Published:Updated:

டிக்‌ஷ்னரி

டிக்‌ஷ்னரி
பிரீமியம் ஸ்டோரி
டிக்‌ஷ்னரி

டிக்‌ஷ்னரி

டிக்‌ஷ்னரி

டிக்‌ஷ்னரி

Published:Updated:
டிக்‌ஷ்னரி
பிரீமியம் ஸ்டோரி
டிக்‌ஷ்னரி

க்டோபர் 2019 முதல், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்கள் அனைத்தும், புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகளின்படி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே மேம்படுத்தப்பட்ட காரின் கட்டுமானம், 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் ஆகியவை கட்டாயமாக்கப்பட உள்ளன. இந்த நிலையில் நம் ஊரின் சாலைப் பாதுகாப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்விதமாக, Advanced Driver Assist System குறித்து, மத்திய அரசாங்கம் பரிசீலிக்கத் தொடங்கியிருக்கிறது. இதன்படி கார்களில் இடம் பெறப்போகும் பாதுகாப்பு வசதிகளால், விபத்துகளின் எண்ணிக்கை குறையும்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். பாதுகாப்பை மேம்படுத்த  காரில் வேறு என்ன வசதிகள் எல்லாம் இருக்கின்றன?

டிக்‌ஷ்னரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)
கா
ரின் கன்ட்ரோலை ஓட்டுநர் இழப்பதே, கார் விபத்துக்குள்ளாவதற்கான பிரதான காரணங்களில் ஒன்று. எனவே திருப்பங்களில் கார் Oversteer அல்லது Understeer ஆனாலோ -  வழுக்கலான நிலப்பரப்பில் ரோடு கிரிப்பை கார் இழக்க நேரிட்டாலோ, ஒவ்வொரு சக்கரத்துக்குமான கச்சிதமான பிரேக்கிங் திறன் தொடங்கி காரின் பவரைக் கட்டுப்படுத்துவது வரை என டிரைவருக்கு காரின் கன்ட்ரோல் கிட்டும்வரை ESC தனது பணியைச் சத்தமில்லாமல் செய்யும். ஏபிஎஸ் உடன் கூட்டணி அமைத்துச் செயல்படும் என்பதால், பெரும்பான்மையான கார்களில் இந்த அமைப்பை இணைப்பது சுலபம்.

லேன் கீப் அசிஸ்ட்
கே
மராவை அடிப்படையாகக்கொண்ட Lane Departure Warning System-ன் அடுத்தகட்ட வளர்ச்சிதான் இது. எனவே நம் காருக்கு முன்பாகச் செல்லும் ஒரு வாகனம் தனது லேனைவிட்டு தவறும்போது, ஸ்டீயரிங்கில் சிறிய அட்ஜெஸ்ட்மென்ட் செய்து, காரை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுவருவதே லேன் கீப் அசிஸ்ட். ஒருவேளை சாலையை விட்டு கார் விலகிச் சென்றால், இது காரின் ஸ்டீயரிங்கை லாக் செய்துவிடும். இது மாடர்னான அம்சம் என்பதால், பக்காவான லேன் மார்க்கிங் இருப்பது அவசியம். ஆனால் இது இந்தியாவில் மிகவும் அரிது.

டிக்‌ஷ்னரி

அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB)
ரே
டார் மற்றும் கேமரா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காரின் இருப்பிடத்தை அடிப்படையாகக்கொண்டு தனது இருப்பிடத்தை நிலைநிறுத்திக்கொள்ள உதவுவதே AEB. நீங்கள் செல்லும் காரின் பாதையில் ஏதேனும் ஒரு பொருள் தட்டுப்பட்டால், அதை டிரைவருக்கு AEB தெரியப்படுத்தும். அப்போதும் டிரைவர் அது குறித்து எதுவுமே செய்யாவிட்டால், காரின் பிரேக்கை தானாகவே இது அழுத்திவிடும். எனவே, சாலையில் வெளிச்சம் குறைவாக இருந்தாலோ அல்லது சீரற்ற ஓட்டுதல் முறையின்போதோ டிரைவருக்கு AEB கைகொடுக்கிறது.

அட்டானமஸ் எமர்ஜென்சி ஸ்டீயரிங்
AEB
தொழில்நுட்பத்தின் அடுத்த பரிமாணம்தான், அட்டானமஸ் எமர்ஜென்சி ஸ்டீயரிங். எனவே கார் விபத்துக்குள்ளாவதை AEB மட்டுமே தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும்போது, தவறான பாதையில் இருந்து காரை விலக்கும் (ஸ்டீயரிங்) பணியை இது செய்கிறது. வால்வோ மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் கார்களில் இருக்கக்கூடிய அட்டானமஸ் எமர்ஜென்சி ஸ்டீயரிங் சிஸ்டம், டிரைவரின் சீரற்ற ஓட்டுதல் முறையைக் கண்டுபிடித்தால் தானாகவே சூழ்நிலைக்கு ஏற்ப ஸ்டீயரிங்கைக் கையாண்டு, பாதுகாப்பான இடத்துக்கு காரைக் கொண்டுசெல்லும்.

டிக்‌ஷ்னரி

ஆன்ட்டி Dazzle ஹெட்லைட்ஸ்
ரவு நேரத்தில் அதிகம் பயணிப்பவரா நீங்கள்? அப்படியென்றால், எதிர் திசையில் வரும் வாகனங்களின் ஹெட்லைட்களின் ஹை-பீம் வெளிச்சத்தால் கண்கள் கூசும் அனுபவத்தைப் பெற்றிருப்பீர்கள்! ஆன்ட்டி Dazzle ஹெட்லைட்ஸ் அதற்கான தீர்வு. கேமராவின் தரவுகளை அடிப்படையாகக்கொண்டு, ஹெட்லைட்டின் ஹை-பீம் வெளியிடும் வெளிச்சத்தை இது தானாகவே அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும். இதனால் காரை ஓட்டுபவருக்கும் வெளிச்சாலை தெளிவாகத் தெரிவதுடன், எதிர் திசையில் வருபவரின் பார்வை கெடாமலும் இருக்கும். LED ஹெட்லைட்களில் காணப்படும் இந்தத் தொழில்நுட்பத்தின் விலை மிகவும் அதிகம் என்றாலும், விரைவில் மாஸ் மார்க்கெட் கார்களில் இடம் பிடிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

- ராகுல் சிவகுரு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism