கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு... www.vikatan.com

மோட்டார் நியூஸ்

டொயோட்டா-மாருதி கூட்டணியின் முதல் குழந்தை!

மா
ருதி-டொயோட்டா கூட்டணியின் முதல் காராக பெலினோவின் டொயோட்டா கிளான்ஸா (Glanza), ஜூன் 6-ம் தேதி அறிமுகமாகிறது. A11 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த காரில் டொயோட்டா பல மாறுதல்களைச் செய்துள்ளது. கிரில், பம்பர், ஹெட்லைட் போன்ற வெளிப்புற மாற்றங்களோடு சீட், டேஷ்போர்டு, சாஃப்ட் டச் பிளாஸ்டிக் போன்ற இன்டீரியர் மாற்றங்களும் இருக்கலாம். தற்போது பெலினோ மூன்று இன்ஜின் ஆப்ஷன்களோடு கிடைக்கிறது. (BS-VI, Hybrid) ஆனால், டொயோட்டாவில் ஒரே ஒரு பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வரும். டொயோட்டா பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனம் என்பதால், அனைத்து பாதுகாப்பு வசதிகளும் உள்ள டாப் வேரியன்ட்டுகளில் மட்டுமே விற்பனைக்கு வரும். பெலினோவுக்கு 2 ஆண்டு வாரன்ட்டி கொடுக்கப்படுகிறது. டொயோட்டாவின் கிளான்ஸா காருக்கு 3 ஆண்டு/ அன்லிமிட்டட் கி.மீ வாரன்ட்டியும், 5 ஆண்டு எக்ஸ்டென்டட் வாரன்ட்டியும் கிடைக்கும். பெலினோவைவிட கிளான்ஸாவின் விலை அதிகமாக இருக்கலாம்.

மோட்டார் நியூஸ்

பாதுகாப்பான ஆல்ட்டோ ரெடி!

துவரை பிஎம்டபிள்யூ, பென்ஸ் போன்ற லக்ஸூரி கார் நிறுவனங்களே
BS-VI கார்களை வெளியிட்டு வந்த நிலையில், முதல் முறையாக மாருதி சுஸூகி BS-VI இன்ஜினுடன் பெலினோ மற்றும் ஆல்ட்டோ கார்களை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. ஆல்ட்டோவில் காற்றுப்பை, ABS, EBD, ஸ்பீடு அலெர்ட், ரியர் பார்க்கிங் சென்சார் போன்ற பாதுகாப்பு அம்சங்களை அனைத்து வேரியன்ட்டிலும் கட்டாயமாகியுள்ளது. இந்தப் புதிய கார்கள் வரவிருக்கும் க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். இந்த மாற்றங்களால் பெலினோவின் டாப் வேரியன்ட் ரூ.89,000 வரையும், ஆல்ட்டோ ரூ.28,000 வரையும் விலை கூடியுள்ளது. பெலினோவில் நவீனமான 1.2 லிட்டர் டூயல்ஜெட்- ஸ்மார்ட் ஹைபிரிட் இன்ஜின் புதிதாகக் கொடுக்கப் பட்டுள்ளது. இதனால் பெலினோவின் அராய் மைலேஜ் லிட்டருக்கு 21.4 கி.மீ-ல் இருந்து 23.87 கி.மீ வரை உயர்ந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக ஆல்ட்டோவின் அராய் மைலேஜ், லிட்டருக்கு 24.7 கி.மீ-ல் இருந்து 22.05    கி.மீ-யாகக் குறைந்துவிட்டது.

மோட்டார் நியூஸ்

சென்னைக்கு வருகிறது சார்ஜிங் ஸ்டேஷன்!

பெ
ங்களூரைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான ஏத்தர் எனர்ஜி, கடந்த ஆண்டு பெங்களூரில் ஏத்தர் S450 மற்றும் S340 என்று இரண்டு ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் கொண்டுவந்தது. அடுத்தகட்டமாக ஜூன் மாதம் சென்னையிலும் ஸ்கூட்டர் விற்பனையைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதற்காக சென்னையில் ஏத்தர் கிரிட் எனும் சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது இந்த நிறுவனம். பெங்களூரில் 31 இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைத்திருப்பதுபோல, சென்னையிலும் பல இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க உள்ளது. முதல் 6 மாதங்களுக்கு இலவசமாக சார்ஜ் செய்துகொள்ள அனுமதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். சென்னையைத் தொடர்ந்து, கோவை உள்பட மொத்தம் 30 நகரங்களில் விற்பனையைத் தொடங்குவதை இலக்காக வைத்துள்ளோம் என்கிறது ஏத்தர் எனர்ஜி.

மோட்டார் நியூஸ்