Published:Updated:

ஜெனிவா மோட்டார் ஷோ 2019

ஜெனிவா மோட்டார் ஷோ 2019
பிரீமியம் ஸ்டோரி
ஜெனிவா மோட்டார் ஷோ 2019

ஜெனிவா மோட்டார் ஷோ 2019

ஜெனிவா மோட்டார் ஷோ 2019

ஜெனிவா மோட்டார் ஷோ 2019

Published:Updated:
ஜெனிவா மோட்டார் ஷோ 2019
பிரீமியம் ஸ்டோரி
ஜெனிவா மோட்டார் ஷோ 2019

ஸ்பை படங்களில் மட்டுமே பார்த்த ஒரு காரை, பளிச் விளக்குகள் மத்தியில் பார்ப்பது எவ்வளவு சுகம் தெரியுமா? அந்த அனுபவத்தை கார் ஆர்வலர்களுக்கு, ஜெனிவா மோட்டார் ஷோவில் திகட்டத் திகட்டத் தந்திருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

ஜெனிவா மோட்டார் ஷோ 2019

இன்னொருபுறம், பினின்ஃபரினா பட்டிஸ்ட்டாவின் டீஸர்களே சமூக வலைதளங்களில் செம ட்ரெண்டிங்கில் இருந்தன. ஃபெராரி கார்களின் அதிரடியான தோற்றத்துக்குக் காரணமான டிசைன் ஸ்டூடியோவில் இருந்து ஒரு எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் என்பதால், பரபரப்புக்குப் பஞ்சமில்லை. தவிர, பினின்ஃபரினா நிறுவனத்தை மஹிந்திரா கையகப்படுத்திய பிறகு, அந்த பிராண்டிங்கில் வரும் முதல் கார் என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்திருந்தது.

டாடா பஸ்ஸர்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெனிவா மோட்டார் ஷோ 2019

H5X கான்செப்ட் எப்படி ஹேரியர் ஆக மாறியதோ, அதேபோல H7X கான்செப்ட் தற்போது பஸ்ஸர்டு (Buzzard) ஆக வெளிவந்திருக்கிறது. 2019 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த ப்ரீமியம் எஸ்யூவி, இந்தியாவில் வேறு பெயரில் அறிமுகமாகும். தவிர, இது நம் நாட்டில், டாடாவின் விலை அதிகமான காராக பொசிஷன் செய்யப்படவிருக்கிறது. 5 சீட்டர் ஹேரியர்போலவே, 7 சீட்டர் பஸ்ஸர்டு எஸ்யூவியும் ஒமேகா பிளாட்பார்மில் தயாரிக்கப்படவுள்ளது. இரண்டிலுமே 2,741மிமீ வீல்பேஸ்தான் என்றாலும், ஹேரியரைவிட 62மிமீ கூடுதல் நீளம் மற்றும் 80மிமீ கூடுதல் உயரத்தைக்கொண்டிருக்கிறது பஸ்ஸர்டு. மொத்தத்தில் இது 4,661மிமீ நீளம், 1,894மிமீ அகலம், 1,786மிமீ உயரம் எனும் அளவுகளைக் கொண்டிருக்கிறது. காரில் வழங்கப்பட்டிருக்கும் தட்டையான 3-வது வரிசை இருக்கையில்,  அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் உள்ளது ப்ளஸ். முன்பக்கம் தொடங்கி சி-பில்லர் வரை பார்க்க ஹேரியர்போலவே இருந்தாலும், ரூஃப் ரெயில் - பெரிய பின்பக்க குவார்ட்டர் கண்ணாடி, 19 இன்ச் அலாய் வீல்கள் புதிது. ஆனால், இந்திய மாடலில் 18 இன்ச் அலாய் வீல்கள்தான் இருக்கும். ஹேரியரின் அதே 2.0 லிட்டர் க்ரையோடெக் டர்போ டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணிதான் பஸ்ஸர்டிலும். இது 170bhp பவரையும், கூடுதலாக 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் கொண்டிருக்கும். இந்தியாவில் அல்ட்ரோஸ் காருக்கு அடுத்தபடியாக, இந்த ப்ரீமியம் எஸ்யூவி டிசம்பர் 2019-ல் களமிறங்கும். MG ஹெக்டர் மற்றும் மஹிந்திரா XUV 5OO ஆகிய கார்களுடன் போட்டிபோடுகிறது பஸ்ஸர்டு.

டாடா ஹார்ன்பில்

ஜெனிவா மோட்டார் ஷோ 2019

ஹார்ன்பில்... இந்த புனைப்பெயரைக்கொண்ட மைக்ரோ எஸ்யூவி-யின் டீஸர்களை, ஜெனிவா மோட்டார் ஷோ - 2019 தொடங்குவதற்கு முன்பாகவே வெளியிட்டு, பயங்கர பரபரப்பைப் பற்ற வைத்திருந்தது டாடா மோட்டார்ஸ். இந்நிலையில் ஜெனிவாவில் காட்சிப்படுத்தப்பட்ட H2X எஸ்யூவி கான்செப்ட்டைப் பார்க்கும் போது,  ஹார்ன்பில் மைக்ரோ எஸ்யூவி எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது நெக்ஸானைவிட உயரமாக இருக்கலாம். . பெரிய வீல் ஆர்ச், டிஃப்யூஸர் உடனான பம்பர்கள், ஃப்ளோட்டிங் ரூஃப் ஆகியவை இதன் ஹைலைட்.

இந்த நிறுவனத்தின் 45X மற்றும் E-Vision கான்செப்ட்களைப் போலவே, இங்கும் மினிமலிச கொள்கைகளின்படி காட்சியளிக்கும் கேபின், எதிர்காலத்துக்கான டிசைனுடன் கவர்கிறது. டூயல் டோன் ஃபினிஷ் ரசிக்கும்படி இருப்பதுடன், ஏசி வென்ட் - சென்டர் கன்சோல் - சீட் Backrest - டோர் பேடு ஆகியவை Turquoise கலரில் இருப்பது செம! ஆங்காங்கே ஸ்டோரேஜ் ஸ்பேஸும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க சீட்களின் ஹெட்ரெஸ்ட்க்குப் பின்னால், பின் இருக்கைக்கான ஏசி வென்ட் இருப்பது செம மாடர்ன். விமானத்தில் இருப்பதுபோன்ற ஸ்டீயரிங் வீல், இரட்டை 10.2 இன்ச் ஸ்க்ரீன்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், மற்றோன்று டச் ஸ்க்ரீன் சிஸ்டம்), டோர் பேனல் மற்றும் க்ளோவ் பாக்ஸில் ஃபேப்ரிக் பட்டை, பெரிய கண்ணாடி ரூப் என கேபின் முழுக்க விநோதமான டச்கள்தான்! H2X கான்செப்ட் பற்றிக் கேட்டால், ``சிறப்பான பெர்ஃபாமென்ஸ், எதிர்காலத்துக்கான கனெக்ட்டிவிட்டி, அற்புதமான இடவசதி” என்கிறது டாடா.

ஜெனிவா மோட்டார் ஷோ 2019

X445  எனும் குறியீட்டுப் பெயரைக்கொண்ட ஹார்ன்பில் மைக்ரோ எஸ்யூவி, அல்ட்ரோஸ் உற்பத்திசெய்யப்படும் ஆல்ஃபா பிளாட்பார்மில்தான் தயாரிக்கப்படும். ஆனால், இது அந்த காரைவிட 50மிமீ குறைவான வீல்பேஸைக் கொண்டிருக்கும். இதில் டியாகோவில் இருக்கும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்! ஆனால், 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் இன்ஜின் வழங்கப்படுமா என்பது சந்தேகமே. நெக்ஸானுக்குக் கீழே பொசிஷன் செய்யப்படவிருக்கும் இந்த கார், மஹிந்திரா KUV 1OO - மாருதி சுஸூகி ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட் (டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018) - ஹூண்டாயின் மைக்ரோ எஸ்யூவி (2023 அறிமுகம்) ஆகியவற்றுடன் போட்டிபோடும்.

H2X கான்செப்ட்டின் ப்ரொடக்‌ஷன் வெர்ஷன், வரும் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு, BS-VI விதிகளுக்கு ஏற்றபடி அறிமுகமாகும் என நம்பலாம். ஆனால், கான்செப்ட் காரில் இருக்கும் பல ஸ்டைலான அம்சங்கள் (பில்லர் இல்லாத கதவுகள், சி-பில்லரில் கதவுக் கைப்பிடி, பெரிய அலாய் வீல்கள்) இதில் இருக்குமா என்பது சந்தேகமே!

பினின்ஃபரினா பட்டிஸ்ட்டா

ட்ரெண்டிங்கில் இருந்த டீஸர்களுக்கான விடையாக, நீண்ட கரகோஷங்களுக்கு இடையே தனது எலெக்ட்ரிக் ஹைப்பர் காரான பட்டிஸ்ட்டாவை, ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியது பினின்ஃபரினா நிறுவனம். மிகக் குறைவான எண்ணிக்கையில் (150 கார்கள்) தயாரிக்கப்பட உள்ள இது, மஹிந்திராவின் விலை அதிகமான தயாரிப்பாக இருக்கும். சில ஆண்டுகளுக்குப் பிறகு பெர்ஃபாமென்ஸ் எஸ்யூவி வெளியிடும் திட்டத்திலும் இருக்கிறது பினின்ஃபரினா.

ஜெனிவா மோட்டார் ஷோ 2019

பெராரி மற்றும் பினின்ஃபரினா கார்களில் பின்பற்றப்பட்டிருந்த டிசைன் கோட்பாடுகள் இங்கே எதிரொலிப்பது ப்ளஸ். இதனால் சிம்பிளான டிசைனாக இருந்தாலும், தேவையான வளைவு நெளிவுகளுடன் அட்டகாசமாக உள்ளது பட்டிஸ்ட்டா. பெரிய பானெட் ஸ்கூப், முன்பக்க கார்பன் ஸ்ப்ளிட்டர், அகலமான ஆக்டிவ் பின்பக்க டிப்ஃயூஸர் என காரின் ஏரோடைனமிக்ஸுக்குத் துணை நிற்கும் அம்சங்கள் ஏராளம். காரின் முன்பக்கத்தில் இருக்கும் ஹெட்லைட்களுக்கு இடையே உள்ள LED பட்டை செம! கான்ட்ராஸ்ட் ஃபினிஷைக்கொண்டிருக்கும் ரூப், காரின் கேப் ஃபார்வேர்டு டிசைனுக்குக் கைகொடுக்கிறது. வீல்பேஸ் பெரிது என்பது, பேட்டரிகளை வைக்க உதவியாக உள்ளது. பட்டிஸ்ட்டாவின் டெயில் பகுதி ஸ்ப்ளிட் டிசைனில் இருந்தாலும், சிறிய கார்பன் ஃபைபர் பேனல் அவற்றை ஒன்றிணைக்கிறது. இதனால் பாப் அப் பாணியிலான ஸ்பாய்லர் மற்றும் காரின் டவுன்போர்ஸுக்குத் தோள்கொடுக்கும் ஏர் பிரேக் ஆகிய இரண்டு அம்சங்களை இது ஒருசேரக்கொண்டிருப்பது சிறப்பு. இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரின் சார்ஜிங் பாயின்ட், பின்பகுதியில் அழகாக வைக்கப்பட்டுள்ளது. இதில் சார்ஜ் ஏறுவதைத் தெரிவிக்கும் லைட் பார், செம ஹைடெக் ரகம்.  முழுக்க ஓட்டுதல் அனுபவத்தை மட்டுமே முன்னிறுத்தி, கேபின் க்ளாசிக் மற்றும் மாடர்ன் தோற்றத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா மோட்டார் ஷோ 2019

பினின்ஃபரினா பட்டிஸ்ட்டா

ஸ்டீயரிங் வீலின் இருபுறமும் ஸ்க்ரீன்கள் இருந்தாலும், அது டிரைவரை நோக்கித் திரும்பியுள்ளது. இடதுபுறத்தில் உள்ள ஸ்க்ரீன் காரின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் ஹேண்ட்லிங் குறித்த விவரங்களைச் சொல்கிறது என்றால், வலதுபுறம் உள்ள ஸ்க்ரீன் காரின் மீடியா மற்றும் நேவிகேஷன் குறித்த விவரங்களை முன்வைக்கிறது. டிரைவருக்குத் தேவையான தகவல்கள் அனைத்தும், நடுவே இருக்கும் சிறிய ஸ்க்ரீனில் தெளிவாகத் தெரிகின்றன. டிரைவிங் மோடுகளுக்கான கன்ட்ரோலர் டிரைவருக்கு இடதுபுறத்தில் இருப்பதுடன், டிரான்ஸ்மிஷனுக்கான கன்ட்ரோலர் டிரைவருக்கு வலதுபுறத்தில் உள்ளது. இந்த காரை வாங்குபவர், கேபினின் மெட்டீரியல் மற்றும் கலர் ஆப்ஷனை தனக்குப் பிடித்தபடி கஸ்டமைஸ் செய்துகொள்ள முடியும். பட்டிஸ்ட்டாவின் எடையை 2,000 கிலோவுக்குள் கட்டுப்படுத்த ஏதுவாக, காரின் கட்டுமானத்தில் கார்பன் ஃபைபர் பிரதானமாக இருக்கிறது. இதில் தயாரிக்கப்பட்ட மோனோகாக் சேஸி, ரூப், பின்பக்க சப் ப்ரேம் ஆகியவை இதற்கான உதாரணம்.

ஜெனிவா மோட்டார் ஷோ 2019

21 இன்ச் அலாய் வீல்களில், ரேஸ் கார்களில் இருக்கும் பைரலியின் பீ ஸீரோ டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 6 பிஸ்டன்களைக் கொண்ட கார்பன் செராமிக் பிரேக்குகளை (முன்: 390மிமீ, பின்: 380மிமீ) இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காருக்கெனப் பிரத்யேகமாகத் தயாரித்திருக்கிறது பிரெம்போ. பார்முலா-E கார்களுக்கு இந்த நிறுவனத்தின் பிரேக் சிஸ்டமே பயன்படுத்தப்படுவதால், தனது ரேஸிங் அனுபவத்தை பட்டிஸ்ட்டாவின் பிரேக்ஸில் காட்டியிருக்கிறது பிரெம்போ. 350 கி.மீ வேகம் செல்லக்கூடிய காராக இருப்பினும், டிரைவிங் மோடுகள் வாயிலாக இருக்கின்ற பவரைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். பெர்ஃபாமென்ஸ் பேக்கேஜை எடுத்துக்கொண்டால், டயர் மற்றும் சில விஷயங்களில் வித்தியாசம் இருக்கும். எனவே, வழக்கத்தைவிட அதிக வேகத்தை பட்டிஸ்ட்டா எட்டும். ஆனால், இது ரேஸ் டிராக் போன்ற இடங்களில் மட்டுமே பயன்படுத்த கச்சிதமாக இருக்கும்.

ஜெனிவா மோட்டார் ஷோ 2019

ரிமாக் நிறுவனத்தின் C-Two ஹைப்பர்காரில் இருக்கும் அதே 120kWh லித்தியம் பேட்டரி அமைப்புதான் பட்டிஸ்ட்டா காரில் இடம்பெற்றுள்ளது. எனவே, இரு கார்களிலும் வீல்பேஸும் ஒரே மாதிரி இருப்பதில் ஆச்சர்யமில்லை (2,745மிமீ). காரின் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டத்தில் அதிக அனுபவம் இருப்பதால், மஹிந்திரா ரேஸிங் துறையின் பார்முலா-E அணி இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரில் தனது தொழில்நுட்பத் திறனைக் காட்டியிருக்கிறது. நான்கு வீல்களுக்கும் தனியாக மோட்டார் இருப்பதுடன், 4 வீல் டிரைவ் அமைப்பையும் கொண்டிருக்கிறது. மொத்தமாக 1,900bhp பவர் மற்றும் 230kgm டார்க்கை இது வெளிப்படுத்துகிறது. 0 – 100கிமீ வேகத்தை 2 விநாடிக்குள்ளாகவே எட்டும் பட்டிஸ்ட்டா, 300 கி.மீ வேகத்தை வெறும் 12 விநாடியிலேயே தொட்டு விடுகிறது. பெர்ஃபாமென்ஸ் பேக்கேஜ்கொண்ட மாடல், அதிகபட்சமாக 350 கி.மீ வேகம் செல்லும் எனத் தகவல் வந்திருக்கிறது. சிங்கிள் சார்ஜில் 450 கி.மீ வரை செல்ல முடியும்.

2 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான விலையைக் கொண்டிருக்கும் பட்டிஸ்ட்டா, 2020-ம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளது. அது பினின்ஃபரினா டிசைன் ஸ்டூடியோவுக்கு 90-வது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் நிறுவனரான பட்டிஸ்ட்டா ஃபரினாவை நினைவுகூரும் விதமாகவே, இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காருக்கு `பட்டிஸ்ட்டா’ எனப் பெயரிட்டுள்ளார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism