கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

டொயோட்டா ஃபார்ச்சூனருடன் போட்டியிடும் மஹிந்திரா ஆல்ட்டுராஸ் எப்படி இருக்கிறது? இதனுடன் ஒப்பிட்டால் விலை குறைவான டாடா ஹெக்ஸா எப்படி?

ஆர். சரவணன், இமெயில்

மோட்டார் கிளினிக்

ஹிந்திரா ஆல்ட்டுராஸ் பெரிய சைஸ் - மாடர்ன் கேபின் - சொகுசான இடவசதி - அதிக சிறப்பம்சங்கள் - எளிதான ஓட்டுதல் என அசத்துகிறது. ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் டாடா ஹெக்ஸா, XUV500-க்குப் போட்டியாகக் களமிறக்கப்பட்ட காராகும். இது ஒரு செக்மென்ட் கீழே பொசிஷன் செய்யப்பட்ட மாடல்தான். என்றாலும், லேடர் ஃப்ரேம் - 7 சீட்டர் - 4WD - டர்போ டீசல் இன்ஜின் - ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்  ஆகியவை, ஹெக்ஸா & ஆல்ட்டுராஸுக்குப் பொதுவானதுதான்.

மோட்டார் கிளினிக்

எனது பட்ஜெட் 6 - 8 லட்ச ரூபாய். காரை எப்போதாவதுதான் பயன்படுத்துவேன். பெட்ரோல் ஹேட்ச்பேக்தான் வேண்டும். நல்ல மைலேஜ், குறைந்த பராமரிப்புச் செலவுகள் அவசியம். மாருதி சுஸூகி செலெரியோ, டாடா டியாகோ, மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்... இவற்றில் எதை வாங்கலாம்?

ஈ.திலகர், சேலம்.

ங்கள் பட்ஜெட் மற்றும் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரின் ZXi வேரியன்ட் பொருத்தமாக இருக்கும். செலெரியோ விலை குறைவான காராக இருந்தாலும், அது போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, கொஞ்சம் OutDated மாடலாக ஆகிவருகிறது. எனவே உங்கள் பட்ஜெட்டை நீங்கள் கொஞ்சம் அதிகரித்தால், மாடர்ன் டச் ஸ்க்ரீன் கொண்ட ZXi+ டாப் வேரியன்ட்டை வாங்கி விடலாம். கடந்த மாதத்தில் கூடுதல் வசதிகளுடன் டியாகோ XZ+ காரைக் களமிறக்கியுள்ளது டாடா. இதையும்கூட நீங்கள் பரிசீலிக்கலாம்.

எனது பட்ஜெட் 4-6 லட்சம். இது எங்களின் முதல் கார். புதிதாக கார் ஓட்டுவதற்கு ஏதுவாக அந்த ஹேட்ச்பேக் இருக்க வேண்டும். மாதத்துக்கு 1000-கிமீக்குள்தான் பயன்பாடு இருக்கும் என்பதால், பவர் - டார்க் பற்றி பெரிய எதிர்பார்ப்பு இல்லை. 5 பேருக்கான இடம், சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகளில் சிறப்பாக இருக்கும் ஹேட்ச்பேக் எது?

ஸ்டார்க், இமெயில்.

ங்கள் பட்ஜெட்டில் கிடைக்கக்கூடிய எந்த காரிலுமே 5 பேர் வசதியாக உட்கார முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால் உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, டாடா டியாகோ நல்ல சாய்ஸாக இருக்கும். மாடர்ன் டிசைன், நீட்டான கேபின், சூப்பர் ஓட்டுதல் தரம், போதுமான வசதிகள், மனநிறைவைத் தரும் மைலேஜ் மற்றும் சர்வீஸ் காஸ்ட் என இது சிறப்பான பேக்கேஜாக அசத்துகிறது. இதே விலையில் கிடைக்கும் மாருதி சுஸூகி செலெரியோ மற்றும் ஹூண்டாய் சான்ட்ரோ ஆகியவற்றையும் நீங்கள் பார்க்கலாம்.

மோட்டார் கிளினிக்

நான் கடந்த 8 ஆண்டுகளாக, ஃபோர்டு ஃபியஸ்டா காரைப் பயன்படுத்தி வருகிறேன்.அதை விற்றுவிட்டு, புதிதாக ஒரு எஸ்யூவி வாங்க முடிவு செய்துள்ளேன். ஃபோர்டு எக்கோஸ்போர்ட், மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா, ரெனோ டஸ்ட்டர் ஆகியவற்றில் பவர், மைலேஜ், ரீ-சேல் மதிப்பு ஆகியவற்றில் அசத்தும் கார் எது?

எல். கோபிநாத், இமெயில்.

மா
ருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா உங்களுக்கு நல்ல சாய்ஸாகத் தெரியும். ஆனால், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கார்களிலேயே பவர் குறைவான கார் இதுதான்! எனவே மைலேஜ் மற்றும் பராமரிப்புச் செலவுகள் விஷயத்தில் இது முன்னிலை வகிக்கிறது என்றாலும், ரிலாக்ஸ்டான பெர்ஃபாமென்ஸ் (6-வது கியர்) மற்றும் கூடுதல் டார்க் (24.5kgm) விஷயத்தில் டஸ்ட்டர் அசத்துகிறது. ஆனால் இது மிகவும் பழைய மாடல் ஆகிவிட்டது; விலையில் எக்கோஸ்போர்ட் இது இரண்டுக்கும் நடுவே இருக்கிறது. 5 ஸ்டார் Safety ரேட்டிங்கைப் பெற்றிருக்கும் டாடா நெக்ஸான் காரைக்கூட நீங்கள் டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு, ஒரு முடிவுக்கு வரலாம்.

மோட்டார் கிளினிக்

எனக்கு மாருதி சுஸூகியின் சியாஸ் பிடித்திருக்கிறது. ஆனால் அதன் மைலேஜ், ரீ-சேல் மதிப்பு ஆகியவற்றில் சந்தேகம் இருப்பதால், தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன். வெர்னா எப்படி இருக்கிறது?

வி.பிரபு, திருச்சி.

மா
ருதி சுஸூகி சியாஸ், தனது பிரிவில் அதிகமாக விற்பனையாகும் மாடல். இதன் பேஸ்லிஃப்ட் மாடல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.  தனது வகையிலேயே சிறப்பான அராய் மைலேஜ் (21.56 கிமீ - பெட்ரோல்; 28.09 கிமீ - டீசல்) கொண்டிருக்கும் சியாஸின் ஆன்-ரோடு மைலேஜ், மனநிறைவைத் தரக்கூடிய விதத்திலேயே அமைந்திருக்கிறது. நீட்டான டிசைன் - தேவையான இடவசதி - அதிக சிறப்பம்சங்கள் - பிராக்டிக்கலான ஓட்டுதல் அனுபவம் - மாருதி சுஸூகியின் பலங்கள் என ஆல்ரவுண்டராகவும் இது அசத்துகிறது. மற்றபடி பவர்ஃபுல்லான பெட்ரோல் கார் வேண்டும் என்றால் வெர்னாவை டிக் அடிக்கலாம். இதன் மைலேஜ் குறைவுதான்.

மோட்டார் கிளினிக்

நான் பணி நிமித்தமாக, தினமும் மோசமான சாலைகளில், அதிக தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, நல்ல சஸ்பென்ஷன் மற்றும் மைலேஜைக் கொண்டிருக்கும் பைக் தேவைப்படுகிறது. எது எனக்கேற்ற பைக்?

செந்தில் குமார், கேரளா.

ங்கள் தேவையை நீங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டாலும், பட்ஜெட்டை நீங்கள் சொல்லவில்லை. எனவே 110சிசி செக்மென்ட்டில் புதிதாக வெளிவந்திருக்கும் பஜாஜ் பிளாட்டினா ES Comfortec, 125சிசி செக்மென்ட்டில் பஜாஜ் டிஸ்கவர் அல்லது ஹோண்டா CB ஷைன், 150 சிசி பிரிவில் ஹோண்டா யூனிகார்ன் ஆகிய பைக்குகள் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கவும்.

மோட்டார் கிளினிக்

நான் கடந்த 5 ஆண்டுகளாக பஜாஜ் பல்ஸர் 150 பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன் . என்னுடைய உயரம் 6 அடி. முதுகுவலி காரணமாக, தினசரிப் பயன்பாட்டுக்கு புதிதாக ஒரு க்ரூஸர் பைக்கை வாங்கும் திட்டத்தில் உள்ளேன். என்னுடைய பட்ஜெட் 1 லட்ச ரூபாய்.

மனோ, அருப்புக்கோட்டை.

ங்கள் பட்ஜெட்டில் கிடைக்கும் ஒரே க்ரூஸர், பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 220தான். கொடுக்கும் விலைக்கேற்ற மதிப்பு, சிறப்பான டீலர் & சர்வீஸ் நெட்வொர்க், மனநிறைவைத் தரும் பெர்ஃபாமென்ஸ் - வசதிகள் - டிசைன் - ஓட்டுதல் என பஜாஜ் பைக்குகளுக்குரிய ப்ளஸ் பாயின்ட்கள் அனைத்தும் அவென்ஜருக்கும் உண்டு. ஆனால் இது கொஞ்சம் பழைய மாடலாகிவிட்டது என்பதுதான் மைனஸ்.

மோட்டார் கிளினிக்

ங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com