கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மேடு பள்ளங்களில் ஆடாத ஆடி!

மேடு பள்ளங்களில் ஆடாத ஆடி!
பிரீமியம் ஸ்டோரி
News
மேடு பள்ளங்களில் ஆடாத ஆடி!

டிரைவ் - ஆடி Q5

‘சும்மா ஓட்டிப் பாருங்க’ என்று புத்தாண்டை ஒட்டி, Q5 காரை நம் அலுவலக வாசலில் நிறுத்திவிட்டுப் போயிருந்தது ஆடி. ‘விர்’ரென்று ஆளே இல்லாத ஈசிஆரிலும், ‘நசநச’வென்ற சென்னை டிராஃபிக்கிலும் Q5-ல் டீசல் நிரப்பிவிட்டு ஒரு ரவுண்ட் அடித்தேன்.

மேடு பள்ளங்களில் ஆடாத ஆடி!

2018 மிட்-எண்டிலேயே லாஞ்ச் ஆகிவிட்டது Q5. ஆனால், இன்னமும் Q5-க்கு மார்க்கெட் குறையவில்லை.அதை ஓட்டும்போது உற்சாகமும் குறையவில்லை. பின்னால் 35TDI என்று பேட்ஜ் இருந்தால், அது டீசல் மாடல். LED-யிலும், நீளத்திலும் Q3-யைவிட Q5-ல் கொஞ்சம் அதிகம். ஆனால், Q7 தயாராகும் MQB பிளாட்ஃபார்மில்தான் Q5 காரும் ரெடியாகிறது. கட்டுமானம் - பீரங்கிபோல இருக்கும். காஸ்ட்லி அம்சங்கள் எல்லா இடங்களிலும் தெரிந்தன. பின்னால் எக்ஸாஸ்ட்டுக்குக்கூட க்ரோம் ட்ரே வைத்திருந்தார்கள். 

மேடு பள்ளங்களில் ஆடாத ஆடி!

இன்டீரியர் கசகசவென குழப்பவில்லை. ஓர் அழகான செமி ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், கியர்பாக்ஸ் என்று சிம்பிள் அண்ட் நீட். டச் ஸ்க்ரீனில், நேவிகேஷனில் இருந்து காரின் சஸ்பென்ஷன் செட்-அப், டயர் பிரஷர் வரை செக் செய்து கொள்ளலாம். ஆடியின் விர்ச்சுவல் காக்பிட் டயல்கள் செம மாடர்ன். வாய்ஸ் கமாண்டிங்கெல்லாம் இருந்தது. சீட்கள் எலெக்ட்ரிக். மெமரி செட் செய்து கொள்ளலாம்.

2.0 லிட்டர் இன்ஜின். ‘V6’ என்று நினைத்தேன். ஆனால் 4 சிலிண்டர். 190 bhp பவர். கியரை ‘D’ மோடுக்குத் தள்ளி ஆக்ஸிலரேட்டர் மிதித்தால்... சும்மா பறக்கிறது. 0-100 கி.மீ 7.9 விநாடிகள் என்றது ஆடி. 2,000 கிலோவுக்கு 100 கிலோதான் எடை குறைவு. நம் ஊர்ச் சாலையில் பயந்தபடி மிதித்தேன். கிட்டத்தட்ட ‘10 எண்றதுக்குள்ள’ 100 கி.மீ தொட முடிந்தது. அப்புறம் ‘S’ மோடில் வைத்து ஒரே மிதி! 8 விநாடிகளுக்குள் மூன்றிலக்க வேகம் கிடைத்தது. இதன் டாப் ஸ்பீடு 218 என்கிறது ஆடி. நம் ஊரில் சாலைதான் இல்லை. பழைய வெர்ஷன் 2.0TDI காரைவிட, நல்ல எக்ஸ்பீரியன்ஸ். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் சூப்பர்.
 
ஆடியில் டயனமிக் சஸ்பென்ஷன் என்று ஒரு விஷயம் உண்டு. சாலைகளுக்குத் தகுந்தாற்போல் இதன் சஸ்பென்ஷன் செட்-அப்பை, ஒரு பட்டன் மூலம் கண்ணெதிரியே மாற்றிக் கொள்ளலாம். மேடு பள்ளங்களில் அலுங்கலாவது குலுங்கலாவது? ஆடியின் சஸ்பென்ஷன் மேடு பள்ளங்களில் நாம் ஆடாமல் பார்த்துக் கொள்கிறது.

மேடு பள்ளங்களில் ஆடாத ஆடி!

ஒரு மண் தரையில் இறக்கிப் பார்த்தேன். சட்டென மேலேறி விட்டது Q5. ஆடியின் க்வாட்ரோ ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்தின் மகிமை இது. இந்த சிஸ்டம் ஆன் ஆகும்போது, மைலேஜ் மட்டும் லேசாக அடிவாங்கும்.

65 லட்ச ரூபாய் காருக்கு மைலேஜா முக்கியம்?

தமிழ் - படங்கள்: ரவிக்குமார்