கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

SPY PHOTO - ரகசிய கேமரா - கார்லினோ... இது ஹூண்டாயின் புதிய எஸ்யூவி!

SPY PHOTO - ரகசிய கேமரா - கார்லினோ... இது ஹூண்டாயின் புதிய எஸ்யூவி!
பிரீமியம் ஸ்டோரி
News
SPY PHOTO - ரகசிய கேமரா - கார்லினோ... இது ஹூண்டாயின் புதிய எஸ்யூவி!

SPY PHOTO - ரகசிய கேமரா - கார்லினோ... இது ஹூண்டாயின் புதிய எஸ்யூவி!

க்ரெட்டாவுக்கு வலுச்சேர்க்கும் விதமாகவும், விட்டாரா பிரெஸ்ஸாவுக்குப் போட்டியாகவும் ஒரு காம்பேக்ட் எஸ்யூவியை ஹூண்டாய் களமிறக்க உள்ளது. 

SPY PHOTO - ரகசிய கேமரா - கார்லினோ... இது ஹூண்டாயின் புதிய எஸ்யூவி!

கார்லினோ (QXi) எனும் காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட்டை, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் காட்சிப்படுத்தியது. தென்கொரியா, வட அமெரிக்காவைத் தொடர்ந்து தமிழகத்திலும் இது டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. சேலம் நெடுஞ்சாலையில் இதன் ஸ்பை படங்களை எடுத்திருக்கிறார், மோ.வி வாசகரான கோபிநாத்.

சான்டா ஃபீ மற்றும் கோனா எஸ்யூவிகளில் இருக்கும் பெரிய Cascading பாணி கிரில் இதிலும் தொடர்கிறது. கோனா க்ராஸ்ஓவர் போலவே இங்கும் Composite Light - அதாவது ஹெட்லைட் இரண்டாகப் பிளக்கப்பட்டு, மேலே LED DRL மற்றும் கீழே புரொஜெக்டர் ஹெட்லைட் வைக்கப்பட்டிருக்கிறது. பக்கவாட்டு டிசைன், க்ரெட்டாபோல அமைந்திருக்கிறது. டெயில்கேட் தெளிவாகத் தெரியாவிட்டாலும், இது கோனாபோல இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்! 

டூயல் டோன் கேபினில் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் இருக்கும். 1.0 லி டர்போ பெட்ரோல்/1.5 லி டர்போ டீசல் எனும் இரு இன்ஜின் ஆப்ஷன்களை கார்லினோ (QXi) கொண்டிருக்கலாம். இரண்டுமே BS-VI மாசு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படும் என்பதுடன், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படலாம். 2019 நடுவில் வரவிருக்கும் இந்த எஸ்யூவி, 7 - 12 லட்சம் ரூபாயில் வெளிவரலாம்.

ஹூண்டாய் QXi காரைப் படம் எடுத்து அனுப்பிய சேலம் வாசகர் கோபிநாத், ஜெர்கின் பரிசாகப் பெறுகிறார்.

டையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com