Published:Updated:

லேண்ட்ரோவர் பாதி... ஜீப் மீதி... டாடாவின் டபுள் ட்ரீட்!

லேண்ட்ரோவர் பாதி... ஜீப் மீதி... டாடாவின் டபுள் ட்ரீட்!
பிரீமியம் ஸ்டோரி
News
லேண்ட்ரோவர் பாதி... ஜீப் மீதி... டாடாவின் டபுள் ட்ரீட்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - டாடா ஹேரியர்

2018 டெல்லி எக்ஸ்போவில் அறிமுகமான நாள் தொட்டே, டாடா ஹேரியருக்கு கார் ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பு எக்குத்தப்பாக இருந்தது. காரணம், JLR-ன் பெஸ்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் பொறியியல் திறனை இந்த எஸ்யூவியில் எதிர்பார்க்கலாம் என்பதுதான். மஹிந்திராவின் XUV 500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகியவற்றோடு போட்டி போடப் போகும் ஹேரியர் உற்பத்தியாவது லேண்ட்ரோவர் D8 பிளாட்ஃபார்ம் என்பதாலேயே, கார் ஆர்வலர்கள் அல்லாதவர்கள் கூட ஹேரியரைப் பற்றி ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள். இந்த எதிர்பார்ப்புகள் மெய்யானதா? 

லேண்ட்ரோவர் பாதி... ஜீப் மீதி... டாடாவின் டபுள் ட்ரீட்!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரிலிருந்து சுமார் நூறு கி.மீ தூரத்தில் இருக்கும் மணல்மேடுகள் நிறைந்த கிம்ஸர் என்ற கிராமம்வரை, ஹேரியரை ஓட்டிச் சென்று டெஸ்ட் டிரைவ் செய்தேன்.
 
 வெளிப்புறத் தோற்றம்

லேண்ட்ரோவர் முகப்பின் பல சாயல்கள் ஹேரியரில் தெரிகின்றன. இதில் நம்மை அதிகம் கவர்ந்தது, பியானோ பிளாக் வண்ணத்தில் மிளிரும் கிரில் மற்றும் LED டே டைம் ரன்னிங் லைட்ஸ், அதன் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் ஹெட்லைட்ஸ்... சந்தேகமில்லை; இது ஹேரியரைத் தனித்து மட்டுமல்ல... ஐரோப்பிய கார் போலவும் காட்டுகிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
லேண்ட்ரோவர் பாதி... ஜீப் மீதி... டாடாவின் டபுள் ட்ரீட்!

அதிலும் டாப் எண்ட் XZ வேரியன்ட்டில் இடம்பெற்றிருப்பது ஸெனான் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ். மின்னல் துண்டைப்போலக் காட்சியளிக்கும் டே டைம் ரன்னிங் லைட்ஸே, இங்கே இண்டிகேட்டராகவும் செயல்படுகின்றன. சைடு மிரர்கள் பெரிதாக இருக்கின்றன. இது பின்னால் வரும் வாகனங்களை நன்றாகக் காட்டினாலும், A பில்லர்கள் இருக்கும் இடத்தில் பிளைண்ட் ஸ்பாட்டையும் ஏற்படுத்துகிறது. மற்றபடி இது ஒரு பக்கவான எஸ்யூவி என்பதை இதன் உயரமும், தோற்றமும் பறைசாற்றுகின்றன. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 205 மிமீ என்பதால் கம்பீரம் கூடுகிறது.

ஹேரியரைப் பக்கவாட்டிலிருந்து பாக்கும்போது, இதில் நெக்ஸான் சாயல் மட்டுமல்ல; லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் சாயலும் தெரிகிறது. செதுக்கப்பட்டதைப்போன்று அற்புதமான அளவுகளோடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் காரின் விண்டோ லைன் பின்நோக்கிச் சென்று... மேல்நோக்கி வளைந்து கறுப்பு நிற D-பில்லரோடு இணைவது, ஃப்ளோட்டிங் ஃரூப் எஃபெக்ட்டை உருவாக்குகிறது. இதில் திருஷ்டிப் பரிகாரம்போல இருப்பது, 17 இன்ச் அலாய் வீல் மற்றும் 235/65 R17 டயர்களுக்கு மேலே இருக்கும் மிகப்பெரிய வீல் ஆர்ச்தான். இவ்வளவு பெரிய வீல் ஆர்ச்சுக்கு, 18 இன்ச் வீல்கள்தான் பொருத்தமாக இருந்திருக்கும். காரின் பின்புறத் தோற்றதில், ஆங்காங்கே ஜாகுவாரின் சாயல் தெரிகிறது. ஹேரியர் என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் கிளாஸ். இது ஜாகுவார் இல்லை என்று சொல்வதைப் போல, ஓரிரு இடங்களில் பாடி பேனல்களுக்கு இடையே இடைவெளி தெரிவது மைனஸ்.

உள்ளங்காரம்

டேஷ்போர்டின் இடையே செய்யப் பட்டிருக்கும் மரவேலைப்பாடு போன்ற தோற்றமளிக்கும் பிளாஸ்டிக் அலங்காரம், ஹேரியருக்குத் தனி அடையாளத்தைத் தருகிறது. சாக்லெட் கலரில் இருக்கும் சீட் கவர்கள், பெரிதாக இருக்கும் கதவுப்பிடிகள், இரட்டை வண்ண டேஷ்போர்டு என எல்லாமே தரத்தில் உயர்ந்து காணப்படுகின்றன.

லேண்ட்ரோவர் பாதி... ஜீப் மீதி... டாடாவின் டபுள் ட்ரீட்!

ஹேரியரின் முன் இருக்கைகள் பெரிதாகவும், உட்கார சவுகரியமாகவும் இருக்கின்றன. 8.8 இன்ச் டச் ஸ்கீரின் மற்றும் ஏ.சி வென்ட் ஆகிய இரண்டும் ஒன்றாக இணைந்து, காரின் டேஷ்போர்டைவிட்டுத் தனியாக மேல்நோக்கித் தெரிவது புதுமை.

ஜீப் காம்பஸைவிட ஹேரியரின் இன்டீரியர், ஒரு படி நன்றாகவே இருக்கிறது. என்றாலும், ஒட்டுமொத்தமாக அப்படிச் சொல்லிவிட முடியாது. காரில் இரண்டு USB போர்ட்கள் இருக்கின்றன. ஆனால் அவை எங்கே இருக்கின்றன என்பதை, அமலாக்கத் துறையை விட்டுத்தான் தேட வேண்டும். அந்த அளவுக்கு மறைத்து வைத்திருக்கிறது டாடா.

இதன் வீல் பேஸ் 2,741 மிமீ என்பதால், பின்னிருக்கைகள் மிகவும் தாராளமாகவும் வசதியாகவும் இருக்கின்றன. இங்கே மூன்று பேர் சொகுசாகப் பயணிக்கலாம். பின்பக்கக் கண்ணாடிகள் பெரிதாக இருப்பதால், வெளிச்சாலையும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இதில் மூன்றாவது வரிசை சீட்டுகள் இல்லை. பெரிய எஸ்யூவி என்றால், வாடிக்கையாளர்கள் சன் ரூஃப்பை எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் இது ஏமாற்றமே!

425 லிட்டர் கொண்ட டிக்கி புத்திசாலித்தனத்தோடு வடிவமைக்கப்பட்டிருப்பதால், இதில் நிறைய பொருட்களை வைக்க முடியும். பின் சீட்டுகளை மடக்கினால், இதன் கொள்ளளவு 810 லிட்டராக அதிகரித்துவிடுகிறது.

கீலெஸ் என்ட்ரி, ஆறு காற்றுப்பைகள், ரியர் வியூ கேமரா, ரியர் பார்க்கிங் சென்ஸார், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஹெட்லைட்ஸ் மற்றும் வைப்பர்கள் ஆகியவை, இப்போது இதுபோன்ற எஸ்யூவிக்களுக்கு அடிப்படைத் தேவைகளாகிவிட்டன. மற்றபடி 9 JBL ஸ்பீக்கர்கள் மற்றும் சப் ஊஃபர், காரின் லோகோவை ஒளிவடிவில் தரையில் காட்டும் Puddle Lamp ஆகியவை இதில் எக்ஸ்ட்ரா.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் இருக்கும் 7 இன்ச் திரை, செம யூஸ்ஃபுல். இதில் டிஜிட்டல் டேக்கோமீட்டர், ஃப்யூல் மீட்டர், இன்ஜின் டெம்ப்ரேச்சர், டிரைவிங் மோடு ஆகியவற்றோடு நேவிகேஷனும் இருக்கிறது. 8.8 இன்ச் டச் ஸ்க்ரீன், நெக்ஸானைவிட சூப்பர். ஆனால் ஹூண்டாய், ஃபோர்டு அளவுக்கு இல்லை.

இன்ஜின் மற்றும் செயல்பாடு

ஜீப் காம்பஸில் இருக்கும் அதே 2.0 லிட்டர் பியட் டீசல் இன்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான் இதிலும். ஆனால் ஜீப் காம்பஸை விடச் சக்தி குறைவாக,  அதாவது 140bhp பவரைத்தான் இது கொடுக்கிறது. டார்க்கைப் பொறுத்தவரை, அதே 35kgm தான். டாடா இந்த இன்ஜினுக்கு, Kryotec என்று பெயரிட்டிருக்கிறது. இப்போதைக்கு ஃப்ரன்ட் வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.  ஆல் வீல் டிரைவ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லை.
 
இன்ஜின் சத்தத்தை டாடாவால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிலும் 3,000 ஆர்பிஎம்மைத் தாண்டிவிட்டால் சத்தம் அதிகமாகிறது. 

லேண்ட்ரோவர் பாதி... ஜீப் மீதி... டாடாவின் டபுள் ட்ரீட்!

கியர் மாற்றி ஓட்டுவதிலும், கிளட்சை இயக்குவதிலும் எந்தப் பிரச்னையும் இல்லை. இவை இரண்டும் காம்பஸைவிட நன்றாகவே செயல்படுகின்றன. எக்கோ, சிட்டி, ஸ்போர்ட் என்று இதில் மூன்று டிரைவிங் மோடுகளைக் கொடுத்திருக்கிறார்கள். இதில் எக்கோ, சிட்டி இரண்டும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. ஸ்போர்ட்ஸ் மோடில் ஓட்டும்போது கார் பெப்பியாக இருக்கிறது என்றாலும், நெடுஞ்சாலைகளில் ஓவர்டேக் செய்யும் போது பவர் போதவில்லை. ஆனால் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு கிடைக்கும் சக்தி, நெடுஞ்சாலைகளில் க்ரூஸ் செய்ய வசதியாக இருக்கிறது. வேகமாகச் செல்லும்போது அலுங்காமல் குலுங்காமல் நிலைத்தன்மையோடு பயணிப்பது ஹேரியரின் ஹைலைட். இதற்குக் காரணம் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்ஸில் இருக்கும் அதே இண்டிபெண்டன்ட் முன்பக்க சஸ்பென்ஷன்தான் இதிலும். பின் சக்கரங்களுக்கு இருப்பது டார்ஷன் பீம் செட்-அப். பெரிய பள்ளங்களில் விழுந்து எழுந்தால்கூட, அந்த அதிர்வுகளை காருக்குள் கடத்தாமல் பார்த்துக் கொள்கின்றன.

இதில் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் இல்லை. ஹெக்ஸாவில் இருப்பதைப் போன்றே ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங்தான் கொடுத்திருக்கிறார்கள். அதனாலோ என்னவோ, குறைந்த வேகங்களில் ஸ்டீயரிங் ஹெவியாக இருக்கிறது. ஆனால் வேகம் கூடக் கூட காருக்கு கன்ட்ரோல் தேவை என்பதால், இந்தக் குறை மறைந்துவிடுகிறது. திருப்பங்களில் சற்று பாடி ரோல் தெரிகிறது.

சாலை ஈரமாகவும் வழுக்கலாகவும் இருக்கும்போது ஓட்ட வசதியாக, இதில் டெரெய்ன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல ஹில்-அசிஸ்ட், ஹில் டிஸன்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ரோல்ஓவர் மிட்டிகேஷன் என்று பாதுகாப்புக்குப் பல அம்சங்கள் இதில் உண்டு. இதில் ரியர் டிஸ்க் பிரேக் இல்லை என்றாலும், கார் சொல்லும் இடத்தில் நச்சென நிற்கிறது.

வேல்ஸ் - படங்கள்: கே.ராஜசேகரன்

லேண்ட்ரோவர் பாதி... ஜீப் மீதி... டாடாவின் டபுள் ட்ரீட்!

ர்கானமிக்ஸ் பிரச்னைகள், AWD, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன், சன்ரூஃப் ஆகியவை இல்லாத குறை, அதிகப்படியான இன்ஜின் சத்தம் என்ற மைனஸ் பாயின்ட்களைத் தாண்டி, ஹேரியர் தனது செக்மென்ட்டில் முக்கியமான ஒரு காராக உருவெடுத்திருக்கிறது. காரணம் - அசத்தல் டிசைன், அற்புதமான உள்ளலங்காரம். அசதி தராத பயண அனுபவம் எல்லாமே ஹேரியரில் கிடைக்கின்றன. இதன் விலைதான், இந்த எஸ்யூவி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதைத் தீர்மானிக்கும்.