கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

இது செம ஸ்மார்ட் கார்!

இது செம ஸ்மார்ட் கார்!
பிரீமியம் ஸ்டோரி
News
இது செம ஸ்மார்ட் கார்!

ஃபர்ஸ்ட் லுக்: MG ஹெக்டர்

புதிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த ஆண்டு நம் நாட்டுக்கு வரப்போகின்றன. ஆம், கியா மோட்டார்ஸ், MG மோட்டார் இந்தியா, PSA குழுமம் எனப் புதுப் புது நிறுவனங்கள் இந்தியாவுக்குள் செம ப்ரீமியம் கார்களோடு வருகின்றன. இந்த வரிசையில் முதலில் முந்திக்கொண்டுவருவது MG மோட்டார்ஸின் ஹெக்டர். ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவே விளம்பரங்களால் கவனம் ஈர்த்திருக்கும் MG ஹெக்டர், ஜூன் மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது.

இது செம ஸ்மார்ட் கார்!

சீனாவில் விற்பனை செய்யப்படும் Baojun 530 எஸ்யூவி-யை அடிப்படையாகக்கொண்டே, 5 சீட்டர் எஸ்யூவியாக MG ஹெக்டர் தயாரிக்கப்படுகிறது. காரின் வெளிப்புற டிசைன்,  பாடி பேனல்கள், சேஸி ஆகியவை சீன காரைப்போல இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஹேரியர் போலவே இங்கும் LED DRL வழக்கமாக ஹெட்லைட்ஸ் இருக்கும் இடத்திலும், LED ஹெட்லைட்ஸ் - DRL இருக்கும் இடத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. பெரிய க்ரோம் கிரில்லில் MG லோகோ, டைமண்ட் கட் அலாய் வீல்கள், முன்/பின் அலுமினிய ஸ்கிட் ப்ளேட்ஸ், பின் பக்க ஸ்ப்ளிட் ரூஃப் ஸ்பாய்லர், LED டெயில் லைட்ஸ், ஷார்க் ஃபின் ஆன்டெனா என ப்ரீமியம் அம்சங்களுடன் கவர்கிறது ஹெக்டர். கேபினில் 360 டிகிரி கேமரா, Sub-woofer உடனான ஹர்மான் ஆடியோ சிஸ்டம், ஆறு வகையில் எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடிய டிரைவர் சீட், புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ-லெஸ் என்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர், சன்ரூஃப், லெதர் உள்ளலங்காரம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, சாஃப்ட் டச் ப்ளாஸ்டிக்ஸ் என வசதிகளை வாரி வழங்கியிருக்கிறது MG.

இதில் 143bhp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு என்றாலும், பெட்ரோல் மாடலில் கூடுதலாக 6 ஸ்பீடு DCT மற்றும் 48V Mild-Hybrid சிஸ்டம் வழங்கப் பட்டிருப்பது பெரிய ப்ளஸ். எனவே, 48V Mild Hybrid வேரியன்ட் மற்றவற்றைவிட 12% அதிக மைலேஜ் தரலாம். இதற்கு ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், ஆட்டோமேட்டிக் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் ஆகிய தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.

இது செம ஸ்மார்ட் கார்!

உத்தேசமாக 15-20 லட்ச ரூபாய் விலையில் களமிறங்கப் போகும் ஹெக்டர், ‘இந்தியாவின் முதல் இன்டர்நெட் கனெக்ட்டிவிட்டி கொண்ட கார் மற்றும் விலை குறைவான 48V Mild Hybrid கார்’ என்ற பெருமையை ஒருசேரப் பெறப்போகிறது.

பாதுகாப்பைப் பொறுத்த வரை ABS, EBD, 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக், பிரேக் அசிஸ்ட், ஆட்டோ ஹோல்ட் உடனான எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 2 காற்றுப்பைகள்  இருக்கலாம். டாப் வேரியன்ட்களில் அதிக காற்றுப்பைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதற்கான சாத்தியம் உண்டு!

-  ராகுல் சிவகுரு