Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

``நான் RE க்ளாஸிக் 350 பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். பெட்ரோல் விலையும் மைலேஜும் எனக்குக் கட்டுப்படியாகவில்லை. எனவே, எலெக்ட்ரிக் டூ-வீலர் வாங்கலாம் என்ற யோசனையில் இருக்கிறேன். சிங்கிள் சார்ஜில் 100 கி.மீ ஓடக்கூடிய வாகனங்கள் எவை? எலெக்ட்ரிக் டூ-வீலர் செக்மென்ட்டில், ஏதும் புதிய வாகனங்கள் வரப்போகின்றனவா?’’
-  ப. ஜெயப்பிரகாஷ், பண்ருட்டி.


``Ultra Violette, 22 மோட்டார்ஸ், Emflux போன்ற புதிய நிறுவனங்கள், தமது எலெக்ட்ரிக் டூ-வீலர்களை இந்தியாவில் களமிறக்க உள்ளன. வருங்காலத்தில் (2020-ம் ஆண்டில்) பஜாஜ், பெனெல்லி, சுஸூகி, யமஹா போன்ற பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகள் வரலாம். ஏற்கெனவே ஹீரோ, ஆம்பியர், ஒகினவா, ஏத்தர், ரொமாய், யோ பைக்ஸ், விஜயா என பல நிறுவனங்கள், இந்தியாவில் தமது எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனை செய்து வருகின்றன. இதில் ஹீரோவின் ஃபோட்டான் கவனம் ஈர்க்கக் கூடியது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எடை குறைவான 48v/28ah லித்தியம் ஐயன் பேட்டரி இருந்தும், சிங்கிள் சார்ஜில் 110 கி.மீ மட்டுமே செல்ல முடியும் (அதுவும் எக்கானமி மோடில்). பவர் மோடில் வண்டியை ஓட்டினால், இதன் ரேஞ்ச் 85 கிமீ மட்டுமே! பவர்ஃபுல்லான 1000W/1500W BLDC Hub மோட்டார் இருந்தும், ஃபோட்டான் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 45 கிமீதான்! தவிர பேட்டரியை ஃபுல் சார்ஜ் ஏற்ற 4-5 மணி நேரம் ஆகும். எனவே, எலெக்ட்ரிக் டூ-வீலர்தான் வேண்டுமென்றால், அதிக ரேஞ்ச்கொண்ட மாடல்கள் வரும் வரை காத்திருப்பது நலம். புதிய வாகனம் மிகவும் அவசரமென்றால், மைலேஜுக்குப் பெயர்போன 100சிசி பைக்குகளில் ஏதேனும் ஒன்றை வாங்கலாம்.’’

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கை வாங்க உள்ளேன். இதன் விலையில் கிடைக்கும் மற்ற ஆப்ஷன்கள் என்னென்ன?’’
-  சரவணன், இமெயில்.


`` `இந்தியன் மோட்டார் சைக்கிள் ஆஃப் தி இயர் 2019’ விருதைப் பெற்ற ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக். ஸ்மூத்தான 2 சிலிண்டர் இன்ஜின், ரெட்ரோ டிசைன், சிறப்பான ஓட்டுதல் அனுபவம், ஏபிஎஸ் - ஸ்லிப்பர் க்ளட்ச் - பைரலி டயர்கள் என அசத்துகிறது. ஆனால் குறைவான வசதிகள், பழைய தோற்றம், அதிக எடை, நிரூபிக்கப்படாத நம்பகத்தன்மை, அதிக பராமரிப்புச் செலவுகள் என சில மைனஸ்களும் உண்டு. எனவே, பைக்கை ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு முடிவெடுக்கவும். பஜாஜ் டொமினார் D400, டிவிஎஸ் அப்பாச்சி RR 310, ஹோண்டா CB300R, கேடிஎம் டியூக் 390, கவாஸாகி நின்ஜா 300, பிஎம்டபிள்யூ G310R ஆகியவை மற்ற சாய்ஸ்.’’

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

``கடந்த ஏழு ஆண்டுகளாக, ரெனோ டஸ்ட்டர் காரைப் பயன்படுத்தி வருகிறேன். எனது பட்ஜெட் 15 லட்ச ரூபாய். எஸ்யூவி-தான் வேண்டும்! டாடா நெக்ஸான் மற்றும் மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா ஆகியவை பிடிக்கவில்லை. ஹூண்டாய் க்ரெட்டாவின் விலை அதிகமாக உள்ளது. எனவே ஃபோர்டு எக்கோஸ்போர்ட், ரெனோ கேப்ச்சர் ஆகியவற்றில் எதை வாங்கலாம்?’’
- கலைச்செல்வன், சென்னை.


``உங்கள் தேவைகளைப் பார்க்கும்போது, கேப்ச்சர் உங்களுக்கான Upgrade-ஆக இருக்கலாம். இது க்ராஸ்ஓவர் டிசைனில் கவர்ந்தாலும், மெக்கானிக்கலாக இது டஸ்ட்டர்தான். அதாவது ப்ளாட்ஃபார்ம் - இன்ஜின்/கியர்பாக்ஸ் - ஸ்டீயரிங்/சஸ்பென்ஷன் ஆகியவை இரண்டு கார்களுக்குமே ஒன்றுதான்! டஸ்ட்டருடன் ஒப்பிடும்போது கேபின் மாடர்னாக இருந்தாலும், பல பாகங்கள் டஸ்ட்டரில் இருந்தே பெறப்பட்டுள்ளன. எனவே, காரின் கட்டுமானத்தில் மாற்றங்கள் இருந்தாலும், ஓட்டுதல் அனுபவத்தில் கேப்ச்சர் டஸ்ட்டர் போலவே இருக்கும். ஐரோப்பிய டிசைன், ஸ்டைலான கேபின், அதிக சிறப்பம்சங்கள், அசத்தலான ஓட்டுதல் அனுபவம் - நல்ல பிராண்ட் மதிப்பு எனச் சிறப்பான பேக்கேஜாகக் கவர்கிறது ஃபோர்டு எக்கோஸ்போர்ட். ஆனால் உங்கள் டஸ்ட்டருடன் ஒப்பிடும்போது, இதன் குறைவான இடவசதி மைனஸ். எனவே ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அதிக டிஸ்கவுன்ட்டில் கிடைக்கும் கேப்ச்சர், உங்களுக்கான சாய்ஸாக இருக்கலாம்.’’

``யூஸ்டு கார் வாங்கும் முடிவில் இருக்கிறேன். எனது பட்ஜெட்டில் மாருதி சுஸூகி வேகன்-R கிடைக்கிறது. அந்த காரின் ப்ளஸ், மைனஸ் என்ன? தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.’’
- கே. சம்பத் குமார், இமெயில்.


``உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைகளை நீங்கள் குறிப்பிடவில்லை. எனினும், யூஸ்டு கார் மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய நல்ல சாய்ஸ்களில் ஒன்றுதான் வேகன்-R.

BS-4 மாசு விதிகளுக்கு உட்பட்ட மாடல்களைத் தேடிப் பார்க்க வேண்டும். அது 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிந்தைய கார்களாகவே இருக்கும். இது, முதல்முறையாக கார் ஓட்டுபவருக்கான மாடலாக இருப்பதுடன், குறைவான பராமரிப்புச் செலவுக்கும் ஏற்றது. ஒரு சிறிய குடும்பம், வசதியாகப் பயணிக்கும் அளவுக்கு இடவசதி இருப்பது ப்ளஸ். ஆனால், நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் பயணிப்பதற்கான கார் இதுவல்ல. காரின் டிசைன் & குறைவான எடை நிலைத்தன்மைக்கு ஈடுகொடுக்காது.’’

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

``நான் டொயோட்டா இனோவா ஒன்றை யூஸ்டு மார்க்கெட்டில் வாங்கி, அதில் எல்பிஜி கிட் பொருத்தும் முடிவில் இருக்கிறேன். எனது மாதாந்திரப் பயன்பாடு 1,000 கி.மீதான் என்றாலும், நகரம் - நெடுஞ்சாலை என அது சமவிகிதத்தில் உள்ளது. டீசலைவிட LPG-யில் காரை இயக்குவது என்பது மைலேஜ் - பாதுகாப்பு - பராமரிப்பு ஆகியவற்றில் லாபகரமாக இருக்குமா? சொகுசு மற்றும் மைலேஜ் ஆகியவையே எனக்கு முக்கியம்.’’ 
- பி. ஃபெலிக்ஸ், திருநெல்வேலி.


``உங்கள் தேவைகளைப் பார்க்கும்போது, டொயோட்டா இனோவாவின் பெட்ரோல் மாடல் நல்ல சாய்ஸாகத் தெரிகிறது. நம்மூரில் CNG இல்லை என்பதால், LPG நல்ல சாய்ஸ்தான். ஆனால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் பெட்ரோல் இனோவா கிடைப்பது சிரமம். என்றாலும் காத்திருந்து பெட்ரோல் மாடலை வாங்கப் பாருங்கள். ஏனெனில், இனோவாவின் டீசல் மாடலில் LPG கிட் செட்டாகாது. பெட்ரோல் மாடலில் LPG பொருத்துவதாக இருந்தாலும் முறையான சான்றிதழ்கொண்ட LPG கிட்டை, சரியான இடத்தில் வாங்கிப் பொருத்துவது அவசியம். Lovato, MG Auto Gas, Innovative போன்ற நிறுவனங்களின் LPG கிட்கள் ஓகே!

``கடந்த ஐந்து ஆண்டுகளாக ஹோண்டா ட்ரீம் நியோ பைக்கைப் பயன்படுத்திவருகிறேன். தற்போது அதைக் கொடுத்துவிட்டு, புதிதாக 110-125சிசி பைக் ஒன்றை வாங்க உள்ளேன். பஜாஜின் பிளாட்டினா 110ES அல்லது டிஸ்கவர் 125, ஹோண்டா ஷைன் அல்லது ஷைன் SP ஆகியவற்றில் எதை வாங்கலாம்? எனது பட்ஜெட் 60-70 ஆயிரம் ரூபாய்.’’
-  குமரேசன்,  சென்னை.


``நீங்கள் குறிப்பிட்டதிலேயே கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காக இருப்பது பிளாட்டினா 110ESதான். இதில் டிஸ்கவர் 110 பைக்கில் இருக்கும் 115.45சிசி இன்ஜின் இருப்பதுடன், அந்த பைக் போலவே இதிலும்  LED DRL - Nitrox சஸ்பென்ஷன் உள்ளது. தவிர, டியூப்லெஸ் டயர்கள் மற்றும் Anti-Skid பிரேக்ஸ் இருப்பது ப்ளஸ். வழக்கமான ஷைனைவிடக் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய டிஸ்கவர் 125 பைக்கில் டேக்கோமீட்டர் - ட்ரீப் மீட்டருடன்கூடிய அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், LED DRL, Nitrox சஸ்பென்ஷன், அகலமான டயர்கள், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், 11bhp பவரைத் தரும் 124.5சிசி இன்ஜின் என அசத்துகிறது. ஆனால், நீங்கள் ஹோண்டா தயாரிப்புக்கு ஏற்கெனவே பழகிவிட்டதால், `இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் 125சிசி பைக்’ என்ற பெருமையைக் கொண்டிருக்கும் ஷைன், உங்களைக் கவர்வதற்கான வாய்ப்புள்ளது. அதற்கு ஸ்மூத் இன்ஜின் - நம்பகத்தன்மை - ரீசேல் மதிப்பு ஆகியவையே காரணம்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism