ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களில் எத்தனை வகை உண்டு? எனது பட்ஜெட் 7 லட்சம் ரூபாய். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காரை வாங்க விரும்புகிறேன். எனக்கான சிறந்த ஆப்ஷன்கள் எவை?

- வினோத் பிரபாகர், மயிலாடுதுறை.

ஆட்டோமேட்டிக் கார்களில் டார்க் கன்வெர்ட்டர், AMT, CVT, ட்வின் கிளட்ச் எனப் பலவகையான கியர்பாக்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பான்மையான பட்ஜெட் கார்களில், AMT அல்லது டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸையே பார்க்க முடியும். ப்ரீமியம் ஹேட்ச்பேக் அல்லது மிட் சைஸ் செடான்/எஸ்யூவிகளில்தான், CVT கியர்பாக்ஸைக் காணலாம். டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ், விலை அதிகமான கார்களில்தான் வழங்கப்படும். நீங்கள் உங்கள் பட்ஜெட் மற்றும் தேவையைச் சொல்லிவிட்டாலும், இது உங்கள் முதல் காரா அல்லது பெட்ரோல்/டீசல் ஆகிய இரண்டில் எது வேண்டும் என்பதைக் குறிப்பிடவில்லை. இருப்பினும், சான்ட்ரோ மற்றும் வேகன்-ஆரின் AMT மாடல்களை நீங்கள் பரிசீலிக்கலாம். டெஸ்ட் டிரைவுக்குப் பிறகு முடிவெடுக்கவும்.

நான் கடந்த எட்டு ஆண்டுகளாக, பஜாஜ் பல்ஸர் 180 பைக்கைப் பயன்படுத்திவருகிறேன். இப்போது புதிதாக டூரர் பைக் வாங்க உள்ளேன். அது குறைவான பராமரிப்புச் செலவுகளைக் கொண்டிருப்பது அவசியம். தவிர முதுகுவலி பிரச்னையைத் தராமலும் இருக்க வேண்டும். பஜாஜின் பல்ஸர் 180F அல்லது NS200, ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் ஆகியவற்றில் எதை வாங்கலாம்?

- ஆர்.சங்கர், இமெயில்.

முதலில் பல்ஸர் 180F பைக்கை, உங்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். ஏனெனில், இதில் நீங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் பல்ஸரின் அதே மெக்கானிக்கல் பாகங்கள்தான் இருக்கின்றன. கூடுதலாக பல்ஸர் 220-ல் இருக்கும் செமி ஃபேரிங், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், பின்பக்க டிஸ்க் பிரேக் ஆகியவை உள்ளன. நேக்கட் பைக்கான பல்ஸர் NS200, டூரிங்குக்கு ஏற்றபடியாக இருக்காது. இதில் எதிர்க்காற்று முகத்தில் அறைவதைத் தடுக்கும் பெரிய வைஸர்/ஃபேரிங் மற்றும் பைகளை மாட்ட வசதி இல்லாததே காரணம். ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பஜாஜ் பைக்குகளைவிட சொகுசாக இருந்தாலும், அதிக பராமரிப்புச் செலவுகளைக் கொண்டிருக்கிறது. எனவே ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பஜாஜின் அவென்ஜர் ஸ்ட்ரீட்/க்ரூஸ் 220 பைக்கை நீங்கள் பரிசீலிக்கலாம்.

15 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கொண்ட எஸ்யூவி வேண்டும். எனக்கான தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.

- இளங்கோவன், இமெயில்.

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா மட்டுமே உங்கள் பட்ஜெட்டில் வருகிறது. ஏனெனில் நெக்ஸானில் AMT இருந்தாலும், க்ரூஸ் கன்ட்ரோல் மிஸ்ஸிங். மற்ற காம்பேக்ட் எஸ்யூவிகளான எக்கோஸ்போர்ட் மற்றும் XUV 3OO-ல் க்ரூஸ் கன்ட்ரோல் இருந்தால், டீசல் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் கிடையாது. சியாஸ், எர்டிகா போலவே விட்டாரா பிரெஸ்ஸாவிலும் தனது புதிய 1.5 லிட்டர் DDiS 225 டர்போ டீசல் இன்ஜினை, மாருதி சுஸூகி பொருத்துவதற்கான சாத்தியம் இருக்கிறது. ஆனால் அதில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் வழங்கப்படுமா என்பது சந்தேகமே! அதேபோல XUV3OO-ல் AMT மாடல் வெளிவரலாம். ஒருவேளை பெட்ரோல் ஆட்டோமேட்டிக் எஸ்யூவி ஓகே என்றால், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன்கூடிய ஹூண்டாய் வென்யூ காரை நீங்கள் பார்க்கலாம்.

10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், க்ரூஸர் பைக் வாங்க விரும்புகிறேன். பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, ஹார்லி டேவிட்ஸன் மற்றும் ட்ரையம்ப் பைக்குகளில் இருந்து தனித்துத் தெரியும் 'கவாஸாகி வல்கன் S' பைக்கைத் தேர்வு செய்துள்ளேன். ஆனால், அதன் பராமரிப்புச் செலவுகள் குறித்த தகவல்கள், என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. இதில் கஸ்டமைசேஷன் ஆப்ஷன் உண்டா?

- ஶ்ரீனிவாசன், தமிழ்நாடு.

வல்கன் S பைக்கை, CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்து, புனேவில் இருக்கும் தனது தொழிற்சாலையில் அசெம்பிள் செய்கிறது கவாஸாகி. இதனால்தான் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, இதன் விலை ஓரளவுக்குக் கட்டுப்படியாகக்கூடிய அளவிலே இருக்கிறது. பிரீமியம் பைக்குகளுக்குப் பெயர்பெற்ற ஒரு நிறுவனத்தின் பராமரிப்புச் செலவுகள், எதிர்பார்த்தபடியே அதிகமாக இருக்கும் என்பதே நியதி. அதற்கேற்ப கவாஸாகியின் இந்த க்ரூஸர் பைக்குக்கான உதிரிபாகங்கள் மற்றும் பராமரிப்புச் செலவு, நிச்சயம் அதிக விலையில்தான் இருக்கும். வல்கன் S பைக்குக்கான ஹேண்டில்பார், சீட், ஃபுட்பெக்ஸ் ஆகிய ஆக்சஸரீஸ்களை வழங்குகிறது கவாஸாகி. இவற்றை உங்களுக்கேற்ற Configuration-ல் வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம். நீங்கள் ஹார்லி டேவிட்ஸன் மற்றும் ட்ரையம்ப் பைக்குகள் வேண்டாம் எனச் சொல்லிவிட்டதால், ஹாய்ஸங் நிறுவனத்தின் Aquila 650தான் உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கும் மற்றுமொரு க்ரூஸர் பைக்.

எனது பட்ஜெட் 10 லட்சம்.
7 சீட்டர் கார்தான் வேண்டும். எர்டிகா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனது தேர்வு சரியானதா? இதே விலையில் வேறு ஆப்ஷன்கள் உள்ளனவா?

- லலிதாகுமார், இமெயில்.

உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மாருதி சுஸூகி எர்டிகாதான் சரியான சாய்ஸாக இருக்கும். ரெனோ லாஜியையும் உங்கள் பட்ஜெட்டில் வாங்க முடியும் என்றாலும், அது மிகவும் பழைய மாடலாகி விட்டது. தவிர, எர்டிகாவைப் பொறுத்த வரை, வழக்கமான 1.3 லிட்டர் DDiS 200 SHVS டீசல் இன்ஜின் தவிர, மாருதி சுஸூகியின் புதிய 1.5 லிட்டர் DDiS 225 டீசல் இன்ஜினுடனும் கிடைக்கிறது என்பது பெரிய ப்ளஸ். எனவே, உங்கள் பட்ஜெட்டைவிடக் கொஞ்சம் அதிக விலையில் இருந்தாலும், அந்த வேரியன்ட்டை வாங்குவதே நல்ல முடிவாக இருக்கும். இருப்பினும், காரை ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிடவும். உங்கள் பயன்பாடு குறைவாக இருந்தால், பெட்ரோல் மாடல் ஓகே!

யூஸ்டு கார் மார்க்கெட்டில், ஃபியட் லீனியா டீசல் காரை வாங்க ஆசை. என்ன விலையில் காரை வாங்கலாம்? இந்தியாவில் ஃபியட் தனது விற்பனையை நிறுத்தவுள்ளதாக செய்திகள் வருவதால், இதை வாங்குவதில் தயக்கம் இருக்கிறது.

- பிரகாஷ் துரைசாமி, ஈரோடு.

மூன்று லட்சம் ரூபாய்க்கு அதிகமான விலையில்தான் யூஸ்டு கார் மார்க்கெட்டில், டீசல் லீனியாவைப் பார்க்க முடிகிறது. ஃபியட்டின் டீலர் நெட்வொர்க் - சர்வீஸ் சென்டர்களின் எண்ணிக்கை - ரீசேல் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால், இதே விலையில் நல்ல ஆப்ஷன்களும் இருக்கின்றன. ஆனால், அவை லீனியாவுக்கு இணையாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியே? ஏனெனில், கட்டுமானத் தரம், ஓட்டுதல் அனுபவம், டிசைன் ஆகியவற்றில் லீனியா அசத்துகிறது. ஆனால் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது சிறப்பம்சங்கள், பராமரிப்புச் செலவுகள், இடவசதி ஆகியவற்றில் பின்தங்கிவிடுகிறது. ஃபியட் நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. என்றாலும், இப்போதைக்கு ஜீப் நிறுவனத்தை இந்தியாவில் முதன்மைப்படுத்துவதில் அந்த நிறுவனம் உறுதியாக இருக்கிறது.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com