Published:Updated:

அல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர்

அல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர்
பிரீமியம் ஸ்டோரி
அல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர்

ஃபர்ஸ்ட் லுக் / டாடா அல்ட்ராஸ்

அல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர்

ஃபர்ஸ்ட் லுக் / டாடா அல்ட்ராஸ்

Published:Updated:
அல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர்
பிரீமியம் ஸ்டோரி
அல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர்

ஜெனிவா மோட்டார் ஷோவில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான அல்ட்ராஸைக் காட்சிப்படுத்தியது டாடா மோட்டார்ஸ். கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 45X கான்செப்ட்டாக வெளிவந்த நிலையில், இப்போது பெலினோ - எலீட் i20 -  ஜாஸ் கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்கியிருக்கிறது அல்ட்ராஸ். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் விற்பனைக்கு வரலாம். கார் பார்க்கப் பெரிதாக தெரிந்தாலும் 3,988 மிமீ நீளம், 1,754 மிமீ அகலம், 1,505 மிமீ உயரம், 2,501 மிமீ வீல்பேஸ் என 4 மீட்டர் கார்களுக்கு உட்பட்ட அளவிலேயே இருக்கிறது டாடா அல்ட்ராஸ்.

அல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர்

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 45X கான்செப்ட்டைப் பார்வைக்கு வைத்தபோதே, `புரொடக்‌ஷன் மாடல், கான்செப்ட் காரைப் போன்ற தோற்றத்தையே கொண்டிருக்கும்’ என டாடா நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு ஏற்றபடியே அல்ட்ராஸின் டிசைன் அமைந்திருக்கிறது. ஹேரியருக்கு அடுத்தபடியாக Impact டிசைன் 2.0 கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், நேர்த்தியான ப்ரொஃபைல், அகலமான ஃபெண்டர், பெரிய வீல்கள் என காரில் மாடர்ன் டச்களைப் பார்க்க முடிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர்

ஜெனிவாவில் பார்வைக்கு வைக்கப்பட்ட மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள் இருந்தது பெரிய ப்ளஸ் (205/50 R17). அல்ட்ராஸின் டாப் வேரியன்ட்களில் இது இருக்கலாம். கச்சிதமான அளவுகள் மற்றும் அதிரடியான டிசைன் என ஓர் ஐரோப்பிய ஹேட்ச்பேக் போல இது காட்சியளிக்கிறது. கேப் ஃபார்வேர்ட் வடிவமைப்பில், டாடாவின் பிரத்யேகமான ஸ்மைலிங் கிரில் அழகாகப் பொருந்தியுள்ளது. வழக்கமான இடத்தில் இருந்து மேலே வைக்கப்பட்டிருக்கும் ஆக்ஸில்லரி லைட்ஸ், புதிய டிசைன் டச்சாகத் தெரிகிறது.

அல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர்

காரின் ஷோல்டர் லைனுக்கு மேலே தடிமனான கறுப்பு நிற பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டிருப்பதால், ஒரு பெரிய காருக்கான க்ளாஸ் ஹவுஸ் மற்றும் விண்டோ லைனுடன் காட்சியளிக்கிறது அல்ட்ராஸ். லம்போர்கினி டயாப்லோவில் இருப்பது போலவே, காரின் முன்பக்கக் கதவில் வேலைப்பாடு உள்ளது. ஸ்விஃப்ட் போலவே பின்பக்கக் கதவின் கைப்பிடி, C-பில்லரில் இருக்கிறது. பின்பக்கக் கதவுக் கண்ணாடியின் வடிவம். ஷார்ப்பான டெயில் லைட், டெயில்கேட்டில் செய்யப்பட்டிருக்கும் கறுப்பு வேலைப்பாடுகள் அழகு. அல்ட்ராஸின் வெளித்தோற்றம்போலவே, உள்புறமும் செம ஸ்டைலாக இருக்கிறது. சென்டர் கன்சோலுக்கு மேலே டச் ஸ்க்ரீன் இருப்பதுடன், ஸ்போர்ட்டியான ஸ்டீயரிங் வீல் மற்றும் அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் செம. கேபினில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மெட்டீரியல்களின் தரம் மற்றும் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் சிறப்பாக இருக்கும் என்கிறது டாடா. ஆனால், போட்டி கார்களுடன் ஒப்பிடும்போது, ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் அவ்வளவு விசாலமாக இல்லை.

அல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர்

வழக்கமான மாடலில் டியாகோவின் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் நெக்ஸானின் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்படலாம். ஜெனிவாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட காரில் இருந்த 1,198 சிசி - 3 சிலிண்டர் - டர்போ பெட்ரோல் இன்ஜின், 102bhp@5,500rpm பவர் மற்றும் 14kgm@1,750rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் லேட்டாக நுழைந்தாலும், லேட்டஸ்ட் அம்சங்களுடன் கம்பீரமாக வந்திருக்கிறது அல்ட்ராஸ். மற்ற டாடா கார்களைப்போலவே, போட்டியாளர்களைவிடக் குறைவான விலையில் இது அறிமுகமாவதற்கான சாத்தியங்கள் அதிகம். எனவே டியாகோவைத் தொடர்ந்து, ஹேட்ச்பேக் பிரிவில் டாடாவின் பெயர் சொல்லும் காராக அல்ட்ராஸ் தலை நிமிர்ந்து நிற்கும் என நம்பலாம்.

- ராகுல் சிவகுரு

அல்ட்ராஸ் எலெக்ட்ரிக்

பல்வேறு பாடி ஸ்டைல்கள் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை உள்ளடக்கக் கூடிய ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் தயாரிக்கப் படவிருக்கும் முதல் காரான அல்ட்ராஸ், காலத்துக்கு ஏற்றபடி எலெக்ட்ரிக் அவதாரத்திலும் வெளிவர உள்ளது. ஜெனிவாவில் அல்ட்ராஸ் EV-ன் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இது விற்பனைக்கு வரலாம். வழக்கமான மாடலுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் மாடலின் பம்ப்பர்கள் மற்றும் வீல்கள் வேறு மாதிரி இருந்தன. மற்றபடி டிசைன் மற்றும் வசதிகளில் மாற்றமிருக்காது. டேஷ்போர்டில் கொஞ்சம் வித்தியாசம் தெரிவதுடன், ஜாகுவார் கார்களில் இருப்பதுபோன்ற ரோட்டரி கியர் செலெக்டர் இடம்பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லாவிட்டாலும், சிங்கிள் சார்ஜில் 250-300 கி.மீ தூரம் செல்லும் எனத் தெரிகிறது. தவிர பாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தி 80 சதவிகித பேட்டரி பவரை, ஒரு மணி நேர சார்ஜிலேயே பெறமுடியுமாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism