Published:Updated:

ஹைபிரிட் அதிசயம்! - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி

ஹைபிரிட் அதிசயம்! - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி
பிரீமியம் ஸ்டோரி
ஹைபிரிட் அதிசயம்! - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி

ஹைபிரிட் அதிசயம்! - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி

ஹைபிரிட் அதிசயம்! - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி

ஹைபிரிட் அதிசயம்! - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி

Published:Updated:
ஹைபிரிட் அதிசயம்! - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி
பிரீமியம் ஸ்டோரி
ஹைபிரிட் அதிசயம்! - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி

ரவு 2 மணி... கிழக்குக் கடற்கரைச் சாலையில் பைக்  திடீரெனக் கோளாறாகி நின்றுவிட, அப்போது ஒரு சொகுசு காரில் லிஃப்ட் கிடைத்தால் எப்படி இருக்கும்... அதுவும், லிஃப்ட் கொடுப்பது நயன்தாரா என்றால்! `இதெல்லாம் கனவில்கூட நடக்காது!’ எனக் கலாய்க்காதீர்கள். 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கொண்ட டொயோட்டா கேம்ரி, பெஸ்ட் மைலேஜ் கார்களான செலெரியோ, ஆல்ட்டோவைவிட அதிக மைலேஜ் கொடுக்கும்போது, சில கனவுகள் பலிப்பதில் ஆச்சர்யமில்லை. உலகளவில் ஹைபிரிட் தொழில்நுட்பம் பெருமளவு முன்னேறியிருப்பதற்கு, சமீபத்தில் விற்பனைக்கு வந்த கேம்ரி ஓர் உதாரணம். இன்னும் பிரபலமாகாத ஹைபிரிட் சந்தையில் களமிறங்கியிருக்கும் கேம்ரியின் வேக,விவேகத்தைப் பார்ப்போம்.

ஹைபிரிட் அதிசயம்! - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி

தொழில்நுட்பம்

டொயோட்டா கேம்ரி 17.13 கி.மீ அராய் மைலேஜ் தருவதற்குக் காரணம், THS II ஹைபிரிட் சிஸ்டம். இது ப்ரையஸில் இருக்கும் அதே சிஸ்டம்தான். ஆனால் இங்கு மைலேஜ் அதிகமாகக் கிடைப்பதற்குக் காரணம், ஹைபிரிட் இல்லை; 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான். இந்த இன்ஜினில் மொத்தம் 8 ஃப்யூல் இன்ஜெக்டர்களைப் பொருத்தியுள்ளார்கள். வெப்பத்தை மெக்கானிக்கல் எனர்ஜியாக மாற்றுவது ஒரு இன்ஜினின் கடமை. இதை `Thermal Efficiency’ என்பார்கள். உலகிலேயே Thermal efficiency தற்போது அதிகமாக இருப்பது கேம்ரி இன்ஜினில்தான். (41 சதவிகிதம்). இன்ஜின் ஒரு பக்கம் திறனை அள்ளி வீச, ஹைபிரிட் சிஸ்டமும் தன் பங்குக்கு வேலை செய்கிறது. பழைய கேம்ரியைவிட புது காரில் மோட்டார்/ஜெனரேட்டர் அதிக நேரம் பயன்பாட்டில் இருக்கும்படி செய்துள்ளார்கள். இது முன்பைவிட 28 சதவிகிதம் அதிக திறனை உருவாக்குகிறதாம்.

கேம்ரி, டொயோட்டாவின் புதிய TNGA-K பிளாட்ஃபார்மில் தயாராகிறது. இது லேடர் சேஸிக்கு இணையாக, 30 சதவிகித அதிக உறுதியோடும், அதேசமயம் எடை குறைவானதாகவும் இருக்கும். ஹைபிரிட் சிஸ்டத்தின் பேட்டரி - பின்பக்க சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டுள்ளதால், பின்சீட்டில் இருப்பவருக்கு அதிக இடம் மட்டுமல்ல, 524 லிட்டர் பூட் ஸ்பேஸும் கிடைத்துள்ளது.

கேபின்

அதிகப்படியான மைலேஜ், காற்று மாசு ஏற்படுத்தாத இன்ஜின் போன்றவை இருந்தாலும், 45 லட்சம் ரூபாய் கொடுத்து கார் வாங்குபவர்களின் முக்கியத் தேவை, சொகுசான கேபின். அதனால், பின் சீட் பயணிக்கு லெக்ரூம் தாராளமாக உள்ளது. சீட்டின் உயரம் குறைவாக இருந்தாலும், சொகுசில் எந்தக் குறையுமில்லை. பேக்ரெஸ்ட் வளைந்து, தோள்களுக்கும் முதுகுக்கும் சப்போர்ட் தருகிறது. பல மணி நேரம் பயணித்தும், சின்ன அசௌகரியம்கூட தரவில்லை சீட்டின் குஷன். பின் சீட்டைச் சாய்த்துக்கொள்ளும் சீட் ரிக்லைன் வசதி, இந்த செக்மென்ட்டில் எந்த காரிலும் இல்லை.

முன் சீட்டிலும் சொகுசுக்குக் குறைவில்லை. தோள் மற்றும் முதுகுக்கான சப்போர்ட் அருமை. சீட் மிகவும் அகலமாக உள்ளது கூடுதல் பிளஸ். பவர்டு சீட், எலெக்ட்ரிக் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்மென்ட் இருப்பதால், வசதியாக உட்கார சிரமப்படத் தேவையில்லை. டேஷ்போர்டு உயரம் குறைவாக உள்ளதால், சாலை தெளிவாகத் தெரிகிறது. இன்டீரியரில் லெதர் சொகுசுக்கான அடையாளம் என்றால் டபுள் ஸ்டிச்சிங் ஸ்டைலும், `Y’ வடிவ சென்டர் கன்சோலும், டேஷ்போர்டில் க்ளாசிக் டச். கூல்டு சீட், சன்ரூஃப்,  விலை மதிப்பான JBL ஆடியோ சிஸ்டம், TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் என விலைக்கேற்ற வசதிகள் இருக்கின்றன. 9 காற்றுப்பைகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், LED ஹெட்லைட்ஸ், பனி விளக்குகள், டயர் ப்ரஷர் மானிட்டர் சென்சார் எனப் பாதுகாப்பிலும் பக்கா!

சில குறைகளும் இருக்கின்றன. பின்பக்க சன்ஷேடு கன்ட்ரோல், டெம்ப்ரேச்சர் கன்ட்ரோல் போன்றவற்றை ஆர்ம்ரெஸ்ட்டில் வைத்துள்ளார்கள். மூன்று பேர் உட்கார்ந்து போகும் சமயத்தில்,  இந்த கன்ட்ரோல்களைப் பயன்படுத்த முடியாது. பின்பக்கம் ஏசி புளோயரின் வேகத்தை மாற்ற முடியாது. சென்டர் கன்சோலில் இருக்கும் 8 இன்ச் டச் ஸ்க்ரீன் பார்க்க கெத்தாக இருந்தாலும், பயன்பாடு அவ்வளவு திருப்தியைத் தரவில்லை. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே இரண்டுமே இல்லை. டேஷ்போர்டு டிசைனும் டல் அடிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹைபிரிட் அதிசயம்! - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி
ஹைபிரிட் அதிசயம்! - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி

டிரைவிங்

புது கேம்ரியில் இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன் செட்டப் இருக்கிறது. சாஃப்ட்டான செட்டப், சாலை அதிர்வு களை முழுமையாக அடக்கிவிடுகிறது. அதிர்வுகள் மட்டுமல்ல, வெளிச்சத்தம் கேபினுக்குள்ளே வருவதில்லை. முரட்டுத்தனமாக த்ராட்டிலை மிதித்தாலும், இன்ஜின் உறுமும் சத்தம் பெரிதாகக் கேட்கவில்லை. ஸ்டீயரிங் துல்லியமாக இருப்பது, வேகமாகப் போவதற்கான நம்பிக்கையைத் தருகிறது. சாலையை நன்றாக உணர முடிவதால், கார்னரிங் உற்சாகமாக இருக்கிறது.

ப்ரையஸ் போல மந்தமாக இல்லாமல், கேம்ரியின் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் ஸ்போர்ட்டியாக இருக்கிறது. காரை ஸ்டார்ட் செய்தவுடன், எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் 20.2Kgm டார்க் கிடைக்கிறது. த்ராட்டிலைத் தட்டி வேகம் கூட்டினால், பெட்ரோல் இன்ஜின் துணைக்கு வந்து அட்டகாசமான பெர்ஃபாமென்ஸைக் கொடுக்கிறது. காரின் பெரிய குறை CVT கியர்பாக்ஸ்தான். குறைந்த வேகத்தில் ஆச்சர்யப்படுத்தும் இதே கியர்பாக்ஸ்தான், இன்ஜினை விரட்டி ஓட்டும்போது பம்மி விடுகிறது.

வாங்கலாமா?

தற்போது ப்ரீமியம் செடான் செக்மென்ட்டின் விலை அதிகமான கார் கேம்ரிதான். ஸ்கோடா சூப்பர்ப் L&K-யைவிட 7 லட்சம் ரூபாயும், ஃபோக்ஸ்வாகன் பஸாத்தைவிட 4 லட்சம் ரூபாயும் விலை அதிகம். ஆனால் கேம்ரியின் லக்ஸூரி மற்றும் தொழில்நுட்பம், இந்த விலை வித்தியாசத்தை சமரசம் செய்துவிடுகின்றன. மிக முக்கியமாக, கேம்ரியின் ரன்னிங் காஸ்ட்டும், டொயோட்டாவின் நம்பகத்தன்மையும் நம்மை யோசிக்கவைக்கின்றன. 50 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கார் வாங்க நினைப்பவர்கள், சுலபமாக கடந்துபோக முடியாத சாய்ஸ், கேம்ரி.

தொகுப்பு:  ரஞ்சித் ரூஸோ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism