Published:Updated:

பாசம் இல்லை... மோகம்! - க்ளாசிக் கார்னர் - வின்டேஜ் கலெக்டர்

பாசம் இல்லை... மோகம்! - க்ளாசிக் கார்னர் - வின்டேஜ் கலெக்டர்
பிரீமியம் ஸ்டோரி

‘காரைக்குடியில் வின்டேஜ் கலெக்டர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது, கடந்த ஆண்டு நடைபெற்ற காரைக்குடி வின்டேஜ் கார் ஷோ. ‘’என் கராஜை வந்து பார்க்கிறீங்களா?’’ என்று அழைப்பு விடுத்திருந்தார், அதன் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான லெட்சுமணன். அவரின் கார் கராஜைப் பார்வையிடச் சென்றிருந்தேன். 7 வின்டேஜ் கார்கள், 8 வின்டேஜ் மோட்டார் பைக்ஸ், பார்க்கவே மிகவும் அரிதான ஒரு லேம்ப்ரெட்டா ஆட்டோ எனச் சின்ன அருங்காட்சியகமே வைத்திருந்தார் லெட்சுமணன். இவர் CCTV கேமராக்களைப் பொருத்தும் நிறுவனம் நடத்தி வருகிறார். தன் தாத்தாவின் போட்டோவில் இருந்த வேன் ஒன்றைத் தேடிச் சென்றபோதுதான், இந்த ஆர்வம் தொற்றிக்கொண்டதாக பிளாஷ்பேக் சென்றார்.

பாசம் இல்லை... மோகம்! - க்ளாசிக் கார்னர் - வின்டேஜ் கலெக்டர்

``தாத்தாவின் போட்டோவில் இருந்தது, ஸ்டாண்டர்டு நிறுவனம் தயாரித்த வேன். அது கேரளாவில் ஒரு தொழிலதிபரிடம் இருப்பதைக் கண்டுபிடித்து வாங்கச் சென்றபோது, அதைத் தர அவர் மறுத்துவிட்டார். அப்போது ஆரம்பித்தது இந்த வின்டேஜ் கார் மோகம். என் முதல் விண்டேஜ் கார், 1951- மோரிஸ் மைனர். ரொம்பவும் யோசிக்கவில்லை. யதார்த்தமாக வாங்க முடிவெடுத்தேன். அதன்பிறகு வின்டேஜ் கார் வாங்குவதை இன்னும் நிறுத்தவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழைய கார் மீது பிரியம் உள்ளவர்கள்கூட, வின்டேஜ் கார்களைப் பராமரிப்பது பெரிய செலவு எனப் பயப்படுவார்கள். ஆனால், இப்போது இருக்கும் கார்களுக்கு ஆகும் பராமரிப்புச் செலவைவிட, வின்டேஜ் கார்களுக்கான செலவு குறைவுதான். ஸ்பேர் பார்ட்ஸ் ஆன்லைனிலேயே கிடைக்கிறது. சில கார்களை அவ்வப்போது பராமரிக்க வேண்டியதிருக்கும். ஆனால் வாரம் ஒருமுறை நேரம் ஒதுக்கி ஓட்டிச்செல்லும்போது கிடைக்கும் அனுபவமிருக்கே… அதுக்காக எவ்வளவு செலவு செய்தாலும் தப்பில்லைனுதான் தோணும்.’’

பாசம் இல்லை... மோகம்! - க்ளாசிக் கார்னர் - வின்டேஜ் கலெக்டர்

``அப்படி என்ன அனுபவம்?’’

``போகும் வழியெல்லாம் செல்ஃபி எடுக்க விரும்பும் மக்கள், வியப்புடன் வேடிக்கை பார்ப்பவர்கள், பிரேக் டவுன் ஆக நேர்ந்தால் அங்கேயே சரிசெய்து வீட்டுக்கு வந்துசேருவது, எக்ஸ்போக்களுக்கு ஓட்டிச் செல்வது, வின்டேஜ் டூர் என ஏகப்பட்ட அனுபவங்கள். ஒவ்வொரு காரையும் ரெஸ்டோர் பண்றதுக்கு ஒரு வருடம் ஆகும். ஸ்பேர்ஸ் தேடும்போது, காரைப் பற்றி நிறைய தெரிஞ்சுக்கலாம். இந்த காருக்கான ஸ்டைல், ஃபீல் கிடைக்க நம்ம எடுக்கிற முயற்சிகள்... ஒவ்வொரு நாளையும் சுவாரஸ்யப்படுத்தும்” என உணர்ச்சி பொங்கப் பேசினார். ``பிரெஞ்சு நாட்டு சிட்ரான் (1946) காருக்கு கியர் லீவர் டேஷ்போர்டிலும், கியர்பாக்ஸ் இன்ஜினுக்கு முன்பக்கமும் அமைந்திருக்கும். ஆஸ்டின் 10 (1933) மாடல் காரை முன்பக்கம் ‘ஸ்டார்ட்டிங் ஹேண்டில்' வைத்துத்தான் ஸ்டார்ட் செய்ய வேண்டும். 1951 ஃபியட் எலிகண்ட் 1100 மாடல் காரில் அறிமுகப்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன்தான், இப்போதுவரை பல கார்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது” எனத் தன் கார்களை பற்றிய தகவல்களை அடுக்கினார்.

தன் தந்தையின் நினைவாக லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர், ராயல் என்ஃபீல்டு மோஃபா, ஸ்வேகா மொபட், ஜாவா, ராஜ்தூத் என பைக்குகளை வாங்கிப் பராமரிக்கிறாராம். ``24bhp திறன்கொண்ட ஃபோர்டு மாடல் A, ஃபோக்ஸ்வாகன் பீட்டில், பீட்டில் வேன் போன்ற கார்கள் எல்லாம் என் கனவு கார்கள். நிச்சயம் இந்த கார்களை ஒரு நாள் வாங்கிவிடுவேன்’’ என்று உற்சாகம் பொங்கப் பேசினார் லெட்சுமணன்.

- பிரபாகரன்.ச, படங்கள்:  சாய் தர்மராஜ்.ச

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism