கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

வருகிறது சின்ன XUV...

வருகிறது சின்ன XUV...
பிரீமியம் ஸ்டோரி
News
வருகிறது சின்ன XUV...

வருகிறது சின்ன XUV...

பிப்ரவரியில் மஹிந்திராவிலிருந்து ஒரு ட்ரீட் காத்திருக்கிறது. XUV500 காரின் தம்பியாக XUV300 அறிமுகமாக உள்ளது. ஸாங்யாங் டிவோலி எஸ்யூவியின் அதே x100 பிளாட்ஃபார்மில் தயாராகப்போகும் XUV300, 4 மீட்டருக்குட்பட்ட எஸ்யூவி; 5 சீட்டர்தான்.

வருகிறது சின்ன XUV...

ஏற்கெனவே பல ஸ்பை படங்களில் பார்த்த XUV300-ன் அதிகாரப்பூர்வ படத்தை வெளியிட்டிருக்கிறது மஹிந்திரா. XUV500 காரைப்போலவே இதன் டாப் எண்டும் W8 வேரியன்ட்தான். HID புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED DRL, LED டெயில் லைட், 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில், ரூஃப் மவுன்டட் ஸ்பாய்லர், ஃப்ளோட்டிங் ரூஃப் டிசைன் என்று கலக்கவிருக்கிறது XUV300. க்ரெட்டாவில்கூட இல்லாத வசதியான 4 வீலுக்கும் டிஸ்க் பிரேக், டூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி, 7 காற்றுப்பைகள், இந்தச் சின்ன எஸ்யூவியில் வருவது ஹைலைட்! சன்ரூஃப்கூட உண்டு.

வருகிறது சின்ன XUV...

கறுப்பு மற்றும் பீஜ் கலர் டூயல் டோன் இன்டீரியர், ப்ரீமியம் லுக்கில் கலக்குகிறது. பெரிய டச் ஸ்க்ரீன் சிஸ்டமும் உண்டு. பின் பக்க சீட்டில் சென்டர் ஆர்ம்ரெஸ்ட்,  3 அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட்டும் வரும்.

மராத்ஸோவில் இருக்கும் 1.5 லிட்டர், 123 bhp கொண்ட 4 சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜினும், 1.2 டர்போ பெட்ரோல் இன்ஜினும் XUV300-ல் இருக்கும். இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான். ஆட்டோமேட்டிக் லேட்டாக வரும்.

யூனிக்காக ஏதாவது காம்பேக்ட் எஸ்யூவியைத் தேடுபவர்கள் கொஞ்சம் காத்திருக்கலாம்.

தமிழ்