நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2015-ம் ஆண்டில் அறிமுகமான TUV3OO... பினின்ஃபரினாவின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டது, முதலில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், சமீபகாலமாக அதன் விற்பனை மந்தமானது. அதனால் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் அழுத்தமாகக் காலூன்ற, TUV3OO பேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கியுள்ளது மஹிந்திரா.

டிசைன் மற்றும் வசதிகள்

காரின் Smoked Finish ஹெட்லைட்டில், புதிதாக DRL இடம்பெற்றுள்ளது. புதிய கிரில், Gloss ஃபினிஷுடன் கவர்கிறது. காரின் பின்பக்கத்தில் க்ளியர் லென்ஸ் விளக்குகள், ரூஃப் ஸ்பாய்லர், X வடிவ ஸ்பேர் வீல் கவர் ஆகியவை புதிது.

உள்ளே டேஷ்போர்டு, லெதர் சீட் என அனைத்திலும் இரட்டை வண்ண அலங்காரம். ரிவர்ஸ் கேமரா உடனான டச் ஸ்க்ரீன், ஸ்பீடோமீட்டரில் புதிய MID டிஸ்ப்ளே, ஃப்ளிப் சாவி ஆகியவை மேம்பட்டிருக்கின்றன. ஆனால் காரின் விலையுடன் ஒப்பிடும்போது க்ரூஸ் கன்ட்ரோல், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி அல்லது ரியர் ஏசி வென்ட்கள், எலெக்ட்ரிக் கலாக மடிக்கக்கூடிய ரியர் வியூ மிரர்கள் இருந்திருக்கலாம். மேலும் இந்த டிஜிட்டல் யுகத்தில், டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தில் ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி மிஸ்ஸிங் என்பது நெருடல்.

கேபின் எர்கனாமிக்ஸ்

முன்பக்க இருக்கைகளுக்குத் தனித்தனியாக ஆர்ம்ரெஸ்ட் மற்றும் லம்பர் அட்ஜஸ்ட்மென்ட் இருப்பதால், கெத்தான டிரைவிங் பொசிஷன் கிடைத்து விடுகிறது. காரின் சைஸுடன் ஒப்பிடும்போது, பின்பக்க இருக்கையில் லெக்ரூம் குறைவுதான். ஆனால் ஹெட்ரூம் சூப்பர். கடைசி வரிசை இருக்கையில் உள்ள ஜம்ப் சீட்கள், நீண்ட நேரப் பயணங்களுக்கு நிச்சயம் ஒத்துழைக்காது. இதற்கு சீட் பெல்ட்டும் இல்லை.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

முந்தைய மாடலில் இருந்த 100bhp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் - mHawk 100 - டீசல் இன்ஜின்தான் பேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்கிறது. 2 ஸ்டேஜ் டர்போசார்ஜரைக் கொண்ட இந்த 3 சிலிண்டர் இன்ஜின், 5 ஸ்பீடும் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. குறைவான வேகங்களில் இன்ஜின் ரிஃபைன்மென்ட் அற்புதமாக இருக்கிறது. இதன் ஷார்ட் கியரிங் மற்றும் ஆரம்பகட்ட பர்ஃபாமன்ஸ் காரணமாக, நெரிசல்மிக்க நகரச்சாலைகளில் TUV3OO காரை ஓட்டுவது சுலபமாக இருக்கிறது. இன்ஜினின் மிட் ரேஞ்ச் பர்ஃபாமன்ஸை நம்பி காரை விரட்டினால், டாப் எண்ட்டில் பவர் குறைபாடு அப்பட்டமாகத் தெரிகிறது. 4,800 rpm வரை இன்ஜின் இயங்கினாலும், 3,500 rpm-க்கு மேலே பவர் டெலிவரி சுணங்கிவிடுகிறது. இதற்கு காரின் அதிக எடையும் ஒரு விதத்தில் காரணம்.

ஓட்டுதல் அனுபவம்

மற்ற லேடர் ஃப்ரேம் எஸ்யூவிகளைப் போலவே, கரடுமுரடான சாலைகளை TUV3OO அசால்ட்டாகச் சமாளிக்கிறது. ஆனால், மோனோகாக் சேஸி கொண்ட காம்பேக்ட் எஸ்யூவிகளுடன் ஒப்பிடும்போது, நீண்ட நேர/தூரப் பயணங்களில் கார் அலைபாய்கிறது. மேலும் பாடி ரோல் மிக அதிகமாக இருக்கிறது. ஸ்டீயரிங்கின் செயல்பாடும் சுமார் ரகம்தான். இது எல்லாம் ஒன்றுசேரும்போது, திருப்பங்களில் காரை மிதமான வேகத்தில்தான் நம்பிக்கையாகச் செலுத்த முடிகிறது.

முதல் தீர்ப்பு

நகரத்துக்கும் நெடுஞ்சாலைக்கும் சேர்த்துப் பயன்படுத்த, பொலேரோவுக்கு மாற்றாக ஒரு காம்பேக்ட் எஸ்யூவி வேண்டும் என்பவர்களுக்கு, TUV3OO நல்ல சாய்ஸாக இருக்கும்.

தொகுப்பு: ராகுல் சிவகுரு