Published:Updated:

டார்க்கில் டாப்! - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்

டார்க்கில் டாப்! - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்
பிரீமியம் ஸ்டோரி
டார்க்கில் டாப்! - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்

டார்க்கில் டாப்! - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்

டார்க்கில் டாப்! - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்

டார்க்கில் டாப்! - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்

Published:Updated:
டார்க்கில் டாப்! - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்
பிரீமியம் ஸ்டோரி
டார்க்கில் டாப்! - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்

ஹிந்திராவின் இந்தப் புதிய காம்பேக்ட் எஸ்யூவி-யின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்களைத் தாண்டி, பெர்ஃபாமென்ஸ் மற்றும் ரிஃபைன்மென்ட்டை சமவிகிதத்தில் கொண்டிருந்த அதன் டீசல் இன்ஜின், பலரது லைக்குகளைப் பெற்றது. மராத்ஸோவில் இருக்கும் அதே 1.5 லிட்டர் இன்ஜின்தான் என்றாலும், இந்த காருக்கு எனப் பிரத்யேகமாக அதை ரீ-டியூன் செய்திருக்கிறது மஹிந்திரா. இதுபோன்ற பாராட்டைப் பெற்றிருக்கும் டர்போ டீசல் இன்ஜினுக்கு இணையாக, XUV 3OO-ன் பெட்ரோல் இன்ஜின் இருக்குமா என்ற கேள்வி எழாமலில்லை. இந்த காம்பேக்ட் எஸ்யூவி-யில் இருப்பது, KUV 1OO காரில் இருக்கும் 1.2 லிட்டர் - 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான். ஆனால், கூடுதல் எடையைக்கொண்ட எஸ்யூவி-க்கு ஏற்றபடி இதை டியூன் செய்தது மட்டுமல்லாமல், டர்போ சார்ஜரையும் சேர்ந்திருக்கிறது மஹிந்திரா.

டார்க்கில் டாப்! - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்

அலுமினியக் கட்டுமானத்தைக் கொண்டிருக்கும் இந்த 1,197சிசி பெட்ரோல் இன்ஜின், 110bhp@5,000rpm பவரையும் - 20kgm@2,000rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. பவர் நெக்ஸானுக்குச் சமமாக இருந்தாலும், இது எக்கோ ஸ்போர்ட்டைவிடக் குறைவு (125bhp). ஆனால் டார்க்கில் மிட்சைஸ் எஸ்யூவிகளையே எகிறியடித்திருக்கிறது XUV 3OO. டீசல் இன்ஜினைப்போலவே, பெட்ரோல் இன்ஜினும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. டீசல் மாடல் போலவே பெட்ரோல் மாடலுக்கும் நான்கு வேரியன்ட்கள்தான்.  இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் மற்ற விவரங்களைக் கடந்த இதழில் பார்த்து விட்டோம் என்பதால், இங்கே பெட்ரோல் இன்ஜினின் பெர்ஃபாமென்ஸ் பற்றி மட்டும் பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டார்க்கில் டாப்! - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்

பெட்ரோல் பெர்ஃபாமென்ஸ்

XUV 3OO-ன் டீசல் இன்ஜின்போலவே, பெட்ரோல் இன்ஜினிலும் தனது மொத்த வித்தையை இறக்கியிருக்கிறது மஹிந்திரா. 3 சிலிண்டர் இன்ஜினாக இருந்தாலும், ஐடிலிங் மிகவும் ஸ்மூத்தாக உள்ளது ப்ளஸ். மிதவேகப் பயன்பாட்டிலும் இன்ஜின் ரிஃபைண்டாக இயங்குகிறது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்த பிறகும் காரின் வேகம் உடனடியாகக் குறையாமல், சில நேரம் அப்படியே ஓடுவது ஆச்சர்யத்தைத் தரலாம். டர்போ சார்ஜர் இடம்பெற்றுள்ளதால், எதிர்பார்த்தபடியே இங்கும் டர்போ லேக் இருக்கிறது. 1,700 ஆர்பிஎம் முதலே இன்ஜின் பவரை வெளிப்படுத்தத் தொடங்கினாலும், 2,200 ஆர்பிஎம்-மில் டர்போ சார்ஜர் தனது இருப்பைக் காட்டுகிறது. அங்கு தொடங்கி 4,500 ஆர்பிஎம் வரையிலான மிட்-ரேஞ்ச் பவர் டெலிவரி சிறப்பாக இருக்கிறது. 5,800 ஆர்பிஎம்தான் ரெட்லைன் என்பதால், அதை நெருங்கும்போது பவர் குறைவதை உணர முடிகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, இந்த இன்ஜின் நன்றாகவே இருக்கிறது என்றாலும், இருக்கின்ற பவரைச் சீராக வெளிப்படுத்தியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

டார்க்கில் டாப்! - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்

சிறிய டர்போ பெட்ரோல் இன்ஜின்களுக்கான Benchmark, இன்னுமே ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டில் இருக்கும் 1.0 லிட்டர் EcoBoost இன்ஜின் வசம்தான் உள்ளது. டர்போ லேக் இருப்பதால், குறைவான வேகத்தில் இன்ஜினை ஸ்மூத்தாக இயங்கச்செய்ய, கிளட்ச் மற்றும் ஆக்ஸிலரேட்டரில் அடிக்கடி கால் பதிவதைத் தவிர்க்க முடியவில்லை. லைட்டான கிளட்ச் - எடை குறைவான ஸ்டீயரிங் - ஈஸியான கியர்பாக்ஸ் ஆகியவை சேரும்போது, நெரிசலான நகரச் சாலைகளில் காரை ஓட்டுவது சுலபமாகவே உள்ளது. டீசல் மாடல்போலவே, பெட்ரோல் மாடலிலும் Variable Steering Modes உண்டு. ஆனால் இது எதிர்பார்த்த ஃபீட்பேக்கைத் தரவில்லை. காரின் முன்பக்கத்தில் எடை குறைவான இன்ஜின் இருப்பதால், பெட்ரோல் மாடலின் ஸ்டீயரிங்கின் எடையில் நல்ல வித்தியாசம் தெரிகிறது. ஆனால், மராத்ஸோவின் இன்ஜினில் வழங்கப்பட்டிருந்த எக்கோ மோடு, XUV 3OO-ல் மிஸ்ஸிங்.

தொகுப்பு:  ராகுல் சிவகுரு

டார்க்கில் டாப்! - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்

தன் அராய் மைலேஜை 17 கிமீ. பெட்ரோல் XUV 3OO காரின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் இன்ஜின் ரிஃபைன்மென்ட், மனநிறைவைத் தருகிறது. காரின் பயன்பாடு குறைவாக இருக்கும்பட்சத்தில், ஸ்மூத்தான பெட்ரோல் இன்ஜின் நல்ல சாய்ஸாக இருக்கும். மஹிந்திராவின் பெட்ரோல் வரலாற்றில் இது நிச்சயம் நல்ல இன்ஜின்தான்! ஆனால், இந்த செக்மென்ட்டில் டீசல் இன்ஜின்தான் ட்ரெண்டிங்; அந்த ஏரியாவிலும் நன்கு ஸ்கோர் செய்திருக்கிறது மஹிந்திரா.

20 கி.மீ அராய் மைலேஜ் தரக்கூடிய டீசல் இன்ஜினின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் இன்ஜின் ரிஃபைன்மென்ட் அருமை. மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது, பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு இடையேயான விலை வித்தியாசம் வெறும் 60-70 ஆயிரம் ரூபாய் என்பது வரவேற்கத்தக்க அம்சம். எனவே, கூடுதல் செயல்திறன் வேண்டும் என்பவர்கள், தாராளமாக டீசல் மாடலை தேர்வு செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism