கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

ஃபர்ஸ்ட் லுக்: க்ரெட்டாவின் உடன்பிறப்பு... ஹூண்டாய் வென்யூ

ஃபர்ஸ்ட் லுக்: க்ரெட்டாவின் உடன்பிறப்பு... ஹூண்டாய் வென்யூ
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபர்ஸ்ட் லுக்: க்ரெட்டாவின் உடன்பிறப்பு... ஹூண்டாய் வென்யூ

RED ALERT: பிரெஸ்ஸா, எக்கோஸ்போர்ட், நெக்ஸான், XUV300

டந்த மாதம் மிகுந்த அதகளத்தோடு, ஹூண்டாய் வென்யூ அறிமுகம் நடந்தது. Bluelink என்ற பெயரில் ரிமோட் இன்ஜின் ஆன்/ஆஃப், ரிமோட் கிளைமேட் கன்ட்ரோல் என ஏகப்பட்ட சிறப்பம்சங்களைக் கொடுத்திருப்பதால், வென்யூ காரை நீலக்கடலில் அறிமுகப்படுத்தியது ஹூண்டாய். காரின் பெயர் வென்யூ என்பதால்... இதை அறிமுகப்படுத்தும் அரங்கு, அதாவது `வென்யூ' அசத்தலாக இருக்க வேண்டும் என்று மும்பையிலிருந்து கோவாவுக்குச் செல்லும் க்ரூஸ்ஷிப்பில் வென்யூவைக் காட்சிப்படுத்தியது ஹூண்டாய். அதே நாளன்று நியூயார்க் மோட்டார் ஷோவிலும் அறிமுகப்படுத்தப்பட்ட வென்யூ எப்படி இருக்கிறது?!

ஃபர்ஸ்ட் லுக்: க்ரெட்டாவின் உடன்பிறப்பு... ஹூண்டாய் வென்யூ

டிசைன்

வானமும் கடலும் தொட்டுக்கொள்ளும் பின்னணியில், அதாவது கப்பலின் மேல்தளத்தில் வைத்து வென்யூவைப் பார்த்தபோது, காம்பேக்ட் எஸ்யூவியாக இருந்தும் பிரமாண்டமாகத் தெரிந்தது வென்யூ. சான்டா ஃபீ-யின் சாயல் கொண்ட வென்யூவின் கேஸ்கேடிங் கிரில் பிரமாண்டாமாகவும் க்ரோம் பூச்சுகளோடும் கம்பீரமாக இருக்கிறது. புரொஜெக்டர் லென்ஸ் கொண்ட ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸ், காரின் கம்பீரத்தை மேலும் கூட்டுகிறது. அதேபோல வென்யூவின் வீல் ஆர்ச், காரை  மிக அகலமானதாகக் காட்டுகிறது. பின்புறத்தில் இருந்து பார்த்தால் ஸ்போர்ட்ஸ் காரைப்போல இருக்கிறது வென்யூ. LED டெய்ல் லைட்ஸ் கச்சிதம்.

ஃபர்ஸ்ட் லுக்: க்ரெட்டாவின் உடன்பிறப்பு... ஹூண்டாய் வென்யூ

`காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் ஏற்கெனவே ஹூண்டாயின் க்ரெட்டா வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது இதே செக்மென்ட்டில் அதைவிட விலை குறைவாக வென்யூ விற்பனைக்கு வந்தால் க்ரெட்டாவின் விற்பனை பாதிக்காதா?' என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பக்கூடும். ஆனால், உண்மை என்னவென்றால்... வென்யூ என்பது மிட்சைஸ் SUV இல்லை. அது ஒரு காம்பேக்ட் SUV. இதன் நீளம் 3996 மிமீ. அதாவது, 4 மீட்டருக்கும் குறைவு என்பதால் வரிச்சலுகையும் கிடைக்கும். 1590 மிமீ உயரமும், 1770 மிமீ அகலமும், 2500 மிமீ வீல்பேஸும் கொண்ட வென்யூ, க்ரெட்டாவைவிட சிறியது என்றாலும், இதைச் சாலையில் பார்க்க ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

வென்யூவின் டிக்கி க்ரெட்டாவைவிடச் சிறியதுதான். அதேபோல க்ரெட்டா அளவுக்கு வென்யூவின் கேபின் தாராளமில்லை. இருந்தாலும் வென்யூவின் முன்னிருக்கைகள் வசதியாகவே இருக்கின்றன. சீட் உயரமாக இருப்பதால், வெளிச்சாலை தெளிவாகத் தெரியும். பக்கவாட்டுக் கண்ணாடிகளும் பெரிதாக இருப்பதால், காரின் பின்னிருக் கையில் உட்கார்ந்தால், பெரிய காரில் உட்காருவதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. நம் நாட்டில் அறிமுகமாக இருக்கும் வென்யூவில், கறுப்பு வண்ணத்தில் மட்டுமே கேபின் அமைந்திருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் விற்பனையாகும் வென்யூ, டூயல் டோன் இன்ட்டீரியருடன் இருக்கும்.

 Bluelink தொழில்நுட்பம் நம்மூரில் விற்பனையாகும் காரிலும் இருக்கும் என்றாலும், வெளிநாடுகளில் விற்பனையாகும் வென்யூவைப்போல 33 சிறப்பம்சங்களைக் கொண்டதாக இருக்காது. இதில் 10 சிறப்பம்சங்களை எதிர்பார்க்கலாம். இது தவிர எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட், கூல்டு க்ளோவ்பாக்ஸ் போன்ற வசதிகளையும் வென்யூவில் வைத்திருக்கிறது ஹூண்டாய்.

ஃபர்ஸ்ட் லுக்: க்ரெட்டாவின் உடன்பிறப்பு... ஹூண்டாய் வென்யூ

இன்ஜின்

க்ரெட்டாவில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. ஆறு கியர்கள் கொண்ட மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் இருக்கின்றன. ஆனால் வென்யூவில் கூடுதலாக ஆப்ஷன்ஸ் கொடுத்து அசத்தியிருக்கிறது ஹூண்டாய். வென்யூவில் பெட்ரோல் - டீசல் என்று இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களும் உண்டு. பெட்ரோல் என்று எடுத்துக் கொண்டாலும் அதிலும் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்ஸ். எலீட் i20 காரில் இருக்கும் அதே 4 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் இன்ஜின்தான் வென்யூவிலும். இது 83bhp சக்தியையும் 11.5 kgm டார்கையும் அளிக்கும். இதில் 5 கியர்கள் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் உண்டு.

இது தவிர, புத்தம் புதிய 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (T-GDI) பொருத்தப்பட்ட வென்யூவையும் ஹூண்டாய் அறிமுகப்படுத்துகிறது. பவர் 120bhp... 17.2 kgm டார்க். 1.6 லிட்டர் க்ரெட்டா அளிக்கும் டார்க்கை விட இது அதிகம். இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் இருக்கிறது. 

வென்யூவில் டீசல் வேரியன்ட்டும் உண்டு. க்ரெட்டாவில் இருக்கும் அதே 1.4லிட்டர் இன்ஜின்தான் இதிலும். க்ரெட்டாவில் டீசல் வேரியன்ட்டிலும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் உண்டு. ஆனால் வென்யூவில் அது இல்லை

ஃபர்ஸ்ட் லுக்: க்ரெட்டாவின் உடன்பிறப்பு... ஹூண்டாய் வென்யூ

பாதுகாப்பு

பாதுகாப்பிலும் வென்யூ பக்கா என்கிறது ஹூண்டாய். வென்யூவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஸ்டீலில் 60 சதவிகிதம் அட்வான்ஸ்டு ஹை ஸ்ட்ரென்த் ஸ்டீல் என்கிறார்கள். ‘அதனால் என்ன?' எனக் கேட்டால், வேகமாகப் பயணிக்கும்போதும் காரின் நிலைத்தன்மை உறுதியாக இருக்குமாம். ஆறு காற்றுப்பைகள், வேகம் எடுத்தால் தானாகவே பூட்டிக்கொள்ளும் கதவுகள், ABS, ESC, ஹில்  ஹோல்டு அசிஸ்ட், ISOFIX குழந்தைகள் சீட் என்று அத்தனை பாதுகாப்பு வசதிகளும் உண்டு.

புளூலிங்க் தொழில்நுட்பத்தை வென்யூவில் கொடுப்பதற்காக வோடோஃபோன் - ஐடியா உடன் ஹூண்டாய் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அதனால் கார் ஒரு வேளை விபத்துக்குள்ளானால் போலீஸுக்கும், அருகில் இருக்கும் மருத்துவமனைக்கும் காரே தகவல் சொல்லிவிடும் வசதியும் (SOS/Emergence Assistance) இதில் இருக்கிறது. இத்தனை கி.மீ ரேடியஸ் தாண்டி கார் போகக் கூடாது என்றுகூட செட் செய்து கொள்ளலாம். டிரைவர் அந்த எல்லையைத் தாண்டிப் போனால் Geo-Fence Alert மூலம் கார் எங்கே இருந்தாலும் நமக்கு நோட்டீஸ் வந்துவிடும். அது மட்டுமல்ல; Valet Alert, Location Sharing, Maintenance Alert, Stolen Vehicle Tracking என்று ஏகப்பட்ட விஷயங்களை இதில் ஹூண்டாய் கொடுத்திருக்கிறது.

காரை ஓட்டி முழுமையான டெஸ்ட் டிரைவ் செய்தால்தான் இதன் பெர்ஃபாமென்ஸ், சஸ்பென்ஷன், பிரேக்கிங், நிலைத்தன்மை ஆகிய விஷயங்களை அறிந்துகொள்ள முடியும். பிரெஸ்ஸா,  எக்கோஸ்போர்ட், எக்ஸ்யூவி 300, நெக்ஸான் ஆகிய போட்டியாளர்களுக்குச் சவால் காத்திருக்கிறது.

-  வேல்ஸ்