நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்த பிறகு ‘இந்தப் பொண்ணைப் பிடிக்கலை’ என்று கல்யாணத்தை நிறுத்தும் பேர்வழிகள், நிறைய பேரை நாம் பார்த்திருக்கிறோம். கார் வாங்கும் விஷயத்திலும் இப்படி பலர் இருக்கிறார்கள்.

‘‘தெரியாம காரை புக் பண்ணிட்டேன். இதைவிட அந்த கார்லதான் எனக்குப் பிடித்த ரிவர்ஸ் கேமரா இருக்கு... இந்த புக்கிங்கை கேன்சல் பண்ணிடலாம்னு பார்க்கிறேன்!’’ என்று டோக்கன்அட்வான்ஸ் கொடுத்து புக்கிங் செய்த காரை கேன்சல் பண்ணிவிடுவார்கள். திரும்பவும் வேறு ஷோரூம், வேறு கார், புக்கிங் என்று முதலில் இருந்து வர வேண்டும்.

எந்த ஒரு விஷயத்தையும் செய்யும் முன்பு பல தடவை யோசிக்க வேண்டும்; செய்து முடித்தபின் ஒரு தடவைகூட யோசிக்கக் கூடாது. இதை கார் வாங்கும்போது 100% நடைமுறைப்படுத்த வேண்டும்.

‘இதில் என்ன தவறு? பிடிக்காத காரில் எத்தனை வருடம் குடும்பம் நடத்த முடியும்’ என்று நீங்கள் கேட்பதும் சரிதான். புக்கிங்கை கேன்சல் பண்ணுவதும் சரிதான். ஆனால், அதற்கும் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். காலம் தாழ்ந்த பிறகு ஞானோதயம் கிடைத்தால், ‘இனி நீ வயசுக்கு வந்தா என்ன... வரலேன்னா என்ன?’ என்கிற கதையாகிவிடும்.

வாசகர் ஒருவர் புலம்பியபடி நமது வாய்ஸ் ஸ்நாப் பதிவில் இப்படி ரெக்கார்ட் செய்திருந்தார்.

‘‘என் பெயர் மோகனகிருஷ்ணன். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தர்மபுரியில் இருந்து பேசுறேன். நான் ஒரு அரசாங்க ஊழியர். ............. மோட்டார்ஸில் ஒரு செடான் கார் புக் செஞ்சேன். 20,000 ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணிட்டேன். அப்போதே அவங்ககிட்ட சொல்லியிருந்தேன். நான் ஒரு கவர்ன்மென்ட் ஊழியர்ங்கிறதால, என் துறையில் இருந்து அனுமதி வாங்கினப்புறம்தான் நான் காரை டெலிவரி எடுக்க முடியும். அதுவரைக்கும் லோன் பிராசஸ் எதுவும் பண்ண வேண்டாம்னு முன்னாடியே சொல்லியிருந்தேன். ஆனா அவங்க என்கிட்ட கேட்காமலேயே, காருக்கு லோன் பிராசஸ் பண்ணிட்டாங்க. எனக்கு இன்னும் அனுமதி கிடைக்கலை. கார் எடுத்தா வேலைக்குப் பிரச்னை ஆயிடும். ‘கேட் பாஸெல்லாம் போட்டாச்சு. இனி ஒண்ணும் பண்ண முடியாது’னு கைவிரிச்சுட்டாங்க! என்ன செய்றதுன்னு தெரியலை!’’ என்று வருத்தத்துடன் சொல்லியிருந்தார்.

நாம் இது பற்றி விசாரித்தபோது, ஆர்டிஓ-வுக்குச் சென்று ரிஜிஸ்ட்ரேஷனும் முடிந்து விட்டதாக ஷோரூமில் சொன்னார்கள். புக்கிங் செய்த காரை எப்போது வேண்டுமானாலும் கேன்சல் செய்யலாம். ஆனால், அது ரிஜிஸ்ட்ரேஷன் போகாத வரைதான். அதேநேரம் வாடிக்கையாளரின் கையெழுத்தும் வங்கியின் ஒப்புதலும் இல்லாமல், ரிஜிஸ்ட்ரேஷன் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை. விசாரித்தபோது, இவர் ஏற்கெனவே அதற்கான இன்வாய்ஸிலும் விண்ணப்பங்களிலும் கையெழுத்திட்டு விட்டதாகச் சொன்னார்.

புக்கிங் ஆன காரை இழந்துவிட்டு, டார்கெட்டில் கோட்டை விட்டுவிடக் கூடாது என்கிற அவசரத்தில் கார் ஷோரூமின் சேல்ஸ்மேன், வாடிக்கையாளரின் வேண்டுகோளையும் மீறி, அந்த காருக்கான பேங்க் ப்ராசஸில் இருந்து ரிஜிஸ்ட்ரேஷன் வரை எல்லாவற்றையும் முடித்து விட்டார். இது மாபெரும் தவறுதான். ஆனால், இதனால் நஷ்டம் என்னவோ, அந்த வாடிக்கையாளருக்குத் தான்.

இந்தப் பிரச்னை ஓய்வதற்குள், வங்கியிலிருந்து முதல் மாதத் தவணைக்கான தொகையையும் பிடித்துவிட்டார்கள். கார் கைக்கு வராமலே தவணைத் தொகையைச் செலுத்திக்கொண்டிருந்தார் அவர். ‘‘நல்லவேளை இந்த செடான் மாடல் எனக்குப் பிடிச்ச கார். அதனால மனசு கொஞ்சம் திருப்தியா இருக்கு. இனி எங்க டிபார்ட்மென்ட்ல இருந்து வர்ற பிரச்னை மட்டும்தான் எனக்கு மனஉளைச்சல். அதை மட்டும் சமாளிக்கணும்’’ என்று இப்போது வேறு வழியில்லாமல் அந்த காரை டெலிவரி எடுத்து ஓட்டத் தொடங்கி விட்டிருக்கிறார்.

தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களைவிட அரசு ஊழியர்கள், அலுவலக சம்பந்தமாக கார் வாங்குபவர்கள் போன்றவர்கள், கார் வாங்கும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

வேறு ஒரு வாடிக்கையாளரின் அனுபவம் இது: ‘‘10,000 ரூபாய் செலுத்தி ஒரு ஹேட்ச்பேக் புக்கிங் செய்தேன். வீட்டில் ஒரு சின்னப் பிரச்னை. ஒரு மாசம் கழித்து கேன்சல் பண்ணினேன். 5,000 ரூபாய் பிடிச்சுட்டுத்தான் பேலன்ஸ் கொடுத்தாங்க...’’ என்றார்.

ஆட்டோமொபைல் மற்றும் டீலர்கள் நார்ம்ஸ்படி, இதற்கு எந்தக் கட்டணமும் பிடித்தம் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் சில டீலர்கள், வடிவேலு படத்தில் வருவதுபோல் - ‘ஷோரூம் உள்ளே வந்ததுக்கு ஒரு பில்லைப் போடு; காரைப் பார்த்ததற்கு ஒரு பில்லைப் போடு, கேன்சல் பண்ணினதுக்கு ஒரு பில்லைப் போடு’ என்கிற ரீதியில் பிடித்தம் செய்கிறார்கள். இதை கேள்வி கேட்பது உங்கள் உரிமை.

- (தொடரும்)

என்ன செய்ய வேண்டும்?

* காரை நன்றாக கம்பாரிஸன் செய்து பாருங்கள். குடும்பத்தினருடன் டெஸ்ட் டிரைவ் செய்ய மறக்காதீர்கள்.

* டெஸ்ட் டிரைவ் முடிந்த பிறகே புக்கிங் என்பதில் உறுதியாக இருங்கள். இதுவும் குடும்பத்தினரின் முன்னிலையில்தான் நடக்க வேண்டும்.

* புக்கிங் செய்யும்போது, இன்வாய்ஸ் தவிர வேறு எதிலும் கையொப்பம் இடாதீர்கள்.

* ஃபார்ம்-20 என்கிற விண்ணப்பம்தான், ஒரு காரின் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு ரொம்ப முக்கியம். இதில் வங்கியின் ஒப்புதலும், உங்களின் கையொப்பமும் இருந்தாலொழிய காரை RTO-வுக்கு ரிஜிஸ்ட்ரேஷனுக்கு அனுப்ப முடியாது.

* ‘என் அனுமதியில்லாமல் கேட் பாஸ் வாங்கக் கூடாது’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுங்கள்.

* லோன் ப்ராசஸ் ஆன பிறகுதான், விண்ணப்பத்தில் கையெழுத்திடுங்கள். அவசரப்பட்டால், கார் கைக்கு வராமலே EMI கட்ட வேண்டியிருக்கும்.

* புக்கிங் கேன்சல் செய்வது உங்கள் இஷ்டம். புக்கிங் தொகையில் பிடித்தம் செய்தால் தைரியமாகக் கேட்கலாம். புக்கிங் தொகை உங்கள் கைக்கு வரச் சில வாரங்கள் ஆகலாம்.

* இப்படி அவசர புக்கிங்குகளுக்குக் காரணம் - சேல்ஸ்மேன்களின் மந்திர வார்த்தைதான். ‘‘சார், இன்னைக்கோட இந்த ஆஃபர் முடிந்தது. இன்றைக்கு புக் பண்ணினீங்கன்னா மட்டும்தான் இந்தஆஃபர் உங்களுக்குக் கிடைக்கும். 5,000 ரூபாய் கொடுத்து இப்போ புக்கிங் மட்டும் பண்ணிக்கோங்க!’’

* வக்கீல்களிடமும் டாக்டர்களிடமும் பொய் சொல்லக் கூடாது. சேல்ஸ்மேன்கள் சொல்வதை நம்பக் கூடாது. இதைப் புரிந்து கொண்டால் ஆல் இஸ் வெல்.