கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

இது எலெக்ட்ரிக் காருக்கும் மேல...

இது எலெக்ட்ரிக் காருக்கும் மேல...
பிரீமியம் ஸ்டோரி
News
இது எலெக்ட்ரிக் காருக்கும் மேல...

தொழில்நுட்பம் - ஃப்யூல் செல் கார்கள்

ஹைபிரிட்/எலெக்ட்ரிக் கார்களுக்கு அடுத்தபடியாக, இப்போது சுற்றுச்சூழலுக்கு நண்பனாக வரத் தொடங்கியிருக்கின்றன ஃப்யூல் செல் கார்கள்.

அப்படின்னா?

இது எலெக்ட்ரிக் காருக்கும் மேல...

இதுவும் ஒருவகையில் எலெக்ட்ரிக் கார் மாதிரிதான்.  வழக்கமான கார்கள் வெளியிடும் நச்சுப்புகையுடன் ஒப்பிடும் போது, இவை தண்ணீரை மட்டுமே வெளியே உமிழ்கின்றன.

ஃப்யூல் செல்லில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஒன்றுசேர்வதால், அளவில்லா மின்சக்தி உற்பத்தியாகிறது. கூடவே H2O-வும்தான். அட தண்ணீர்தான் பாஸ்!

உதாரணத்துக்கு, ஒரு கார் பேட்டரி இருக்கிறது. இதில் இருக்கும் இரண்டு பிளேட்கள் (Positive & Negative Terminals), `Electrolyte’ எனப்படும் ஸ்பெஷலான ஆசிட்டில் மூழ்க வைக்கப்பட்டிருக்கும். வாகனத்தில் இருக்கும் மோட்டாருக்கு சக்தி தேவைப்படும் பட்சத்தில், Electrolyte-கள் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ion-களை வெளியிடத் தொடங்கும். 

இது எலெக்ட்ரிக் காருக்கும் மேல...

அப்போது பாசிட்டிவ் பிளேட்டில் நெகட்டிவ் ion-ம், நெகட்டிவ் பிளேட்டில் பாசிட்டிவ் ion-ம் இடம்பெறும். இதனால் ஏற்படும் வினையால், மோட்டார் இயங்குவதற்கான மின்சக்தி கிடைக்கும். நாள் ஆக ஆக பேட்டரியில் Electrolyte-ன் அளவு குறைந்துகொண்டே வரும். அந்த ஸ்பெஷல் ஆசிட்டின் அளவு முழுமையாகத் தீரும்போதுதான், `பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துபோச்சு’ எனக் கையை விரிக்கிறோம்.

ஃப்யூல் செல்லும், கார் பேட்டரி போலவேதான். டேங்க்கில் இருக்கும் ஹைட்ரஜனுடன், காற்றிலிருந்து கிடைக்கக்கூடிய ஆக்ஸிஜன் சேரும்போது... மின்சக்தி மற்றும் தண்ணீரை அது உற்பத்தி செய்கிறது.

ஃப்யூல் செல் விஷயத்தில் சில சிக்கல்களும் உண்டு. முதல் விஷயம் - அதிக விலை. ஏனென்றால், இதில் ‘Electrolyte’-ஆகப் பயன்படுத்தப்படும் பிளாட்டினம் ரொம்ப காஸ்ட்லி! பெரிய ஹைட்ரஜன் டேங்க்கை காரில் வைத்துவிட்டால், பயணிகள் மற்றும் அவர்களின் பொருள்களுக்கான இடம் எங்கே இருக்கும்? ஒருவேளை, விபத்து நேர்ந்தால் அதிக அழுத்தத்தில் இருக்கும் ஹைட்ரஜன் வெடித்து விடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. எலெக்ட்ரிக் கார்களுக்கு எப்படி சார்ஜிங் ஸ்டேஷன்கள் அவசியமோ, அதேபோல ஃப்யூல் செல் கார்களுக்கு ஹைட்ரஜன் ஸ்டேஷன்கள் அத்தியாவசியம்.

சிக்கல்கள் பல இருந்தாலும், உலகளாவிய ஒரு பாசிட்டிவ் விஷயம் ஃப்யூல் செல்லில் பொதிந்து கிடக்கிறது. பெட்ரோல்/டீசல், தண்ணீர், உணவு விஷயத்தில்  என்றாவது ஒரு நாள் தட்டுப்பாடு வரும். ஆனால்,  மின்சாரத்துக்கு மட்டும் இருக்காது. ஏனெனில், உலகளவில் ஹைட்ரஜன் ஏராளமாகக் கொட்டிக் கிடப்பதால், இதிலிருந்து தங்குதடையற்ற மின்சக்தியைப் பெற முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

ராகுல் சிவகுரு

இது எலெக்ட்ரிக் காருக்கும் மேல...

புகைக்குப் பதில் தண்ணீர்...

இது எலெக்ட்ரிக் காருக்கும் மேல...

ஃப்யூல் செல் கார்கள்: ஹோண்டா FCX க்ளாரிட்டி, டொயோட்டா Mirai, ஹூண்டாய் டூஸான், ஹூண்டாய் Nexo, மெர்சிடீஸ் பென்ஸ் F-Cell