Published:Updated:

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 17

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 17
பிரீமியம் ஸ்டோரி
நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 17

சர்ஃபேஸும்... அலியாஸும்

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 17

சர்ஃபேஸும்... அலியாஸும்

Published:Updated:
நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 17
பிரீமியம் ஸ்டோரி
நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 17

CLASS - A SURFACING என்பதை கார் வடிவமைப்பின் கிரீடம் என்பார்கள். கவர்ச்சியாக களிமண்ணில் செதுக்கிய கார் வடிவத்தை, அழகான காராக மாற்றித்தரும் மாயாஜாலம்தான் CLASS - A SURFACING. கவர்ந்திழுக்கும் வண்ணத்தில் பளபளக்கும் மாசு மருவற்ற காரின் புறப்பரப்புகள், கண்ணாடியைப் போன்று தெளிவாகவும், ஆற்றின் நீரோட்டத்தைப் போன்று வளைவு நெளிவாகவும், பளிச்சென்று பொலிவாகவும் இருக்க... தரமான சர்ஃபேஸிங் தான்(SURFACING) காரணம். இதை டிசைன் பிராஸஸின் இறுதிக்கட்டம் அல்லது உச்சக்கட்டம் என்று சொல்லலாம்.

Class - A (Surface) பரப்பு என்பது என்ன? Surface என்றால் பரப்பு. பரப்பு ஏரியா (Surface Area) என்பது நீளமும் அகலமும் கொண்டது. ஆனால், கணமற்றது; அதாவது, Thickness அற்றது. உதாரணமாக, நீங்கள் ஒரு மேசையில் அமர்ந்திருப்பதாக எடுத்துக் கொண்டால், மேசையின் மேற்பகுதிதான் பரப்பு என்கிற Surface. அதிலும் நாம் பார்த்து, தொட்டுப் பயன்படுத்தும் அனைத்துப் பரப்புகளும் ‘Class - A’ பரப்பு. டேபிளின் டிராயரும் கைப்பிடியும் Class- A. பார்வையில் படாது மறைந்திருக்கும் மேசையின் அடிப்பகுதியை ‘Class-B’ பரப்பு எனச் சொல்லலாம்.  மேசையின் பயன்பாட்டுப் பரப்பு ஏன் பளப்பளப்பாக, நேர்த்தியாக இழைத்து வார்னீஷ் அடிக்கப்பட்டிருக்கிறது என்று யோசித்தால், பல எளிய உண்மைகள் விளங்கும். மரப் பட்டறையில் வாளால் அறுக்கப்பட்ட மரத்துண்டுகளை இழைக்காமல் மேசை, நாற்காலி செய்தால், கூர்மையான வாள் தடங்கள் கைகளைக் கிழித்துவிடலாம்; தூசு தங்கிவிடும். திரவங்கள் கைதவறிச் சிந்தினால், வழிய முடியாமல் ஈரமாகவே இருக்கும். ஆகவே, வழவழப்பான பரப்பு தேவைப்படுகிறது. நல்ல பயன் தருவதற்காகவே, இழைத்து இழைத்து மேடு பள்ளங்கள் இல்லாத பரப்பை தனித்துவமான திறமை கொண்டு படைக்கிறோம்.  ஆட்டோமொபைலில் இதுதான் வேறுவிதத்தில் கம்ப்யூட்டரின் உதவியுடன் நடக்கிறது. அதுதான் Class - A  Surfacing.

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 17

Class - A  Surfacing  பற்றிய சரியான புரிதல் நம்மிடம் இல்லை. அதனால், இது பற்றிய புரிதலை பொறியியல் கல்லூரிகளில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டியது அவசியம்.

ஒரு காரில், பைக்கில், ட்ரக்கில் உள்ளே - வெளியே நாம் பார்க்கும் தொடும் பரப்புகள் அனைத்தும் Class - A  Surface தான்.

அதாவது, களிமண் மாடல்களின் அடுத்த பரிணாமம் இது. ஒரு குறிப்பிட்ட கார் புரோகிராமுக்காக அதன் பிராண்ட் மற்றும் பிளாட்ஃபார்ம் என்னும் கார் வகைக்கு ஏற்ப 3 அல்லது 5 கான்செப்ட்களை க்ளே மாடல் செய்வது வழக்கம். உதாரணமாக, ஒரு லக்ஸூரி சலூன் காரை அமெரிக்க நிறுவனம் டிசைன் செய்ய நேர்ந்தால், அதன் Ideation வரைபடங்களில் இருந்து 5 க்ளே மாடல்களைச் செய்து பார்த்து, அதிலிருந்து 3 மாடல்களை அதன் அடுத்த நிலையான டிஜிட்டல் டிசைனுக்குக் கொண்டுசெல்வர். டிஜிட்டல் டிசைனின் இறுதி வடிவமே நாம் முன் கண்ட Class - A  Surfacing..

கார் டிசைனைப் பொறுத்தவரை, புற வடிவமைப்பு  - அக வடிவமைப்பு என இரண்டு முற்றிலும் வேறான குழுக்கள் இயங்கும். அதேபோல், க்ளே மாடலுக்கும் இரு வேறு குழுக்கள். இவற்றில் முதலில் உருப்பெறுவது புற வடிவமைப்புதான் (Exterior). புற வடிவம் உறுதிசெய்த பின்பே அக வடிவம் பற்றி யோசிக்க முடியும்.

டிஜிட்டல் டிசைனுக்குப் பயன்படுத்தப்படும் மென்பொருள்கள் பல இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள், குறிப்பாக கார் நிறுவனங்கள் தற்போது இந்த இரண்டே மென்பொருள்களைத்தான் பயன்படுத்துகின்றன.

1. ALIAS
2. ICEMSURF


இவற்றில் டிஜிட்டல் டிசைனின் முதற்பகுதியில் அனைத்து நிறுவனங்களும் அலியாஸையே (ALIAS) கையாள்கின்றன. ஐரோப்பிய நிறுவனங்களில் இறுதி வடிவ Class - A-வுக்கு ICEM SURF பயன்படுத்தலாம். அலியாஸ்தான் பல ஆண்டுகளாக சர்ஃபேஸிங் மன்னனாக இருக்கிறார். டிஜிட்டல் டிசைனையும் அலியாஸையும் சற்று விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு, நிறைவடைந்த க்ளே மாடலை, அலியாஸ் என்கிற மென்பொருளின் கட்டமைப்புக்குள் கொண்டு வருவது எப்படி என்பதை விளங்கிக்கொள்வது நல்லது.

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 17

திட்டவட்டமாக முடிவு செய்த க்ளே மாடலை, அதாவது திடப்பொருளாகச் செதுக்கி வைத்த கார் மாடலை, எந்தவித சேதாரமும் இல்லாமல் மென்பொருளுக்குள் கொண்டு செல்ல 3D SCAN செய்ய வேண்டும். மருத்துவ உலகில் புழங்கும் CT SCAN-ஐ போன்றதுதான் இதுவும். அதாவது சிடி ஸ்கேன், எக்ஸ்ரே கதிர்களைப் பாய்ச்சி உடல் பாகங்களை மைக்ரோன் அளவு துல்லியமாகப் பிரதி எடுக்கிறது. அதுபோலவே ஆட்டோமொபைல் உலகில் பயன்படுத்தப்படும் 3D Scanner,  லேசர் அல்லது  White Light கதிர்களைப் பாய்ச்சி க்ளே மாடலை மைக்ரோன் துல்லியத்தில் பிரதியெடுக்கிறது. இப்படி ஸ்கேன் செய்யும்போது, கார் க்ளே மாடல் மிக மிக துல்லியமான தட்டையாக இருக்கும் தளத்தில் இருப்பது அவசியம். அதாவது, ஒரு டிகிரி கோணத்தில் 100-ல் ஒரு பங்குகூட சாயாத தளமாக இருக்கும். வொயிட் லைட் ஸ்கேனர் மிகத் துல்லியமானது என்று நம்பப்படுகிறது.

ஸ்கேனர்களிலிருந்து சிரத்தையோடு பிரதி எடுக்கப்பட்ட ஸ்கேன் டேட்டாவை டிஜிட்டல் டிசைன் மற்றும் CAD மென்பொருள்களுக்குள் செலுத்த வேண்டியதுதான் அடுத்த கட்டம். மென்பொருள் சார்ந்த டேட்டாக்களுக்கு Format அவசியம் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். Format என்பது ஒரு பொதுக்குறியீடு. அச்சுத் துறையில் படங்களைப் பகிர jpeg/png/tiff போன்ற ஃபார்மட்கள் இருப்பதைப்போல, கார் டிசைன் மென்பொருளோடு(அலியாஸ்) ஸ்கேன் டேட்டாவைப் பகிர்ந்துகொள்ள  மூன்று ஃபார்மட்கள் உள்ளன.

- வடிவமைப்போம்

1. POINT CLOUD - பெயரைப் போலவே Point Cloud என்பது புள்ளிகளில் ஆன மேகக் கூட்டம். மிகத் துல்லியமான, ஆனால் ஒன்றோடொன்று ஒட்டாத புள்ளிகள்.

2. STL - Sterio Lithographic  எனப்படும் STL, சிறிய சிறிய நான்கு பக்கங்களைக்கொண்ட பரப்புகளால் ஆன ஒரு தொகுப்பு.

3. Polygon Mesh - Mesh என்பது ஒரு பலகோண பாலிகன்களான் ஆன ஒரு வலை.

இந்த மூன்று ஃபார்மட்களைத்தான் நமது Class A  ஹீரோ அலியாஸ் உள்ளே வர அனுமதிப்பார்.

-  க.சத்தியசீலன்