க்ரீஸ் கோடுகள், LED DRL ஆகியவை புதுத்தோற்றத்தைக் கொடுக்கின்றன. ஆனால் LED DRL என்பது டாப் வேரியன்ட்டுக்கு மட்டுமே. காரின் பின்பகுதியைப் பொறுத்தவரை, சற்றே வளைந்திருக்கும் டெயில்கேட், புதிய ரியர் பம்பர், ராப்-அரவுண்ட் டெய்ல் லாம்ப் ஆகியவை பளிச்சென்று கண்களைக் கவர்கின்றன. அனைத்துக்கும் மேலாக டட்ஸன் கோவின் புதிய ஸ்பெஷல் கலரான ‘அம்பர் ஆரஞ்ச்', காருக்கு இளரத்தம் பாய்ச்சுகிறது.
 
உள்ளங்காரம்

காரின் உள்ளேயும் ஏராளமான மாற்றங்கள். டேஷ்போர்டு மாறியிருக்கிறது. சீட்டுகள் மாறியிருக்கின்றன. முன் வரிசையில் இருந்த சிங்கிள் சீட்டுக்கு மாற்றாக டிரைவருக்குத் தனி, பக்கத்துப் பயணிக்குத் தனி என்று தனித்தனி சீட்டுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால் முன்பிருந்த ‘புல் டைப்’ ஹேண்ட் பிரேக்குக்கு மாற்றாக வழக்கமான ஹேண்ட் பிரேக் கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால் ஸ்டீயரிங் வீலையோ அல்லது டிரைவர் சீட் உயரத்தையோ அட்ஜஸ்ட் செய்ய இயலாது. அதேசமயம், ஜன்னல் கண்ணாடியைத் திறக்காமலேயே டிரைவர் சீட்டில் இருப்பவரால் அவுட்டர் ரியர்வியூ மிரரை அட்ஜஸ்ட் செய்ய முடியும். அதேபோல எல்லா கதவுக் கண்ணாடிகளுக்குமான கன்ட்ரோலும் இப்போது டிரைவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த டிஜிட்டல் டேக்கோ மீட்டருக்குப் பதிலாக இப்போது அனலாக் - டேக்கோ மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது.

புது டட்ஸன் என்ன சொல்லுது?

இந்த காரில் கூடுதல் கவனம் பெறுவது - 7 இன்ச் டச் ஸ்கீரின் உடன் கூடிய இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம்.  ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. க்ளோவ் பாக்ஸுக்கு இப்போது மூடி கிடைத்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம். 265 லிட்டர் கொள்ளவு கொண்ட டிக்கிக்கு இன்னமும் பார்சல் ட்ரே இல்லை. பின்னிருக்கைகளில் வழக்கம்போல தாராளமாக இடம் இருக்கிறது. ஆனால், தட்டையாக இருக்கும் சீட், அட்ஜஸ்ட் செய்ய முடியாத ஹெட் ரெஸ்ட் ஆகியவை மாறவில்லை.

இன்ஜின் 

டட்ஸன் கோவில் இருப்பது, 3 சிலிண்டர் கொண்ட அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான். இது 68 bhp சக்தியையும், 10.4kgm டார்க்கையும் கொடுக்கிறது. இது இந்த செக்மென்ட் காருக்கு ஓகேதான். 2,000 rpm தாண்டும்வரை காரின் பெர்ஃபாமென்ஸ் சற்று மந்தமாக இருந்தாலும், அதன் பிறகு பெப்பியாக இருக்கிறது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஸ்மூத்தாக இருந்திருக்கலாம். 

புது டட்ஸன் என்ன சொல்லுது?

ஹைவேயில் வேகமாகச் செல்வதற்கான கார் இது இல்லை. 80 கி.மீ வேகத்தைத் தாண்டினால் கார் பீப் ஒலி எழுப்புகிறது. கூடிய விரைவில் இது சட்டப்படி கட்டாயமாகவும் இருக்கிறது என்பதால், இதைப் பற்றி குறைப்பட்டுக் கொள்ள முடியாது. இதன் குறைவான எடை (846 கிலோ)  காரணமாக நெடுஞ்சாலைகளில்  வேகமாகச் செல்லும்போது கார் சற்றே தடுமாறுகிறது. ஆனால் ABS பிரேக்ஸ், காரை விரட்டி ஓட்டுவதற்கான நம்பிக்கையைக் கொடுக்கிறது. ஓட்டுதல் தரம் பெரும்பாலான நேரங்களில் நன்றாகவே இருக்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ என்பதால், ஸ்பீட் பிரேக்கர்கள் பற்றி அஞ்சத் தேவையில்லை.

புது டட்ஸன் என்ன சொல்லுது?

ஐந்து வேரியன்ட்களில் வந்திருக்கும் டட்ஸன் கோவின் பேஸ் வேரியன்ட்டும், அதற்கு அடுத்திருக்கும் வேரியன்ட்டும் பழைய காரின் விலையிலேயே கிடைக்கிறது. டச் ஸ்க்ரீன் கொண்ட டாப் வேரியன்ட்டின் விலையும் ஓகேதான். 

முதல் தீர்ப்பு

முந்தைய டட்ஸன் கோவைக் காட்டிலும், இப்போது வந்திருக்கும் டட்ஸன் கோ நிறைய முன்னேற்றம் கண்டிருக்கிறது. டாடா டியாகோ, வேகன்-ஆர், புதிதாக வந்திருக்கும் சான்ட்ரோ ஆகிய கார்களோடு வாடிக்கையாளர்கள் இனி டட்ஸன் கோவையும் நிச்சயம் ஒப்பிட்டுப் பார்த்துத்தான் ஒரு முடிவெடுப்பார்கள்.

வேல்ஸ் படங்கள்: ப.சரவணகுமார்

புது டட்ஸன் என்ன சொல்லுது?

ட்ஸன் கோவைப் போலவே, கோ ப்ளஸ் காரும் வெளித்தோற்றத்திலும் உள்ளலங்காரத்திலும் நிறைய மாற்றங்களைக் கண்டிருக்கிறது. ABS, காற்றுப்பைகள் எனப் பாதுகாப்பு அம்சங்களும் கூடியிருக்கின்றன. டட்ஸன் கோ போன்றுதான் கோ ப்ளஸ்ஸின் டேஷ்போர்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கோ ப்ளஸ்ஸில் டூயல் டோன் ஃப்னிஷ் செய்திருக்கிறார்கள்.

கோ ப்ளஸ் காரை டட்ஸன், மினி MPV-ஆகத்தான் பொசிஷன் செய்கிறது. ஆனால் இதன் மூன்றாவது வரிசை என்பது சிறுவர்களுக்குக்கூட ஏற்றதாக இல்லை. மூன்றாவது வரிசையில் உட்கார்பவர்களுக்கு ஹெட்ரெஸ்ட் இல்லை. அது மட்டுமல்ல; இந்த சீட்டில் உட்கார்ந்தால் பின்னால் இருக்கும் ரியர் விண்ட் ஷீல்டு, தலையில் இடிக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இது எல்லாவற்றையும் விட, மூன்றாவது வரிசை சீட்டுக்குப் போவது என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.