கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

இன்ஜின் புதுசு... அதே சொகுசு!

இன்ஜின் புதுசு... அதே சொகுசு!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஜின் புதுசு... அதே சொகுசு!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஜாகுவார் XF 20t பெட்ரோல்

ஸ்போர்ட்டியான லக்ஸூரி செடான்களின் லிஸ்ட்டில் ஜாகுவாரைத் தவிர்க்கவே முடியாது. XF அப்படிப்பட்ட  ஒரு கார்தான். இதன் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் 180bhp பவரை வெளிப்படுத்தினாலும், அது இந்த செடானின் குணாதிசயத்துடன் பொருந்தவில்லை. முந்தைய XF மாடலில் இருந்த 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் (200bhp/240bhp), ஜாகுவார் நிறுவனம் ஃபோர்டு வசம் இருந்தபோது தயாரிக்கப்பட்டவை என்பதால், இந்தப் புதிய மாடலில் அவை இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக, தனது Ingenium சீரிஸ் - 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை, 20t(200bhp)/25t(250bhp) எனும் இரு வேரியன்ட்களில், XF செடானில் அறிமுகப்படுத்தியுள்ளது ஜாகுவார். நாம் ஓட்டியது 200bhp வேரியன்ட்டான ஜாகுவார் XF 20t. முந்தைய பெட்ரோல் இன்ஜினுடன் ஒப்பிடும்போது, இது எப்படி இருக்கிறது?

இன்ஜின் புதுசு... அதே சொகுசு!

ன்ஜினை ஸ்டார்ட் செய்ததுமே, அதன் ரிஃபைன்மென்ட்தான் முதலில் தெரிகிறது. ஐடிலிங் மற்றும் மிதமான வேகத்தில் க்ரூஸ் செய்யும்போது, இன்ஜின் தனது பணியைச் சத்தமில்லாமல் செய்கிறது. அதற்காக இதை மெர்சிடீஸ் பென்ஸின் E-க்ளாஸ் E200 மாடலுடன் ஒப்பிடக்கூடாது. புதிய இன்ஜினாக இருந்தாலும், முந்தைய மாடலில் இருந்ததைப் போலவே இதுவும் அதிரடியான பவர் டெலிவரியைக் கொண்டிருக்கிறது.

அதுவும் இன்ஜின், தனது கடைசி 2,000rpm-ல் இயங்கும்போது கிடைக்கும் எக்ஸாஸ்ட் சத்தம் செம! ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டும்போது, 6,500 ஆர்பிஎம் வரை கியர் மாற்றாமல் பறக்கலாம். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், பேடில் ஷிஃப்ட்டர்களையும் கொண்டிருப்பது ப்ளஸ். இதனுடன் துல்லியமான ஸ்டீயரிங்கும் கச்சிதமான சேஸியும் சேரும்போது, ‘ஒரு லக்ஸூரி செடான் ஸ்போர்ட்டியாகவும் இருக்க முடியும்’ என்பதைப் பறைசாற்றுகிறது ஜாகுவார் XF.  காரில் குறைகளும் தெரிந்தன. ஆம், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் செயல்பாடு, குறைவான வேகங்களில் டல்தான். இந்த நேரத்தில் த்ராட்டில் ஓவர் ரெஸ்பான்சிவ்வாக இருப்பதால், குறைவான வேகத்தில் காரைச் சீராக ஓட்டுவது சிக்கலாக இருக்கலாம். ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டமும் கொஞ்சம் கடுப்படிக்கிறது. மற்றபடி காரில் எந்த மாற்றங்களும் இல்லை. பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், வால்வோ S90 எனப் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது XF-ன் கேபினின் டிசைன் பழசுதான். மெர்சிடீஸ் பென்ஸ் E-க்ளாஸ் உடன் ஒப்பிடும்போது பின்பக்க இடவசதி குறைவாகவே இருந்தாலும், சீட் செம சொகுசு!

இன்ஜின் புதுசு... அதே சொகுசு!

மிட் வேரியன்ட்டான Prestige-ல் மட்டுமே XF 20t கிடைக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உடனான 10 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், மாற்றியமைக்கக்கூடிய இன்டீரியர் லைட்டிங் போன்ற வசதிகள் ஸ்டாண்டர்டு. இருப்பினும் விலை அதிகமான XF 25t வேரியன்ட்டில்தான் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோ பார்க்கிங், 4 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி ஆகிய ப்ரீமியம் வசதிகள் இருக்கின்றன.

லக்ஸூரி செடான் செக்மென்ட்டில் பெர்ஃபாமென்ஸ் மற்றும் பின்பக்க சொகுசு ஆகியவற்றைச் சரிசமமாக எதிர்பார்ப்பவர் களுக்கு, ஜாகுவார் XF நல்ல சாய்ஸ்.

தொகுப்பு:  ராகுல் சிவகுரு