Published:Updated:

ஸ்விஃப்ட், இனோவா, சான்ட்ரோ...அப்போ அப்படி... இப்போ எப்படி?! #10YearChallenge

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்விஃப்ட், இனோவா, சான்ட்ரோ...அப்போ அப்படி... இப்போ எப்படி?! #10YearChallenge
ஸ்விஃப்ட், இனோவா, சான்ட்ரோ...அப்போ அப்படி... இப்போ எப்படி?! #10YearChallenge

கடந்த 10 ஆண்டுகள் கார்களின் வரலாற்றில் மிக முக்கியமானவை. ஃபார்முலா ஒன் இந்தியாவுக்கு வந்ததும், நரேன் கார்த்திகேயன் ஃபெராரியை விரட்டியதும் 10 ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள்தாம்...

ஸ்கார்ப்பியோ, நானோ, சிவிக், XUV என இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகள் கார்களின் வரலாற்றில் மிக முக்கியமானவை. டாடா, ஜாகுவாரை வாங்கியதும், மஹிந்திரா பின்னின்ஃபரினாவை வாங்கியதும் இந்தக் காலம்தான். ஃபார்முலா ஒன் இந்தியாவுக்கு வந்ததும், நரேன் கார்த்திகேயன் ஃபெராரியை விரட்டியதும் இந்தக் காலம்தான். சென்ற முறை இந்தியாவின் பிரபலமான பைக்குகளுக்கு 10 years Challenge கொடுத்தது போல இது கார்களுக்கான முறை. இந்தியாவில் பிரபலமான கார்கள் 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தன. இப்போது எப்படி இருக்கின்றன பார்ப்போம்.

1. மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்

ஸ்விஃப்ட், இனோவா, சான்ட்ரோ...அப்போ அப்படி... இப்போ எப்படி?! #10YearChallenge

அந்தக் காலம் அது அது மாருதி காலம்... இந்தக் காலம் இது இது இதுவும் மாருதி காலம்தான். புது காரோ, பழைய காரோ ஸ்விஃப்டுக்கு இப்போது வரை செம டிமாண்டு உண்டு. கடந்த 10 ஆண்டுகளில்தான் ஸ்விஃப்ட் அசுர வளர்ச்சியை அடைந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்விஃப்ட்டில் 87bhp பெட்ரோல் மற்றும் 75bhp டீசல் இன்ஜின்கள் இருந்தன. அப்போது ஸ்விஃப்ட்டின் பெரிய மைனஸ் இடவசதி மற்றும் பூட் ஸ்பேஸ். பின்பக்கம் பயணிகள் காலை அடக்கி, ஒடுக்கித்தான் உட்காரவேண்டும். வெளியூர் பயணங்களுக்குச் சிறிய பைகளை மட்டும்தான் கொண்டுசெல்ல முடியும். பழைய ஸ்விஃப்ட்டில் அதிர்வுகளும் கொஞ்சம் அதிகம்தான்.

ஸ்விஃப்ட், இனோவா, சான்ட்ரோ...அப்போ அப்படி... இப்போ எப்படி?! #10YearChallenge

இப்போது இடவசதி ஸ்விஃப்ட்டின் ப்ளஸ்ஸாக மாறிவிட்டது. ஹெட்ரூம், லெக்ரூம் எல்லாமே அதிகரித்துவிட்டது. கடந்த ஆண்டு வெளிவந்த ஸ்விஃப்ட்டில் 268 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொடுத்துள்ளார்கள். சாலையில் பல ஆண்டுகளாக ஸ்விஃப்ட்டைப் பார்த்துப் பார்த்து அலுத்து போய் இருப்பவர்களும் கூட, பரவாயில்லை வாங்கலாம் என்று யோசிக்கக் காரணம் இதன் பிராக்டிகாலிட்டி. தற்போது இருக்கும் ஸ்விஃப்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட், LED DRL, சைடு மிரர்ரில் இண்டிகேட்டர், ஸ்டைலான அலாய் வீல்கள் எனக் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் உண்டு. பழைய ஸ்விஃப்ட்டில் ஏசி, பவர் விண்டோஸ் தவிர எதுவுமே இருக்காது. ஆனால், புது ஸ்விஃப்ட்டில் எலெக்ட்ரிக் ஃபோல்டிங் மிரர்ஸ், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரியர் வைப்பர்/டிஃபாகர், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஆண்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் பிளே, டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன், ஆட்டோ ஹெட்லைட்ஸ், ரியர் வியூ கேமரா, வாய்ஸ் கமாண்ட், கீ-லெஸ் என்ட்ரீ... என லிஸ்ட் பெருசு. பில்டு குவாலிட்டி, டர்போ லேக்... இந்த இரண்டு மட்டும் இன்னும் மாறவே இல்லை.

2. ஃபியட் பேலியோ

ஸ்விஃப்ட், இனோவா, சான்ட்ரோ...அப்போ அப்படி... இப்போ எப்படி?! #10YearChallenge

ஃபியட்டுக்குக் கடந்த 10 ஆண்டுகள் மிக மோசமானவை. தொழிற்சாலையை இழுத்து மூடும் நிலைமைக்குச் சென்று மீண்டு வந்துள்ளது இந்த நிறுவனம். 100 ஆண்டுகளுக்கு மேலாக கார் தயாரிப்பில் இருக்கும் ஃபியட் நிறுவனம் 2007-ல் விற்பனைக்குக் கொண்டுவந்த கார்தான் ஃபியட் பேலியோ. `காலத்துக்கு முற்பட்ட கார்’ என்று இதை வர்ணித்தார்கள், கார் பிரியர்கள். `தவறான சமயத்தில் விற்பனைக்கு வந்த சரியான கார்’ என்றார்கள் கார் வல்லுநர்கள். பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் ஈடு இணையற்ற கார் இது. பெர்ஃபாமென்ஸில் அப்போதைய டாப் ஸ்டார். சஸ்பென்ஷனிலும் ஓகே... ஆனால், விலைதான் கொஞ்சம் அதிகம். விலை அதிகமாக இருந்த அளவுக்கு வசதிகள் இல்லை. டாப் வேரியன்ட்டான ஸ்டிலாவில் 100bhp பவர் வெளிப்படுத்தக்கூடிய 1.6 லிட்டர் இன்ஜின் இருந்தது. `Built like a tank' என்றால் அதற்கு பேலியோதான் உதாரணம்.

இப்போது பேலியோ இல்லை. ஃபியட் நிறுவனத்திடம் இருக்கும் கார்கள் புன்ட்டோ ஈவோ, அபார்த் புன்ட்டோ, லீனியா மற்றும் அர்பன் க்ராஸ். லீனியா தவிர வேறு எந்த காருமே பழைய பேலியோ கொடுத்த திருப்தியைக் கொடுக்கவில்லை. தற்போது ஃபியட்டின் மாஸ் கார் என்றால் அது ஜீப் காம்பஸ்தான். இது எஸ்யூவி காலம்! 

3. இனோவா

ஸ்விஃப்ட், இனோவா, சான்ட்ரோ...அப்போ அப்படி... இப்போ எப்படி?! #10YearChallenge

எம்யூவி என்றாலே இனோவாதான் நினைவுக்கு வரும். பெர்சனல் காராக இருந்தாலும் சரி, கமர்ஷியல் மார்க்கெட்டாக இருந்தாலும் சரி இனோவா வாங்குவதுதான் பெஸ்ட் என்பார்கள். குறைந்த அளவில் இருந்த யூட்டிலிட்டி வகை கார்களின் விற்பனை முன்னோக்கிப் பறக்க காரணம் இனோவாதான். இப்போது விற்பனையில் இருக்கும் இனோவா க்ரிஸ்ட்டாவின் அடிப்படை டிசைன் 2009-ல் வெளியான ஃபேஸ்லிஃப்ட் இனோவாவுடையது. 2004-ல் வெளிவந்த இனோவா 2015 வரை அப்டேட்டுகள் உடன் அவ்வப்போது ட்ரெண்டில் இருக்கும் புதிய வசதிகளை இணைத்து வந்தது. 2015-ல் இரண்டாம் தலைமுறையிடம் இப்போது வரை நிலைத்து நிற்கிறது.

இரட்டைக் காற்றுப் பைகள், பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ் (நான்கு கதவுகளுக்குமே), கீ-லெஸ் என்ட்ரி ஆகிய வசதிகள் இரண்டாம் வேரியன்ட்டான `ஜி’-யில் இருந்தே உண்டு. விலை உயர்ந்த விஎக்ஸ் வேரியன்ட்டில் கிளைமேட் கன்ட்ரோல், டச் ஸ்கிரீன், ஆடியோ சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் கேமரா வசதிகள் வந்தன. இப்போது வரை அப்டேட் செய்ய தேவையே இல்லை என்ற அளவு வசதிகள். 2.5 லிட்டர், 102bhp பவர் அப்போது. இப்போதைய டாப் வேரியன்ட்டான க்ரிஸ்ட்டா 2.7 லிட்டர் இன்ஜினுடன் 178bhp பவரை வெளிப்படுத்துகிறது. இனோவாவின் அப்போதைய விலை ரூ.11-17 லட்சம். இப்போதைய விலை ரூ.20-27 லட்சம் ரூபாய். விலை மட்டும் கூடவில்லை வசதிகள், இன்ஜின் பெர்ஃபாமென்ஸ், சௌகரியம் எல்லாமே கூடியுள்ளது.

4. ஹோண்டா சிட்டி

ஸ்விஃப்ட், இனோவா, சான்ட்ரோ...அப்போ அப்படி... இப்போ எப்படி?! #10YearChallenge

இந்தியாவில் ஹோண்டா என்றால் நினைவுக்கு வரும் கார் சிட்டி (இப்போது அமேஸ்). மிட் சைஸ் கார்களில் ஹாட் ஃபேவரைட்டான ஹோண்டா சிட்டி, 2009-ல் புது அவதாரம் எடுத்தது. பெயருக்கு மட்டும் புத்தம் புது ஹோண்டா சிட்டியாக இல்லாமல், உண்மையிலேயே பல அதிரடி மாற்றங்களுடன் வந்தது 2009 சிட்டி. நீளத்திலும், அகலத்திலும் 5 மிமீ அதிகமாகவும் ஏரோடைனமிக் வடிவம் பெறுவதற்காக, உயரம் 25 மிமீ குறைக்கப்பட்டது. இப்போதும் இதே வடிவில்தான் வருகிறது சிட்டி. 2 ஏர்பேக், டிஸ்க் பிரேக், ஏபிஎஸ் அப்போதைய டாப் வேரியன்ட்டில் வந்தவை. இப்போது எல்லா வேரியன்ட்டிலுமே இது ஸ்டாண்டர்டாக வருகிறது. எல்லா அப்டுடேட் வசதிகளும் சிட்டியில் இப்போது இருக்கிறது. 1497cc (P)/1498cc (D) இன்ஜின்கள் உண்டு. 119/100bhp பவர் உண்டு. அப்போது சிட்டியின் விலை ரூ.11-15 லட்சம். இப்போது, ரூ.10.29 - 16.10 லட்சம்.

5. ஹூண்டாய் சான்ட்ரோ

கடந்த ஆண்டு ஆட்டோமொபைல் ஆர்வலர்களால் அதிகம் பகிரப்பட்ட செய்தி சான்ட்ரோவின் ரீ என்ட்ரி. 16 ஆண்டுகள் தயாரிப்பிலிருந்து நிறுத்தப்பட்ட கார் இப்போது மீண்டும் களமிறங்கியுள்ளது. ஹூண்டாயின் சின்ன கார் சான்ட்ரோ. பழைய சான்ட்ரேவின் ப்ளஸ் அதன் விலை, வசதிகள், தரம் மற்றும் சர்வீஸ். மைனஸ் அதன் இன்ஜின், ஓட்டுதல் அனுபவம், பின் பக்க இருக்கைகளில் வரும் அலுங்கல் குலுங்கல்கள். நகரத்தில் 11-12 கி.மீ மைலேஜ். நெடுஞ்சாலைகளில் 16 கி.மீ மைலேஜ். சர்வீஸ் விலை மிக மிகக் குறைவு. அப்போது சான்ட்ரோ (GL+) விலை ரூ.4.01 லட்சம்.

ஸ்விஃப்ட், இனோவா, சான்ட்ரோ...அப்போ அப்படி... இப்போ எப்படி?! #10YearChallenge

இப்போது சான்ட்ரோவின் விலை (asta) ரூ.6.38 லட்சம். போட்டியாளர்களை விட அகலமும், உயரமும் அதிகம். 7 இன்ச் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே, ரியர் ஏஸி வென்ட், ரியர் கேமெரா, ஸ்டீயரிங்கிலேயே ஆடியோ கன்ட்ரோல், பவர் ஸ்டீயரிங், யுஎஸ்பி போர்ட் என ஸ்விஃப்ட்டில் கூட இல்லாத வசதிகள் இதன் விலை குறைவான வேரியன்ட்களிலேயே கிடைக்கிறது. ஹெட்ரெஸ்ட்டை அட்ஜஸ்ட் செய்யும் வசதி எப்போதுதான் தருவார்களோ! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு