Published:Updated:

புது ஃபிகோ... என்னென்ன ஆச்சரியங்கள்?

புது ஃபிகோ... என்னென்ன ஆச்சரியங்கள்?
பிரீமியம் ஸ்டோரி
புது ஃபிகோ... என்னென்ன ஆச்சரியங்கள்?

ஃபர்ஸ்ட் டிரைவ் ஃபோர்டு ஃபிகோ பேஸ்லிஃப்ட்

புது ஃபிகோ... என்னென்ன ஆச்சரியங்கள்?

ஃபர்ஸ்ட் டிரைவ் ஃபோர்டு ஃபிகோ பேஸ்லிஃப்ட்

Published:Updated:
புது ஃபிகோ... என்னென்ன ஆச்சரியங்கள்?
பிரீமியம் ஸ்டோரி
புது ஃபிகோ... என்னென்ன ஆச்சரியங்கள்?

ரு காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் வரப்போகிறது என்றால், அதன் டெக்னிக்கல் விவரங்களைத் தாண்டி அது என்ன முன்னேற்றம் கண்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவே பலரும் ஆசைப்படுவோம். ஆனால், இங்கே நீங்கள் பார்க்கும் ஃபிகோ பேஸ்லிஃப்ட்டில் என்ன இருக்கும் என்பது, எல்லோருக்கும் கடந்த ஆண்டே தெரியும்! ஏனெனில், க்ராஸ் ஓவருக்கேற்ற பாடி பேனல்கள் மற்றும் உயர்த்தப்பட்ட சஸ்பென்ஷன் ஆகியவற்றுடன் வெளிவந்த ஃப்ரீஸ்டைல் காரில் இருந்த பெரும்பான்மையான அம்சங்களே, ஃபிகோ பேஸ்லிஃப்ட்டிலும் உள்ளன. இதனால் இந்த காரை முன்பே பார்த்ததுபோலத் தோன்றலாம். ஆனால், இதில் ஃபோர்டு சில ஆச்சர்யங்களை வைத்திருக்கிறது. அவை என்னென்ன?

புது ஃபிகோ... என்னென்ன ஆச்சரியங்கள்?

விலை `5.97-9.31 லட்சம் (சென்னை ஆன்-ரோடு) I ப்ளஸ் ஓட்டுதல், விலை I மைனஸ் பின்பக்க இடவசதி இன்ஜின் I 1,194 சிசி (பெ) பவர் I 96bhp டார்க் I 12kgm கியர்பாக்ஸ் I 5 ஸ்பீடு MT எடை I 1,026 கிலோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிசைன்

இந்த காரின் டாப் வேரியன்ட்டான டைட்டானியம் புளூ, முதல் சர்ப்ரைஸ். இங்கே கிரில், ரூஃப், பின்பக்கக் கண்ணாடிகள், 15 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை கறுப்பு நிறத்தில் உள்ளன. மேலும், கதவுகள் மற்றும் டெயில்கேட்டில் ஸ்போர்ட்டியான ஸ்டிக்கர்ஸ் உண்டு. இது கடந்த 2017-ல் வெளிவந்த ஸ்போர்ட்ஸ் எடிஷனை நினைவுபடுத்துகிறது. தவிர, இதில் இடம்பெற்றுள்ள 15 இன்ச் அலாய்வீல்களுக்கு ஏற்ப சஸ்பென்ஷன் ரீ-ட்யூன் செய்யப் பட்டுள்ளது. முந்தைய மாடலைப்போல சஸ்பென்ஷனின் உயரம் மற்றும் இறுக்கமான செட்-அப் என இம்முறை மெனக்கெடவில்லை ஃபோர்டு. எனவே, ஃபிகோ பேஸ்லிஃப்ட்டில் இருக்கும் அனைத்து வசதிகளும் வேண்டுமென்றால், டைட்டானியம் புளூ வேரியன்ட்டைத்தான் டிக் அடிக்கணும்.

டைட்டானியம் வேரியன்ட்டில் கறுப்பு நிறத்துக்குப் பதிலாக க்ரோம் ஃபினிஷ் தென்படுவதுடன், பலவிதமான கலர் ஆப்ஷன்களும் உள்ளன. ஆனால், இதில் அளவில் சிறிய 14 இன்ச் அலாய் வீல்கள்தான். மேலும் லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், தானாக இயங்கும் ஹெட்லைட்ஸ் மற்றும் வைப்பர்கள், நான்கு காற்றுப்பைகள் ஆகியவை மிஸ்ஸிங். டாப் வேரியன்ட்டில் இருக்கும் வசதிகள் ஓகேதான் என்றாலும், ஸ்விஃப்ட்போல புரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் LED DRL ஆகியவற்றை காரில் வழங்கியிருக்கலாமே ஃபோர்டு?

புது ஃபிகோ... என்னென்ன ஆச்சரியங்கள்?

கேபின்

காரின் உட்புறம், முன்புபோலவே கறுப்பு நிறத்தில் கவர்கிறது. டச் ஸ்க்ரீனைச் சுற்றி Gloss Black ஃபினிஷ் உள்ளது. டாப் வேரியன்ட்டில் (டைட்டானியம் புளூ) டோர் பேடு மற்றும் சீட்டின் தையல் வேலைப்பாடுகள் ஆகியவற்றில் நீல நிறம் பளிச்சிடுகின்றன. பின்பக்க இருக்கையில் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் இருப்பது ப்ளஸ். ஆனால், முந்தைய மாடலைப்போலவே இங்கும் அதே டல்லான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்தான்.

கேபினின் முன்பக்கத்துடன் ஒப்பிடும்போது, பின்பக்கத்தில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் மிகவும் குறைவு. தவிர, பின் இருக்கையில் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் இல்லை. காருக்குள்ளே 7 இன்ச் டச் ஸ்க்ரீன் புதிது என்பதுடன், இது ரிவர்ஸ் கேமராவுக்கான டிஸ்ப்ளேவாகவும் செயல்படுகிறது. இதில் சாட்டிலைட் நேவிகேஷன் இருக்கிறது என்றாலும், உங்கள் ஸ்மார்ட்போனை இணைக்க முடியாது. SYNC 3 உடனான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே கனெக்ட்டிவிட்டி இல்லாததே இதற்கான காரணம்.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

ஆஸ்பயரில் இருந்த அதே இன்ஜின் – கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே ஃபிகோ பேஸ்லிஃப்ட்டிலும் தொடர்கின்றன. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (96bhp), புதிய 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் (Getrag) இணைக்கப்பட்டுள்ளது. பழைய இன்ஜினுடன் ஒப்பிடும்போது, இதன் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது.  குறைவான வேகங்களில் பவர் டெலிவரி சுணக்கமாக இருந்தாலும், அதன் பின்னே ரெட்லைன் வரை பெர்ஃபாமென்ஸ் அட்டகாசம். இதற்கு, துல்லியமாகச் செயல்படும் புதிய கியர்பாக்ஸ் துணைநிற்கிறது.

புது ஃபிகோ... என்னென்ன ஆச்சரியங்கள்?

இவ்வளவு சிறிய காருக்கு பவர்புல் டீசல் இன்ஜினைப் பொருத்தி அழகு பார்த்திருக்கிறது ஃபோர்டு. 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் வெளிப்படுத்தும் 100bhp-யில் எந்த மாறுதலும் இல்லை; இதிலும் புதிய கியர்பாக்ஸ் உள்ளது பெரிய ப்ளஸ். எனவே, முன்புபோலவே சீரான பவர் டெலிவரி அப்படியே இங்கும் கிடைக்கிறது. 123bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின்கொண்ட மாடலை ஓட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், ஃபியட் அபார்த் புன்ட்டோவின் உற்பத்தி நின்றுபோகும் சூழல் ஏற்பட்டால், இந்த ஃபிகோ மாடல்தான் பவர்புல்லான மாஸ் மார்க்கெட் பெட்ரோல் ஹேட்ச்பேக்காக இருக்கும்!

முதல் தீர்ப்பு

முந்தைய மாடலில் ஐந்து வேரியன்ட்கள் இருந்த நிலையில், புதிய மாடலில் இதை மூன்றாகக் (Ambiente, Titanium, Titanium Blu) குறைத்திருக்கிறது ஃபோர்டு.

5.97 - 9.31 லட்சம் ரூபாய்க்குக் (சென்னை ஆன்-ரோடு விலை) கிடைக்கும் ஃபிகோ பேஸ்லிஃப்ட், ஒவ்வொரு வேரியன்ட்டுக்கும் முன்பைவிட 50 ஆயிரம் ரூபாய் குறைத்திருப்பது வியப்பளிக்கிறது. புதிய வசதிகள் வரவேற்கத்தக்கது எனினும், டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தின் கனெக்ட்டிவிட்டியில் ஃபோர்டு கொஞ்சம் கருணைகாட்டியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

டிராகன் சீரிஸ் இன்ஜின் - Getrag கியர்பாக்ஸ் கூட்டணி, இந்த காருக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பேஸ்லிஃப்ட் ஆக இருந்தாலும் தனது தனித்தன்மையை இந்த கார் இழந்து விடவில்லை. எனவே ஓட்டுதல் அனுபவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள், ஃபிகோ பேஸ்லிஃப்ட்டின் இன்ஜின் மற்றும் கையாளுமையை நிச்சயம் லைக் செய்வார்கள். இத்துடன் காருக்கான வாரன்ட்டி (3 வருட Extension - Complimentary), விலை (முன்பைவிடக் குறைவு) சர்வீஸ் (குறைவான பராமரிப்புச் செலவுகள்) விஷயத்தில் ஃபோர்டு மேற்கொண்டிருக்கும் அதிரடிகள்... ஆசம்!

தொகுப்பு: ராகுல் சிவகுரு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism