வாசகர் ஒருவரின் செடான் கார் ஒன்று விபத்துக்குளானது. நல்லவேளையாக உயிர்ச்சேதம் இல்லை. ஆனால், காருக்குப் பலத்த பாதிப்பு. காரைச் சரி செய்ய கம்பெனி சர்வீஸ் சென்டர் கொடுத்த எஸ்டிமேட்டைப் பார்த்து வாசகருக்கு மயக்கமே வந்துவிட்டது. மேற்கொண்டு சில ஆயிரங்கள் போட்டால், ஒரு புது கார் வாங்கிவிடலாம் என்பதான பில் தொகை அது.

அதனால் வாசகர், தன் நண்பர் ஒருவர் பரிந்துரைத்த மல்ட்டி பிராண்ட் கார் சர்வீஸ் சென்டரில் காரைக் காட்டினார். கம்பெனி சர்வீஸ் சென்டர் கொடுத்த எஸ்டிமேட்டைவிட பாதி தொகையில் காரை ரெடி செய்து தருவதாகச் சொன்னார்கள். சொன்னபடி காரைப் பழுது நீக்கி டெலிவரியும் எடுத்துவிட்டார் அவர்.அன்றிலிருந்து அவருக்கு கம்பெனி சர்வீஸ் என்றாலே அலர்ஜி.

இன்னொரு வாசகருக்கு, தனது ஆறு வருடங்கள் ஓடிய காரில் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் சரியாக இல்லை. மேடு பள்ளங்களில் பானெட், ஸ்டீயரிங், சஸ்பென்ஷன் ஏரியாக்கள் `தடதட’வென ஆடித் தள்ளின. கம்பெனியில் ஜெனரல் சர்வீஸுக்கு விட்டபோது இந்த கம்ப்ளெய்ன்ட்டைச் சொல்ல, ``சார், ஸ்டீயரிங் ரேக் மொத்தமா போயிடுச்சு. வேற மாட்டி ஓட்டினாதான் நல்லது. எந்த நேரம் என்ன வேணாலும் நடக்கலாம்’’ என்று 40,000 ரூபாய்க்கு எஸ்டிமேட் கொடுத்தார்கள்.

பட்ஜெட் பிரச்னை காரணமாக இவர் தள்ளிப்போட, அவர் சொன்னபடி ஒரு நாள் பெரும் பிரச்னையாகி கார் ஜாமாகிவிட்டது. அப்போதைக்கு காரைச் சரிசெய்ய மல்ட்டி பிராண்ட் சர்வீஸ் சென்டரை அணுகியிருக்கிறார். அந்தத் தனியார் சர்வீஸ் மேனேஜர், ``ரேக்கெல்லாம் பிரச்னை இல்லை. கீழே சப்போர்ட் பேனல் போயிடுச்சு. இதே மாடலுக்கு நான் 300 காருக்கு மேல இதை மாத்தியிருக்கேன். கவலைப்படாதீங்க, மாத்திடலாம்’’ என்று 7,000 ரூபாய் செலவில் காரை ரெடி பண்ணித் தர, நண்பர் ஹேப்பியோ ஹேப்பி!

இதுபோல் இன்னும் உதாரணங்கள் நிறைய உண்டு.

அப்படியென்றால், கம்பெனி சர்வீஸைவிட மல்டிபிராண்ட் சர்வீஸ்தான் குறைந்த செலவில் சர்வீஸ் செய்வதற்கு ஏற்ற இடமா? இந்தக் கேள்வியை ஒரு மல்டிபிராண்ட் சர்வீஸ் நடத்துபவரிடமே கேட்டால்...?

சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள `Actif Multi Brand Car Service Centre’ உரிமையாளர் கமலேஷ் இது பற்றிப் பேச முன்வந்தார்.

``சார், நானும் கம்பெனி சர்வீஸில் வேலை பார்த்தவன்தான். மஹிந்திரா ஆத்தரைஸ்டு சர்வீஸ் சென்டர்தான் முதல்ல வெச்சிருந்தேன். அதுக்கப்புறம் ஆறு வருஷமா இந்த மல்ட்டி பிராண்ட் நிறுவனத்தை நடத்திட்டு வர்றேன். உண்மையைச் சொல்றேன் - என்னைப் பொறுத்தவரை புது கார் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு முதல் அஞ்சு சர்வீஸ் வரை கம்பெனி சர்வீஸைத்தான் நான் சிபாரிசு பண்ணுவேன். அதுக்கப்புறம் வர்ற சர்வீஸ்களுக்கு தனியார் சர்வீஸ்தான் என் சாய்ஸ்’’ என்று பொதுவாக ஆரம்பித்து, தனியார் நிறுவனங்களிடம் சர்வீஸ் விடுவதால் ஏற்படும் நன்மைகளை மட்டும் சொன்னார்.

``கம்பெனி சர்வீஸில் இருந்ததால சொல்றேன். அவங்க உங்க காரின் ஸ்பேர் களைப் புதுசா மாற்றத்தான் நினைப்பாங்க. நாங்கள் முடிஞ்சவரை அதை ஆல்டர்நேட் செய்தோ, பட்ஜெட்டுக்கு இடிக்காத வரையில அதைச் சரிப்படுத்தியோ ஃபிட் செய்வோம்.

கம்பெனி ஜென்யூன் பார்ட்ஸ், எங்க கிட்டயும் கிடைக்கும். அதே வெண்டார் களிடம் நாங்க வாங்கியதை அப்படியே MRP விலைக்கு எங்களால் தர முடியும். உதாரணத்துக்கு, ரானேவில் ரெடியாகும் மாருதி கார்களின் ஸ்டீயரிங் காலம், 24,000 ரூபாய்னு வெச்சுப்போம். அதை ரானேவிடம் இருந்து 15,000 ரூபாய்க்குத்தான் வாங்கியிருப்பார்கள்.

ரானே, அதே பொருளை அதே விலைக்குத்தான் மல்டி பிராண்ட் சர்வீஸ் சென்டர் களுக்கும் விற்கும். அதனால், கம்பெனி சர்வீஸ் சென்டரைவிட மல்டி பிராண்ட் சர்வீஸ் சென்டர்களில் குறைந்த விலைக்கு ஸ்பேர் பார்ட்ஸை வாங்க முடியும்.

மல்டி பிராண்ட் சர்வீஸ் சென்டர்களில் ஒரிஜினல் பார்ட்ஸ் மாட்டமாட்டாங்கன்னு ஒரு குற்றச்சாட்டு உண்டு. பொதுவா இப்படி எல்லா மல்டி பிராண்ட் சர்வீஸ் சென்டர்களையும் குற்றம் சுமத்த முடியாது. அதேபோல், லேபர் சார்ஜும் மல்டி பிராண்ட் சர்வீஸ் சென்டர்கள்ல குறைவாகத்தான் இருக்கும்’’ என்று ஏகப்பட்ட விஷயங்களை அடுக்கினார் கமலேஷ்.

`இந்த ஸ்பேரைத் திருடிட்டாங்கன்னா? புதுசு போடுறேன்னு சொல்லிட்டு பழசை மாட்டிட்டாங்கன்னா நமக்கென்ன தெரியவாப் போகுது?’ என்று மல்டி பிராண்ட் சர்வீஸ் சென்டர்கள் மீது மக்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. அதைத் தாண்டி கம்பெனி சர்வீஸா... பிரைவேட் சர்வீஸா என்பது, ஒவ்வொருவரின் அனுபவத்தையும் மனநிலையையும் பொறுத்தது.

உங்கள் கார்; உங்கள் உரிமை.

- தமிழ்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

மல்டி பிராண்ட் சர்வீஸ்... என்ன ப்ளஸ்... என்ன மைனஸ்?

+ கம்பெனி சர்வீஸ் சென்டர்களில் பெரிதாக டிஸ்கவுன்ட் கிடைக்க வாய்ப்பில்லை. பட்ஜெட்டில் துண்டுவிழாமல் பார்த்துக்கொள்வது மல்டி பிராண்ட் சர்வீஸ் சென்டராகத்தான் இருக்கும்.

- ஒரு சில சர்வீஸ் சென்டர்களில் ஜென்யூன் ஸ்பேர் பார்ட்ஸ்கள் கிடைக்காது.

+ ஆனால், கம்பெனியைவிட குறைந்த விலைக்கே ஜென்யூன் ஸ்பேர்ஸ் வாங்கிவிட முடியும்.

- சில மல்ட்டி பிராண்ட் சர்வீஸ் சென்டர்களில் முறையான டயக்னஸ்டிக் டூல் கிட்ஸ் இருக்காது.

- ரீசேல் மதிப்பும் குறைய வாய்ப்புண்டு.