Published:Updated:

பெட்ரோல் கிக்ஸ் பாஸ் ஆகுமா? - ஃபர்ஸ்ட் டிரைவ் - நிஸான் கிக்ஸ் பெட்ரோல்

பெட்ரோல் கிக்ஸ் பாஸ் ஆகுமா? - ஃபர்ஸ்ட் டிரைவ் - நிஸான் கிக்ஸ் பெட்ரோல்
பிரீமியம் ஸ்டோரி

ஸ்டைலான இந்த க்ராஸ்ஓவரின் டீசல் மாடலைப் பற்றி நமக்கு ஏற்கெனவே தெரியும். எனவே, தற்போது இதன் பெட்ரோல் மாடலைப் பார்ப்போம். டீசல் இன்ஜின் போலவே, கிக்ஸின் பெட்ரோல் இன்ஜினும் கேப்ச்சரில் இருந்தே பெறப்பட்டிருக்கிறது.  H4K 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின். அதனால் இது வெளிப்படுத்தும் 106bhp பவர் மற்றும் 14.2kgm டார்க்கில் எந்தவித மாறுதலும் இல்லை. ஆனால் கேப்ச்சருடன் ஒப்பிடும்போது, கிக்ஸின் பெட்ரோல் அனுபவம் சிறப்பாகவே இருந்தது. எப்படி?

பெட்ரோல் கிக்ஸ் பாஸ் ஆகுமா? - ஃபர்ஸ்ட் டிரைவ் - நிஸான் கிக்ஸ் பெட்ரோல்

இன்ஜினை ஸ்டார்ட் செய்த உடனேயே, அதன் ரிஃபைன்மென்ட் பலருக்கும் பிடித்துவிடும். குறைவான வேகங்களிலும் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருக்கிறது. வேகம் பிடிப்பதும் சுலபம். எனவே நிஸான் இந்த பெட்ரோல் இன்ஜினை, கிக்ஸுக்கு ஏற்ப ரீ-ட்யூன் செய்திருப்பது புரிகிறது. ஆனால் இதை டர்போ சார்ஜிங் செய்யப்பட்ட இன்ஜினுடன் ஒப்பிட முடியாது. தினசரிப் பயன்பாட்டில் பவர் குறைபாடு பெரிதாகத் தெரியவில்லை. 2,000 ஆர்பிஎம் தொடங்கி 5,500 ஆர்பிஎம் வரை, பவர் டெலிவரி நன்றாக உள்ளது. ஆனால் அதிக வேகத்தில் செல்லும்போது,  பெட்ரோல் இன்ஜினாக இருந்தாலுமே சத்தம் காருக்குள்ளே கேட்கிறது.

எடை குறைவான கிளட்ச்சும் - துல்லியமான கியர்பாக்ஸும், இன்ஜினுக்கு செம பார்ட்னர்ஷிப்.  டீசல் இன்ஜினைவிட ஒரு கியர் குறைவாக இருந்தாலும், இன்ஜினின் பவருக்கு ஏற்றபடி கியர்கள் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளன. CVT கியர்பாக்ஸுக்குப் பெயர்பெற்ற நிஸான், கிக்ஸில் அதனை வழங்காதது ஏனோ? சஸ்பென்ஷன் கொஞ்சம் இறுக்கமாக செட் செய்யப்பட்டிருப்பதால், குறைவான வேகத்தில் கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது அதிர்வுகளை உணர முடிகிறது. ஆனால் அதிக வேகத்தில் காரின் நிலைத்தன்மைக்கு இதுவே கைகொடுக்கிறது. காரின் முன்பக்கத்தில் எடை குறைவான இன்ஜின் இடம்பெற்றிருப்பதால், டீசல் மாடலைவிட பெட்ரோல் மாடலின் ஸ்டீயரிங் லைட்டாக இருக்கிறது.

டீசல் வேரியன்ட்டைவிட பெட்ரோல் வேரியன்ட்டின் விலை, சுமார் 2 லட்ச ரூபாய் குறைவாக இருப்பது பெரிய ப்ளஸ். ஆனால் XL மற்றும் XV எனும் 2 வேரியன்ட்களில் மட்டுமே பெட்ரோல் மாடலை வாங்க முடியும். எனவே கிக்ஸின் டாப் வேரியன்ட்டான XV ப்ரீமியம் ப்ளஸ்ஸில் கிடைக்கக்கூடிய 360 டிகிரி பார்க்கிங் கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆட்டோ LED ஹெட்லைட்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், லெதர் வேலைப்பாடுகளுடன் கூடிய டேஷ்போர்டு மற்றும் சீட்ஸ் போன்ற வசதிகள் பெட்ரோல் மாடலில் மிஸ்ஸிங். அதேசமயம் 17 இன்ச் அலாய் வீல்கள், ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, ரிவர்ஸ் கேமரா, ஆண்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் ப்ளே உடனான 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் என பெட்ரோல் மாடலில் தேவையான வசதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. Faux கார்பன் ஃபைபர் வேலைப்பாடுகளுடன் கூடிய கறுப்பு நிற டேஷ்போர்டு, கறுப்பு நிற ஃபேப்ரிக் சீட்களுடன் இயைந்து போகிறது. சீட்கள் சொகுசாக இருப்பதுடன், போதுமான இடவசதியும் உண்டு. ஆனால் க்ரெட்டாவுடன் ஒப்பிடும்போது, கிக்ஸின் இடவசதி குறைவு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெட்ரோல் கிக்ஸ் பாஸ் ஆகுமா? - ஃபர்ஸ்ட் டிரைவ் - நிஸான் கிக்ஸ் பெட்ரோல்

உண்மையைச் சொல்லப்போனால், கிக்ஸின் விலையில் க்ரெட்டாவுடன் போட்டி போடக்கூடிய கார்கள், அந்த செக்மென்ட்டில் எதுவுமே இல்லை. அதாவது க்ரெட்டாவின் விலை குறைவான 1.6 E+ மற்றும் விலை அதிகமான SX ஆகிய வேரியன்ட்களுக்கு இடையே, கிக்ஸின் பெட்ரோல் வேரியன்ட்கள் (XL, XV) பொசிஷன் செய்யப்பட்டுள்ளன. எதிர்பார்த்தபடியே க்ரெட்டா அதிக ஓட்டுகளை வாங்கினாலும், கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க காராக கிக்ஸ் இருக்கிறது. மேலும் மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில் பெட்ரோல் மாடல் வேண்டும் என்பவர்களுக்கான நல்ல சாய்ஸ் இந்த கிக்ஸ்!

தொகுப்பு:  ராகுல் சிவகுரு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism