Published:Updated:

ஜீப் தோல் போர்த்திய கார்! - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்

ஜீப் தோல் போர்த்திய கார்! - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்
பிரீமியம் ஸ்டோரி
ஜீப் தோல் போர்த்திய கார்! - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்

ஜீப் தோல் போர்த்திய கார்! - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்

ஜீப் தோல் போர்த்திய கார்! - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்

ஜீப் தோல் போர்த்திய கார்! - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்

Published:Updated:
ஜீப் தோல் போர்த்திய கார்! - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்
பிரீமியம் ஸ்டோரி
ஜீப் தோல் போர்த்திய கார்! - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்

எண்டேவரில் ஓர் ஆஃப் ரோடு அனுபவம்!

சாலை முடியும் இடத்தில் கார்களுக்கு வேலையிருக்காது. ஆனால் அதற்குப் பிறகுதான், ஜீப்களுக்கு வேலையே ஆரம்பிக்கும். ஜீப்களைப் பொறுத்தவரை பாதையைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஜீப்களின் முழு குணமே ஆஃப்ரோடுதான். அந்தக் குணங்களோடு சில கார்களும் இருக்கின்றன. ஆஃப்ரோடு DNA-வும் வேண்டும்; கார்களைப்போல சொகுசும் வேண்டும் என்பவர்களுக்காகத் தான் எஸ்யூவிகள் வந்தன.

அதிலும் ப்ரீமியம் எஸ்யூவிகள் வேற லெவல். அப்படிப்பட்ட ஒரு எஸ்யூவிதான் ஃபோர்டு எண்டேவர். காரைச் சுற்றிப் பார்க்கவே சில நிமிடம் பிடிக்கும் அளவுக்கு ஹல்க் தோற்றம்தான் இதன் ஸ்பெஷல். கார் உரிமையாளர்களுக்கு தங்கள் ஆஃப்ரோடு எஸ்யூவிகளை எப்படி வேண்டுமானாலும் ஓட்டலாம் என்பதைச் சொல்வதற்காக பிஎம்டபிள்யூ, ஃபோக்ஸ்வாகன், டாடா, மெர்சிடீஸ் பென்ஸ், ரேஞ்ச்ரோவர் போன்ற நிறுவனங்கள் டிரைவ் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும். அந்த லிஸ்ட்டில் இப்போது ஃபோர்டும் இணைந்துவிட்டது!

ஃபேஸ்லிஃப்ட் ஆகியிருக்கும் தனது புதிய 3.2 எண்டேவரில், ஒரு டிரைவ் எக்ஸ்பீரியன்ஸ் நடத்திய அந்த நிகழ்ச்சிக்கு நான் மீடியா சார்பில் டிரைவர். கூடவே, வாசகர் சரவணன் `நானும் வருவேன்’ என வந்துவிட்டார். வடஇந்தியாவைச் சேர்ந்த ஃபோர்டு டெக்னீஷியனான ஷாஹில், நமக்கு கோச் ஆக வந்திருந்தார்.

வழக்கம்போல் ஆக்ஸிலரேஷன், ஸ்டீயரிங் ஹேண்ட்லிங், பிரேக்கிங் என எல்லாவற்றையும் ஷாஹில் பாடம் எடுத்த பிறகு, எண்டேவரை உறுமவிட்டோம். பொதுவாக, நல்ல டிரைவர் என்பவர் ஒரு கையில் ஸ்டீயரிங் பிடித்துத் திருப்ப மாட்டார் என்று அறிவுரை வழங்கியிருந்தார் ஷாஹில். நிறைய வாடிக்கையாளர்கள் தங்கள் கோச்களிடம் இந்த அறிவுரை வாங்கியதைப் பார்க்க முடிந்தது.

ஜீப் தோல் போர்த்திய கார்! - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதாவது ஸ்டீயரிங் பிடிக்கும்போது, 3-9 க்ளாக் பொசிஷனில் கைகள் இருப்பது மட்டுமல்லாமல், திருப்பும்போதும் அப்படியே இரண்டு கைகளையும் வைத்துத் திருப்ப வேண்டும் என்பதுதான் டிரைவிங் விதி. ஒற்றைக் கையில் தோசை வார்ப்பதுபோல் ஸ்டீயரிங் திருப்புவது, மிகவும் தவறு.

முக்கியமாக ஆஃப்ரோடிங்கில் இரண்டு கைகளும் ஸ்டீயரிங்கில் மீது இருக்க வேண்டும் என்றார். அதற்கான காரணத்தை பிராக்டிக்கலாகவும் விளக்கினார். தடாலென ஒரு பள்ளம், வலதுபக்கம் மட்டும் மேடாகயிருந்தது. கார் எத்தனை டிகிரி சாய்ந்திருக்கிறது என்பது ஸ்க்ரீனில் டிஸ்பிளே ஆனபோது, லேசான நடுக்கம் வரத்தான் செய்தது. அதாவது, இடதுபக்கம் மட்டும் அந்தரத்தில் எண்டேவர் நின்றுகொண்டிருந்ததை, காருக்கு அடியில் இருந்து படமெடுத்துக் கொண்டிருந்தார் புகைப்பட நிபுணர். அப்போது ஒரு கை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு, தோள்பட்டையில் செம அடி விழ வாய்ப்புண்டு என்பதை விளக்கினார் ஷாஹில்.

ஜீப் தோல் போர்த்திய கார்! - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்

அடுத்தது, காரின் டிப்பார்ச்சர் ஆங்கிளைச் சோதிக்கும் டெஸ்ட். `கரடுமுரடான சில பாதைகள் நாங்கள் செட் பண்ணியதில்லை; அதுவாகவே அமைந்தது’ என்று சில ஏரியாக்களுக்கு எண்டேவரை விடச் சொன்னார் ஷாஹில். வேகமாகப் போய் ஒரு மேட்டில் ஏற்றியபோது... வேறு கார்களை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. மற்ற கார்களில் `பட்’டென பம்பர்தான் அடிவாங்கும். எண்டேவரில் டயர்கள் தான் சொகுசாக மேலேறி நின்றன. அதேபோன்று, கிரவுண்ட் கிளியரன்ஸைச் சோதனை செய்யும் பயிற்சி. எண்டேவரின் கிரவுண்ட் கிளியரன்ஸ், ஜீப்களைவிட அதிகம்... கிட்டத்தட்ட 218 மிமீ.

`4 வீல் லோ’ ஆப்ஷனை ஸ்டாண்டர்டு ஆப்ஷனாகவே கொடுத்திருக்கிறார்கள். மட் அண்ட் சேண்ட், டைனமிக், நார்மல், ஆல் டெரெய்ன் என்று நான்கு மோடுகள். இதில் `4 வீல் லோ’ மட்டும், காரை நிறுத்திவிட்டுத்தான் ஆன் செய்ய வேண்டும். மற்றவற்றை `ஆன் தி கோ’விலேயே செட் பண்ணிக் கொள்ளலாம். நான்குக்கும் நல்ல வித்தியாசம் தெரிந்தது.

ஜீப் தோல் போர்த்திய கார்! - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்

`இதில் ஏறிடலாமா?’ என்பதுபோன்ற ஓர் ஏற்றம். தூரத்தில் இருந்து பார்த்தால், ஒட்டகச்சிவிங்கியின் கழுத்துபோல் இருந்தது. 4 வீல் லாக்கை ஆன்செய்து, லேசாக ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்தேன். `படால்’ என ஏறியது எண்டேவர். இந்த நேரத்தில் `ஹில் லான்ச் அசிஸ்ட்’ கண் விழித்துக்கொள்கிறது. அதாவது 3 விநாடியில் அந்தரத்தில் அப்படியே நின்று கொள்ளலாம். கியர், பிரேக் போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக இந்த அசிஸ்ட். இது எல்லா கார்களிலும் இருக்கும் வசதிதான். ஆனால், எனக்கு மூன்று விநாடியைத் தாண்டியும் நின்றது பேரதிசயமாக இருந்தது.

தார், கூர்கா போன்ற கடுமையான ஆஃப்ரோடு வாகனங்களில் இருக்கும் `டிஃப்ரென்ஷியல் லாக்’ வசதியும் கொடுத்திருந்தார்கள் எண்டேவரில். இதுதான் ஆஃப்ரோடு வாகனங்களுக்கு மிகவும்  முக்கியமான தேவை. அதாவது, பள்ளத்தில் சிக்கிக்கொண்ட கார் மேலெழும்ப, நல்ல ட்ராக்‌ஷன் தேவை. இன்னும் சொல்லப்போனால், 4 வீல் டிரைவ் மோடு இதில் ஆபத்துதான். சாதாரண 4WD கார்களில் எல்லா வீல்களுக்கும் டிராக்‌ஷன் கன்னாபின்னாவெனக் கிடைத்து, தடாலென எதிரே இருக்கும் பாறையில் மோதுவதுதான் சாதாரணமாக நடக்கும். `டிஃப் லாக்’கை என்கேஜ் செய்துவிட்டு, வேண்டுமென்றே ஒரு பள்ளத்தில் சிக்கவைத்து காரைக் கிளப்பச் சொன்னார் ஷாஹில். தேவையான வீல்களுக்கு மட்டும் ட்ராக்‌ஷன் கிடைத்து, எண்டேவர் பாதுகாப்பாக பார்க் ஆகி நின்றது.

ஜீப் தோல் போர்த்திய கார்! - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்

அடுத்து, எண்டேவர் உரிமையாளர்களுக்குக்கூடத் தெரிந்திருக்காத விஷயம் - உங்கள் எண்டேவர் 800மிமீ ஆழம், அதாவது கிட்டத்தட்ட 3.5 அடி ஆழம் வரை தண்ணீரில் பறக்கக்கூடியது என்பது! சரவணன் செம ஜாலியாக தண்ணீருக்குள் எண்டேவரைச் செலுத்தினார். தண்ணீருக்குள் இறங்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய முக்கியமான அம்சம் - பிரேக் பிடிக்கவே கூடாது; ஆக்ஸிலரேட்டரை விடவே கூடாது; கிளட்ச்சை மிதிக்கவே கூடாது. அதேபோல், மிதமான ஆக்ஸிலரேஷன் அவசியம். தூரத்தில் இருந்து பார்த்தால் பாதி எண்டேவர் பச்சைத் தண்ணீரில் மூழ்கி வெளிவந்து கொண்டிருந்தது.

தண்ணீருக்குள் சாகசம் செய்பவர்களுக்கு முக்கியமான டிப்ஸ் ஒன்று சொன்னார் ஷாஹில். கரைக்கு வந்த பிறகு, கொஞ்சம் நேரம் காரை ஐடிலிங்கில் நிறுத்திவிட்டு, பிறகுதான் ஆக்ஸிலரேஷன் கொடுத்துக் கிளப்ப வேண்டும். ``இது தண்ணீர் மற்ற எலெக்ட்ரானிக் பாகங்களுக்குள் புகாமல், தண்ணீரை வடியவிடுவதற்கான நேரம்’’ என்றார் கோச். இன்னும் ESC, ரோல்ஓவர் மிடிகேஷன், டிராக்‌ஷன் கன்ட்ரோல் என்று எல்லாவற்றுக்குமான சோதனையில் எண்டேவர், அற்புதம் நிகழ்த்திக் காட்டியது.

``நான் இதுக்கு முன்னாடி பிஎம்டபிள்யு டிரைவ் பண்ணியிருக்கேன். அதைவிட செமையான அனுபவம் கிடைச்சது. ரெண்டு வீலும் அந்தரத்தில் இருக்கும்போது என்னையும் அறியாம பயந்துட்டேன். எண்டேவரில் செம ஸ்டெபிளிட்டி!’’ என்று புளகாங்கிதம் அடைந்தார் சரவணன்.

``பசுத்தோல் போர்த்திய புலி மாதிரி, எண்டேவர் ஜீப் தோல் போர்த்திய கார்’’ என்று இன்னும் சிலர் எண்டேவர் ஓட்டிவிட்டு வந்து,  கமென்ட் அடித்துவிட்டுச் சென்றார்கள்.

தமிழ், படங்கள்:  க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism