
வாசகர் பக்கம்
மோட்டார் விகடனுடனான தங்கள் பயணத்தைப் பற்றி வாசகர்கள் பேசும் பகுதி!
குறிப்பிட்ட சில விஷயங்களைச் சொல்லி, அதில் நம்பர்-1 என்று ரஜப் முகமதுவைச் சொல்லலாம். அவரது காரின் எண்ணும் நம்பர்-1, மஹிந்திராவும் திலீப் சாப்ரியா டிசைன் நிறுவனமும் போட்ட ஒப்பந்தத்தில் தயாரான மராத்ஸோவின் வாடிக்கை யாளர்களில் நம்பர்-1 (தமிழ் நாட்டின் முதல் கஸ்டமர்)... அதைவிட முக்கியமாக, மோட்டார் விகடன் சந்தாதாரர்களில் நம்பர்-1. அதாவது முதல் சப்ஸ்க்ரைபர், ரஜப் முகமதுதான்.

``2007-னு நினைக்கிறேன், கார்/பைக்குக்குனு தனியா ஒரு புத்தகம் கொண்டுவந்தா, அந்தப் புத்தகத்துக்கு நான்தான் முதல் சந்தாதாரரா இருப்பேன்னு அப்பவே லெட்டர் போட்டு, 1,001 ரூபாய்க்கான காசோலையும் அனுப்பினேன். இப்போ மோ.வி முதல் இதழிலிருந்து லேட்டஸ்ட் இதழ் வரைக்கும் என்கிட்ட கலெக்ஷன் இருக்கு!’’ என்கிறார் ரஜப் முகமது.
`இனோவா க்ரிஸ்ட்டா வாங்குவதற்குப் பதில், மராத்ஸோவை வாங்கிவிடலாம்’ என்று மோ.வி-யில் வந்த இதன் டெஸ்ட் ரிப்போர்ட்டைப் பார்த்துதான் காரை வாங்கியதாகச் சொல்கிறார் ரஜப். இவரது மராத்ஸோ, பென்ஸைவிட கெத்தாகக் காட்சியளிக்கிறது. காரணம், இந்த எம்பிவியின் ஆரம்ப M2 வேரியன்ட்டை வாங்கி, DC’ டிசைனின் ஆப்ஷனல் பேக்கேஜில் கேபினை ரீ-மாடிஃபிகேஷன் செய்ய, காரின் விலையோடு எக்ஸ்ட்ராவாக 5 லட்சம் கொடுத்து, தனது மராத்ஸோவை ப்ரீமியம் காராக மாற்றிவிட்டார் ரஜப் முகமது.
`டாப் எண்டைவிட அசத்தலாகக் கார் ரெடியாயிடுச்சு. ஆனால், டாப் வேரியன்ட்டைவிடவும் செலவு கம்மியாத்தான் ஆகியிருக்கு!’’ என்கிறார் அலட்டல் இல்லாத புன்னகையுடன்.
- படம்: தி. குமரகுருபரன்
வாசகர்களே... மோட்டார் விகடனுடனான உங்கள் பயணத்தை இந்தப் பக்கத்தில் நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம். 044-66802926 எண்ணுக்கு அழையுங்கள்.