Published:Updated:

ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?

ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?
பிரீமியம் ஸ்டோரி
ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?

போட்டி - எண்டேவர் VS பார்ச்சூனர் VS MU-X VS ஆல்ட்டுராஸ் G4

ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?

போட்டி - எண்டேவர் VS பார்ச்சூனர் VS MU-X VS ஆல்ட்டுராஸ் G4

Published:Updated:
ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?
பிரீமியம் ஸ்டோரி
ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?

ன்னதான் செடான் கார்களில் ஜிவ்வென ஹைவேஸில் பறந்தாலும், கரடுமுரடான ஆஃப் ரோடு ஏரியாக்களில் அலுங்கக் குலுங்கப் பயணிப்பதும் ஒரு த்ரில்லிங் அனுபவம்தான். அதற்கு எஸ்யூவி-கள்தான் சரியான சாய்ஸ். அதிலும் லேடர் ஃப்ரேம் எஸ்யூவி-கள் இருந்தால், கவலையே வேண்டாம். எப்படிப்பட்ட ஏரியாவிலும் புகுந்து புறப்படலாம்! XL சைஸ் எஸ்யூவி என்றால், சட்டென ஃபார்ச்சூனர் மற்றும் எண்டேவர்தான் நினைவுக்கு வருகின்றன. இதில் இன்னொரு ஆப்ஷனும் உண்டு. ஜப்பானியத் தயாரிப்பான இசுஸூ MU-X-ன் ரிஃபைன்மென்ட்டும் ஆஃப்ரோடு டிரைவிங்கும் அற்புதமாக இருக்கும். இப்போது இந்தப் போட்டியில் மஹிந்திராவும் சேர்ந்துவிட்டது. ஆம், ஆல்ட்டுராஸ் G4 எஸ்யூவியும் இப்போது களமிறங்கிவிட்டது. இந்த நான்கு லேடர் ஃப்ரேம் பாகுபலிகளையும் கடுமையாக மோதவிட்டால் என்ன?

ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?

கம்பீரம்

மஹிந்திராவில் இருந்து இப்படி ஒரு எஸ்யூவி-யை, இதற்கு முன் பார்த்ததில்லை. டிசைனில் செம ப்ரெஷ் ஆல்ட்டுராஸ். ஸாங்யாங் ரெக்ஸ்ட்டனின் 4-வது ஜெனரேஷன் எஸ்யூவி என்பதுதான் ஆல்ட்டுராஸின் தனி அடையாளம். இதைக் குறிக்கவே `G4’. இது ஸ்மார்ட்டாக இருக்கிறது. ஆனால், எண்டேவர், ஃபார்ச்சூனர் அளவுக்கு ரோடு பிரசென்ஸ் இல்லை. `D’ பில்லருக்கான குவார்ட்டர் கிளாஸ், டொயோட்டாவையும் ஃபோர்டையும்விட சிறியதாகவே இருக்கிறது.

எண்டேவரின் கிரில், பம்பர் கொஞ்சம் மாறியிருக்கின்றன. அதாவது, இது ஃபேஸ்லிஃப்ட் மாடல். சில்வர் கலர் மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல்களில் கார் தகதகக்கிறது. பெரிய பானெட்டும், அதிகப்படியான நீளமும் காரின் கம்பீரத்தைக் கூட்டுகின்றன. நான்கில் இதுதான் நீளமான எஸ்யூவி. (4,903 மிமீ). சுருக்கமாகச் சொன்னால், ஒரு புல்லட் புரூப் வண்டியைப்போல கெத்தாக வலம் வருகிறது ஃபோர்டு எண்டேவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?
ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?

இசுஸூ கடைசியாக, கடந்த ஆண்டில் பேஸ்லிஃப்ட் ஆனது. எண்டேவர் அளவுக்குக் கம்பீரம் என்று இதைச் சொல்ல முடியாது. ஆனால் பார்ப்பதற்கு கிளாமராக இருக்கிறது MU-X. எல்லாவற்றிலுமே 18 இன்ச் வீல்கள் என்பதால், இசுஸூவைப் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

இந்த நான்கில், நீளமும் அகலமும் குறைவான எஸ்யூவி - ஃபார்ச்சூனர்தான். (4,795/1,855 மிமீ). இந்த இரண்டாம் தலைமுறை ஃபார்ச்சூனரிலும் பல மாற்றங்கள். பானெட் வரை நீளும் ஹெட்லைட்ஸ், பின்பக்க டிசைன் என்று பக்கா ரோடு பிரசென்ஸ் ஃபார்ச்சூனரில்... சாலையில் போனாலே ஒரு மரியாதை கிடைக்கும்.

உள்ளே

எல்லாமே உயரமான எஸ்யூவி-கள். அதனால் ஏறி இறங்க ஃபுட்போர்டு அவசியம். ஆல்ட்டுராஸில் ஃபுட்போர்டு எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸில்தான் வாங்க வேண்டும். டிரைவர் கதவைத் திறந்ததும், சீட் தானாகவே பின்பக்கம் நகர்ந்து வெல்கம் செய்கிறது. இது லக்ஸூரி காரில் ஒரு புது முயற்சி. லெதர் சீட்கள் ஓகே. மற்ற மஹிந்திரா கார்கள்போல இல்லாமல், பவர் விண்டோ ஸ்விட்ச்கள் நல்ல தரம். மல்ட்டி இன்ஃபோ டிஸ்பிளே கொண்ட டச் ஸ்க்ரீன் சூப்பர். சில இடங்களில் ஹார்டு பிளாஸ்டிக்குகளும், விலை குறைந்த மெட்டீரியல்களும் தெரிந்தன. ஆனாலும் ஒட்டுமொத்தமாப் பார்க்கும்போது, ஒரு பெரிய லக்ஸூரி எஸ்யூவி-யில் இருப்பதுபோன்ற உணர்வு கிடைக்கிறது.

ஆல்ட்டுராஸ் அளவுக்கு எண்டேவரில் ஒரு லக்ஸூரினெஸ் தெரியவில்லை. ஆனால் உள்ளே ஏறியதும், வேறு உலகத்தில் இருப்பதுபோல இருக்கிறது. முன் சீட்டின் சொகுசு அருமை. ஆங்காங்கே சாஃப்ட் டச் மெட்டீரியல்கள். கொடுத்த பணம் வீணாகவில்லை என்கிற நிம்மதி கிடைத்துவிடும். யூஸர் ப்ரெண்ட்லியான டேஷ்போர்டும், டிஜிட்டலும் அனலாக்கும் கலந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் செம கூல்.

ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?
ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இசுஸூவின் கேபின்  டல் ரகம்தான். கலர் வேலைப்பாடுகள் இன்னும் தேவை. குறைந்தபட்சம் குளோபல் மாடலைப்போல டூயல் டோன் ஃபினிஷாவது கொடுத்திருக்கலாம். ஆனால் டேஷ்போர்டு ஃபினிஷ் ஓகே. தாழ்வாக இருக்கும் டேஷ்போர்டு, வெளிச்சாலை நன்றாகத் தெரிய உதவுகிறது. டிரைவர் சீட் உயரமாக இருப்பதும் காரணமோ என நினைத்தால், அதுதான் இருப்பதிலேயே தாழ்வான செட்டிங். நீண்ட பயணங்களில் லம்பர் சப்போர்ட் இல்லாதது மைனஸ்.

ஃபார்ச்சூனரின் சாக்லேட் - கறுப்பு நிற டேஷ்போர்டு பார்ப்பதற்கு நீட் அண்ட் க்ளீன். டொயோட்டாவில் கம்ஃபர்ட்டுக்குப் பஞ்சம் இருக்காது. ஃபார்ச்சூனரில் ஒரு சொகுசுத்தன்மைக்குப் பதிலாக ஒரு முரட்டுத்தனமான எஸ்யூவி-யில் உட்கார்ந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கேபினில் சில இடங்களில் உள்ள சுமாரான பிளாஸ்டிக்குகளை மாற்றினால் என்ன டொயோட்டா? ரூஃப்லைனிங்கூட அடிப்படை டிசைன்தான். இந்த நான்கில் டொயோட்டாதான் விலை அதிகம் என்பதால், தரமான கேபினை எதிர்பார்ப்பதில் தவறில்லையே?

டிரைவிங்

இந்த மூன்றில் சிறிய இன்ஜின் ஆல்ட்டுராஸில்தான். 2,157 சிசி கொண்ட நான்கு சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜின். ஆனால், பவர் ஃபார்ச்சூனரையும் இசுஸூவையும்விட அதிகம். இதன் பவர் 181 bhp... 2,150 கிலோ எடைகொண்ட ஆல்ட்டுராஸை `ஜிவ்’வென இழுத்துப்போகிறது. எண்டேவரைவிட 240 சிசி குறைவு. ஆனால் அதிசயம் என்னவென்றால்,  0-100 கி.மீ வேகப்போட்டியில் எண்டேவரைவிட சில மில்லிசெகண்ட்தான் குறைவு. இதன் 42 kgm டார்க் டெலிவரி கச்சிதம். இன்ஜின் ரிஃபைன்மென்ட்டும் பக்கா. ஐடிலிங்கில் மற்ற மஹிந்திரா கார்கள் மாதிரி அலறவில்லை. மெர்சிடீஸ் பென்ஸில் இருந்து வாங்கிய 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் செம ஸ்மூத். மஹிந்திரா, அடுத்த லெவலுக்குப் போய்விட்டது.

இங்கு இருப்பதிலேயே தோற்றத்தில் இருந்து இன்ஜின் வரை எல்லாவற்றிலும் பெரியண்ணன் எண்டேவர்தான்! 3.2 லிட்டர், 5 சிலிண்டர் டீசல் இன்ஜின், 3,000 ஆர்பிஎம்-மில் 200 bhp பவரைக் கொடுக்கிறது. 47 kgm டார்க் என்பதால், `சட் சட்’ என எத்தனை பெரிய ஏற்றங்களிலும் எகிறிப் பறக்கிறது எண்டேவர். நான்கில் வேகமான எஸ்யூவி-யும் இதுதான். ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்ததிலிருந்து எடுக்கும்வரை, பவர் கால்களிலேயே ஒட்டிக்கொள்வதுபோல் இருக்கிறது. ஹை ரெவ்களில் சத்தம் போடும் குறை இருந்தது எண்டேவரில். இப்போது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் சில நேரத்தில், இன்ஜின் உறுமத்தான் செய்கிறது.

ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?
ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?

இன்ஜினில் எண்டேவருக்கு அடுத்த பெரிய கை - இசுஸூ. 3.0 லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜின். ஆனால், டார்க்கிலும் பவரிலும் பம்மிப் பதுங்குகிறது MU-X. வெறும் 38 kgmதான். பவர் 177 bhp. 2,105 கிலோ எடைக்கு இந்த டார்க் போதும் என நினைத்துவிட்டது இசுஸூ. இன்ஜினில் இன்னும் கொஞ்சம் வெறித்தனம் வேண்டும். கியர்பாக்ஸும் 5 ஸ்பீடுதான். எனவே ஓவர்டேக்கிங்கிலும் மற்ற நான்கைவிட கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

ஐடிலிங்கிலேயே அதிர்ந்தால், அது டொயோட்டா ஃபார்ச்சூனரின் 2.8 லிட்டர், 4 சிலிண்டர் இன்ஜின்தான். இதிலும் MU-X போலவே பவர் 177 bhp. ஆனால், டார்க் எண்டேவருக்குப் பக்கத்தில் (45 kgm). ஓட்டுவதற்கு லைட் வெயிட்டாக இருக்கிறது ஃபார்ச்சூனர். அதாவது ஸ்மூத்தான பவர் டெலிவரி. இங்கிருப்பதிலேயே வேகமான இன்ஜின் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் ஓட்டுவதற்கு உற்சாகம் கொடுக்கக் கூடிய கார் என்று சொல்லலாம். காரணம், பேடில் ஷிஃப்ட்டர்கள்! மற்ற மூன்றில் இது மிஸ்ஸிங். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் அருமை.

சீட்டிங்

இங்கிருப்பதிலேயே ஆல்ட்டுராஸின் வீல்பேஸ்தான் அதிகம் - 2,865 மிமீ. அதனால் அகலமான கேபினில் லெக்ரூம் தாராளம். நடுவரிசை சீட்களுக்கு ஸ்லைடிங் ஆப்ஷன் இல்லை; மூன்றாவது வரிசை சீட்கள் மிகவும் தாழ்வாக இருப்பதால், தரையில் அமர்ந்திருப்பதுபோல இருக்கிறது. இதுபோக, `D’ பில்லர் வேறு செம தடிமன். வெளியே என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.

எண்டேவர் இந்த விஷயத்தில் ஒரு படி மேலே. நடுவரிசை சீட்கள் ஓகே. இதுவும் தாழ்வாக அமைக்கப்பட்டிருந்தாலும், சீட்டிங் பொசிஷனில் அட்ஜஸ்ட் செய்துவிட்டார்கள். குஷனிங்கும் ஓகே. இதன் உயரம் ஆல்ட்டுராஸைவிடக் குறைவு - 1,837 மிமீ. இதனால் ஹெட்ரூம் கொஞ்சம் டைட். உயரமானவர்களுக்குச் சிக்கல்தான். பனோரமிக் சன்ரூஃப்கூடக் காரணமாக இருக்கலாம். மற்ற கார்களைவிட பெரிய ஜன்னல் என்பதால், வெளிச்சாலை ஓகே! ஆனால், உள்ளே போய் வர கொஞ்சம் பயிற்சி தேவை!

ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?
ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?

ஆல்ட்டுராஸ் போலவே, MU-X காரின் நடுவரிசை சீட்களையும் ஸ்லைடு பண்ண முடியாது. எல்லாவற்றுக்கும் அளவான இடமே ஒதுக்கியிருக்கிறார்கள். கடைசி வரிசைகூட ஓகேதான். ஆனால் ஹெட்ரூம் போதவில்லை. உயரமான இளசுகளுக்குத் தலை இடிக்கும். இசுஸூவில் எல்லாமே ஓகே ரகம்தான்; கடைசி வரிசை சீட்கள், மற்ற இரண்டைவிட ஓகே!

ஃபார்ச்சூனரில் நடுவரிசை சீட்டிங் சூப்பர். வசதியிலும்தான். ஆம்! ஒரு டச் போதும் - இதன் சீட்களை பின்பக்கம் ஸ்லைடு செய்து கொள்ளலாம். இதனால் லெக்ரூம் சூப்பர். எண்டேவரை விட 2 மிமீ உயரம் குறைவானது ஃபார்ச்சூனர். அதனால் வழக்கம்போல, இதிலும் ஹெட்ரூம் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. மூன்றாவது வரிசை சீட்கள் விஷயத்தில், மற்ற கார்களைப்போல் தண்டனை தரவில்லை டொயோட்டா.   

சஸ்பென்ஷன்

ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?

முதலில் ஆல்ட்டுராஸின் லைட் வெயிட் ஸ்டீயரிங்குக்கு ஒரு லைக். மலையேற்றங்களில் திருப்பி வளைக்க ஜாலி. ஆனால் இந்த லைட் வெயிட் உணர்வு, அதிவேகங்களிலும் தொடர்வதற்கு டிஸ்லைக். மேடு பள்ளங்களில் ஓகே. குறைந்த வேகங்களில் லேடர் ஃப்ரேம் சேஸி என்பது நிரூபணமாகிறது. இறுக்கமாக அமர வேண்டியிருக்கிறது. சில மோசமான வளைவுகளில், இதன் கட்டுமானம் மற்றவற்றைப்போல இல்லை. இன்னும் கொஞ்சம் உறுதித் தன்மை வேண்டும்.

மேடு பள்ளங்களை உள்வாங்குவதில் எண்டேவர், வாவ்! சில மோசமான இடங்களில் காரை நிறுத்திப் பயணிக்க வேண்டிய அவசியமில்லை. ஏறி இறங்கிப் போய்க்கொண்டே இருக்கலாம். இந்த பாடி-ஆன்-ப்ரேம் எஸ்யூவி-யின் கேபினுக்குள் எந்த இடத்திலும் அதிர்வுகள் தெரியவே இல்லை. சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்-அப் என்பதால், லேசாகத் தூக்கிப்போடலாம். ஸ்டீயரிங்கும் லைட் வெயிட்.சிட்டிக்குள்ளும் மலையேற்றங்களிலும் ஃபன் கிடைக்கும். எண்டேவரிலும், வேகங்களில் ஸ்டீயரிங் உணர்வில் ஏதோ ஒரு தயக்கம்.

ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?

MU-X-ல் ஸ்டீயரிங்கின் எடை அதிகம். சிட்டிக்குள் மற்ற கார்கள் அளவுக்குச் சுலபமாக இல்லை. அப்படியென்றால் வேகங்களில் பக்காவாக இருக்கும் என நினைத்தால், அங்கேயும் இசுஸூ லேசாக ஏமாற்றிவிடுகிறது. குறைந்த வேகங்களில் இது எண்டேவருக்கு அடுத்தபடியான பயண உணர்வைத் தருகிறது. ஓட்டுதல் தரம், கலந்துகட்டி இருக்கிறது. அதிவேகங்களில் மட்டும் இசுஸூவின் நிலைத்தன்மை... அபாரம்.

இசுஸூவைப்போலவே டொயோட்டாவிலும் எடை அதிகமான ஸ்டீயரிங். `சிட்டிக்குள் இவ்வளவு பெரிய காரை ஓட்டுறோமே!’ என்கிற தயக்கம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இதன் ஹைட்ராலிக் ஸ்டீயரிங் அதிவேகங்களில் நம்பிக்கையாக அமர்ந்துகொள்ளச் செய்கிறது. பாடி ரோல்கூடப் பெரிதாக இல்லை. கொஞ்சம் இறுக்கமான சஸ்பென்ஷன் செட்-அப், குறைந்த வேகங்களில் நம்மைக் கொஞ்சம் விறைப்பாகவே பயணிக்கவைக்கிறது.

ஆஃப்ரோடிங்

ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?

இந்த நான்குமே ஆஃப்ரோடிங்குக்குப் பக்காவான எஸ்யூவி-க்கள். நான்கிலுமே 4வீல் டிரைவ், ஹில் டிஸன்ட் கன்ட்ரோல், லோ-ரேஞ்ச் கியர் ஆப்ஷன் எனப் பட்டையைக் கிளப்புகின்றன. இவற்றில் எது பெரிது என்று வகைப் பிரித்துச் சொல்ல முடியாது.

எல்லா கார்களையும் 4 வீல் லோ கியரில் செட் செய்து, ஆஃப்ரோடில் அலறவிட்டோம். சின்னச் சின்ன வித்தியாசங்கள்தான். ஆல்ட்டுராஸில்தான் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ். பயமின்றி ஏறலாம் இறங்கலாம்; ஆனால் அந்த ஃபுட்போர்டு மாட்டினால், நிச்சயம் அடிவாங்கும். டிப்பார்ச்சர் ஆங்கிளும் இன்னும் கொஞ்சம் தாராளமாக இருக்க வேண்டும். இதனால், தாழ்வான இறக்கத்தில் செல்லும்போது, கார் முன்பக்கத்தில் அடிவாங்கும்.

எண்டேவரில் டிப்ரன்ஷியல் லாக், இன்னும் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கும். ஆனால் இது பின்பக்கத்துக்கு மட்டும்தான். அதாவது வழுக்கலான ஏரியாக்களில் காரின் டிப்ரன்ஷியலை லாக் செய்து, தேவையான வீல்களுக்கு மட்டும் டிராக்‌ஷன் கிடைக்க வைப்பதுதான் இதன் அம்சம். கூடவே டெரெய்ன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் வசதியும் உண்டு. நார்மல்-சேண்ட்-ராக் அண்ட் ஸ்நோ-மட் அண்ட் கிராஸ் என்று 4 மோடுகள், ஏரியாவுக்குத் தகுந்தாற்போல் செலெக்ட் செய்து கொண்டு பறக்கலாம்.

தொகுப்பு: தமிழ்

ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?

சுஸூவில் எண்டேவர் அளவுக்கு எலெக்ட்ரானிக் அம்சங்கள் கொட்டிக் கிடக்கவில்லை. ஆனால், ஆபத்தான ஏரியாக்களில் MU-X போன்ற ஒரு எஸ்யூவி இருந்தால், அசால்ட்டாக மீண்டு வரலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனரை, வரையாடு என்றுகூடச் சொல்லலாம். தாழ்வான இறக்கங்கள், மேடான ஏற்றங்கள் எல்லாவற்றிலும் இதன் அப்ரோச் ஆங்கிள், டிப்பார்ச்சர் ஆங்கிள் அற்புதம். காட்டுத்தனமான பயணத்துக்கு, முரட்டுத்தனமான ஒரு ஆஃப்ரோடு டிரைவ் ஃபார்ச்சூனரில் செய்து பாருங்கள். ஆசமாக இருக்கும்.

இசுஸூ - ஒரு முரட்டுத்தனமான எஸ்யூவிதான். நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ், 7 பேர் பயணிக்க வசதியான எஸ்யூவி, மஹிந்திரா ஆல்ட்டுராஸைவிட MU-X சுமார் 1 லட்சம் ரூபாய் குறைவான விலை. ஆனால் கொடுக்கும் காசுக்கு இசுஸூ திருப்திப்படுத்துகிறதா என்றால்... ஸாரி! குறைவான நெட்வொர்க்கும் ரிஃபைன்மென்ட் குறைவான இன்ஜினும், இன்னும் மேம்பட வேண்டும் இசுஸூ!

படுத்தி எடுக்காத மூன்றாவது வரிசை சீட்கள், ஒரு தொடுதல் மூலம் நடு சீட்களை ஸ்லைடு செய்துகொள்ளும் வசதி, பேடில் ஷிஃப்ட்டர்கள், அம்சமான ஆஃப்ரோடிங் திறன், அதைவிட முக்கியமாக டீலர் நெட்வொர்க் - எல்லாம் டொயோட்டாவின் பலம். ஃபார்ச்சூனரை நம்பி வாங்கும் பலர் இன்னும் இருக்கிறார்கள். ஆனால், விலைதான் கண்ணைக் கட்டுகிறது. மஹிந்திரா, இசுஸூவைவிட சுமார் 4.5 லட்சம் அதிகம் கொடுக்க வேண்டும் என்பது நெருடல். எண்டேவரைவிடவும் சுமார் 2 லட்சம் அதிகம் என்பது உங்களுக்கு ஓகேவா?

பாகுபலி உடம்பு, பல்க்கியான தோற்றம், கட்டுமானத் தரத்தில் ஃபோர்டைச் சந்தேகப்பட முடியுமா? பவர்ஃபுல் டீசல் இன்ஜினின் சக்தி அபாரம்! ஓட்டுதல் தரமும் அற்புதம். ஃபன் டு டிரைவை காலம் காலமாகக் காப்பாற்றிவருகிறது ஃபோர்டு. அதிலும் அந்த 4 மோடுகள் இருக்கும்போது, தண்ணீரா... சேறா... சகதியா... மேடா... பள்ளமா... எதுவும் பிரச்னை இல்லை. இதிலும் விலைதான் பயமுறுத்துகிறது.

மூன்றாவது வரிசைதான் முக்கியம் என்றால், தயவுசெய்து மஹிந்திராவில் இருந்து விலகி வந்துவிடுங்கள். ஆனால் உயர்தர கேபின், இன்ஜின் ரிஃபைன்மென்ட், ப்ரீமியம் வசதிகள், 9 காற்றுப்பைகள், யாரிடமும் இல்லாத வென்டிலேட்டட் சீட், 360 டிகிரி கேமரா, ஹேண்ட்ஸ் ஃப்ரீ பூட் வசதி, ஆஃப்ரோடு அம்சங்கள் என ஆல்ட்டுராஸ் கலக்குகிறது! இதன் விலை... ஆனந்தக் கண்ணீர் வருகிறது. ஃபார்ச்சூனரைவிட, எண்டேவரைவிட ஏறக்குறைய 5 லட்சம் குறைவாக இருக்கிறது ஆல்ட்டுராஸ். எல்லாமும் இருக்கும், எதுவும் குறை சொல்ல முடியாத, கொடுக்கும் விலைக்கு மதிப்பான ஆல்ட்டுராஸ்தான் இந்த அண்ணன்களில் வின்னர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism