Published:Updated:

SPY PHOTO - ரகசிய கேமரா

SPY PHOTO - ரகசிய கேமரா
பிரீமியம் ஸ்டோரி
SPY PHOTO - ரகசிய கேமரா

SPY PHOTO - ரகசிய கேமரா

SPY PHOTO - ரகசிய கேமரா

SPY PHOTO - ரகசிய கேமரா

Published:Updated:
SPY PHOTO - ரகசிய கேமரா
பிரீமியம் ஸ்டோரி
SPY PHOTO - ரகசிய கேமரா
SPY PHOTO - ரகசிய கேமரா

மீண்டும் வருகிறது சீன பைக்!

CFMoto
... இந்த சீன பிராண்ட் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே? ஆம், 3 ஆண்டுகளுக்கு முன்பு Eider Motors எனும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, நம் ஊரில் ஸ்கூட்டர் - பைக் ஆப்ஷன்களுடன் களமிறங்கியது இந்த நிறுவனம். ஆனால் மோசடி வழக்கில் Eider Motors-ன் நிறுவனர் அதிரடியாகக்  கைது செய்யப்பட்டதால், புதிய கூட்டணியுடன் CFMoto இந்தியாவில் மீண்டும் அறிமுகம் ஆக உள்ளது.

இந்த நிலையில் CFMoto 250NK எனும் நேக்கட் பைக்கை ஓசூரில் படம் பிடித்திருக்கிறார், மோ.வி வாசகரான நித்திஷ். 249சிசி - சிங்கிள் சிலிண்டர் - DOHC - 4 வால்வ் - லிக்விட் கூல்டு - ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இன்ஜின், ஸ்லிப்பர் க்ளட்ச் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

SPY PHOTO - ரகசிய கேமரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது 26.5bhp@9,000rpm பவர் மற்றும் 2.2kgm@7,500rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 250NK பைக்கின் டாப் ஸ்பீடு 128 கி.மீ என்கிறது CFMoto. டிரெல்லிஸ் ஃப்ரேமில் இன்ஜின் தவிர, USD ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் சேர்க்கப்பட்டிருக்கிறது. முன்பக்கத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 245 மிமீ டிஸ்க் பிரேக்ஸ் இடம்பெற்றுள்ளன. டூயல் சேனல் ஏபிஎஸ் உண்டு.

கட்டுமஸ்தான 12.5 லிட்டர் பெட்ரோல் டேங்க்கைக்கொண்டிருக்கும் CFMoto 250NK பைக்கின் எடை 151 கிலோ. ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, அசப்பில் கேடிஎம் டியூக் சீரிஸ் பைக்குகளை நினைவுபடுத்தும்படியான டிசைன் இருந்தாலும், சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் - வலதுபுறத்தில் டிஸ்க் பிரேக் அமைப்பு - ஸ்டார் வடிவ ஸ்போக்குகளைக்கொண்ட அலாய் வீல்கள் எனச் சின்னச் சின்ன வித்தியாசங்கள் தெரிகின்றன.

First In Class சிறப்பம்சமாக, Rain - Sport என டிரைவிங் மோடுகள் இருப்பது பெரிய ப்ளஸ். பைக்கின் விலை 2.2 லட்சம் ரூபாயாக இருக்கலாம்! 250சிசி பைக்குகளுக்கு, சீனாவிலிருந்து ஒரு போட்டி ரெடியாகிக் கொண்டிருக்கிறது.

250NK பைக்கைப் படம் எடுத்து அனுப்பிய வாசகர் நித்திஷுக்கு, ஓர் அற்புதமான பரிசு காத்திருக்கிறது.

ரெனோவின் அடுத்த 7 சீட்டர்!

போ
ட்டி மிகுந்த இந்திய கார் சந்தையின் எம்பிவி பிரிவில் கோலோச்சுவது, மாருதி சுஸூகியின் எர்டிகாதான். இந்த காரின் முதல் தலைமுறை மாடலுக்குப் போட்டியாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ரெனோ களமிறக்கிய கார்தான் லாஜி. எர்டிகாவுடன் ஒப்பிடும்போது அதிக இடவசதி - பவர்ஃபுல் இன்ஜின் - சிறப்பான ஓட்டுதல் அனுபவம் என டெக்னிக்கலாக லாஜி அசத்தியது என்றாலும், வெற்றியடைய வில்லை. அதனால். எர்டிகாவைவிட விலையில் குறைவான ஒரு புதிய எம்பிவி-யைக் கொண்டுவர ரெனோ திட்டமிட்டுள்ளது. RBC என்கிற குறியீட்டுப் பெயரால் அழைக்கப்படும் இந்த கார், டெஸ்ட்டிங்கில் இருக்கும்போது படம் பிடித்திருக்கிறார், மோ.வி வாசகர் ஆர். சரவணராஜ்.

SPY PHOTO - ரகசிய கேமரா

க்விட் தயாரிக்கப்படும் CMF-A பிளாட்ஃபார்மின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனான CMF-A+ல், இந்த காம்பேக்ட் எம்பிவி தயாரிக்கப்படவுள்ளது. எதிர்பார்த்தபடியே லாஜிக்குக் கீழே பொசிஷன் செய்யப்படவிருக்கும் இது, நான்கு மீட்டருக்குட்பட்ட காராகும். க்விட்டில் இருக்கும் 3 சிலிண்டர் BR10 - 1 லிட்டர் SCe பெட்ரோல் இன்ஜின்தான் RBC-யிலும். ஆனால், கூடுதல் செயல்திறனுக்காக டர்போசார்ஜர் உண்டு. 5 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருக்கும். வருகிற ஜூலையில் வரவிருக்கும் இதன் ஆரம்ப விலை 5 லட்சம் ரூபாயாக இருக்கும். பட்ஜெட் விலையில் 7 சீட் கார் என்பது வெற்றிக்கான ஃபார்முலாதான். ஆனால், இதே ரூட்டில் வந்த டட்ஸன் கோ ப்ளஸ்? அதனால் டட்ஸன் கோ ப்ளஸ் காரில் செய்த தவறுகளைச் செய்யாமல் இருந்தால் மட்டுமே இந்த மினி எம்பிவி ஜெயிக்கும்!

ரெனோ எம்பிவி-யைப் படம் எடுத்து அனுப்பிய வாசகர் ஆர்.சரவணராஜுக்கு, ஓர் அற்புதமான பரிசு காத்திருக்கிறது.

டையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism