கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

C-க்ளாஸில் - சூப்பர் க்ளாஸ்!

C-க்ளாஸில் - சூப்பர் க்ளாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
C-க்ளாஸில் - சூப்பர் க்ளாஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மெர்சிடீஸ் பென்ஸ் C220d

னது C-க்ளாஸ் காரின் பேஸ்லிஃப்ட் மாடலைத் தடாலடியாகக் களமிறக்கியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். எதிர்பார்த்தபடியே சின்னச் சின்ன டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதலாக சில வசதிகள் இருந்தாலும், மிக முக்கிய மாற்றம் காரின் பானெட்டுக்குக் கீழே நிகழ்ந்திருக்கிறது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், BS-VI மாசு விதிகளுக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. விலை குறைவான C220d வேரியன்ட்டில் இதே இன்ஜின் 194bhp/40kgm வெளிப்படுத்தினால், விலை அதிகமான 300d வேரியன்ட்டில் இது வெளிப்படுத்துவதோ 245bhp/51kgn! எனவே, இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெறப்போகும் C220d பற்றி இங்கே பார்ப்போம். 

C-க்ளாஸில் - சூப்பர் க்ளாஸ்!

லேட்டஸ்ட் OM654 சீரிஸ் டீசல் இன்ஜினான இது, ஏற்கெனவே நாம் E-க்ளாஸ் செடானில் பார்த்ததுதான். என்றாலும், C-க்ளாஸில் Diesel Particulate Filter (DPF), Selective Catalytic Reduction (SCR), AdBlue டேங்க் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதனால் ஏப்ரல் 2020-ம் ஆண்டில் நாடெங்கும் அமலுக்கு வரவிருக்கும் BS-VI மாசு விதிகளுக்கு இந்த இன்ஜின் உட்படுகிறது என்றாலும், தற்போதைய BS-IV எரிபொருளிலும் இந்த கார் சிக்கலின்றி ஓடும் என்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். E-க்ளாஸ் காரிலும் இது பொருத்தப்படும் எனத் தெரிகிறது.

சரி, புதிய இன்ஜின் எப்படி இருக்கிறது?

முந்தைய C220d மாடலில் இருந்த 2.1 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினுடன் ஒப்பிடும்போது, புதிய 2.0 லிட்டர் இன்ஜின் சத்தமின்றி ஸ்மூத்தாக இயங்குகிறது.  முந்தைய C220d மாடலைவிட புதியது கூடுதலாக 24bhp பவரை வெளிப்படுத்துகிறது. டர்போ லேக்கும் குறைந்திருக்கிறது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் துல்லியம். முன்பு இருந்த C220d மாடலைவிட புதிய கார், 0 - 100கிமீ வேகத்தில் கொஞ்சம் பின்தங்கினாலும் (C250d - 7.89 விநாடி; C220d - 8.08 விநாடி), கியர்களுக்கு இடையேயான வேகத்தில் இது 1 விநாடி விரைவாகச் செயல்படுகிறது.

C-க்ளாஸில் - சூப்பர் க்ளாஸ்!

C220d வேரியன்ட்டில் 16 இன்ச் அல்லது 17 இன்ச் வீல்கள் என இரு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. சஸ்பென்ஷன் செட்-அப் இறுக்கமாகவே இருந்தாலும், வீல் ஆப்ஷன்களால் அந்தக் குறைபாட்டை ஓரளவுக்குக் களைய முடியும். அதிக வேகத்தில் செல்லும்போது காரின் நிலைத்தன்மை அசத்தலாக இருக்கிறது.

முந்தைய மாடலைப்போலவே, அதில் குறைகளாக இருந்த பின்பக்க இடவசதி மற்றும் பூட் ஸ்பேஸ் ஆகியவை இங்கும் தொடர்கின்றன. LED ஹெட்லைட்ஸ், சன்ரூஃப், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 காற்றுப்பைகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஸ்டாண்டர்டாக இருக்கின்றன.

C-க்ளாஸ் மாடலிலேயே C220d காரை ஆல்ரவுண்டர் என்று சொல்லலாம்!

தொகுப்பு: ராகுல் சிவகுரு