பிஎம்டபிள்யூவின் அடுத்த அட்டாக் ரெடி. பழைய மொந்தைதான்; ஆனால் புதுக் கள். அதாவது, X5 காரின் 4-வது தலைமுறை மாடலை அறிமுகம் செய்திருக்கிறது பிஎம்டபிள்யூ. புதுக்கள் என்று இதைச் சொல்வதற்குக் காரணம், கட்டுமஸ்தான (CA) க்ளஸ்ட்டர் ஆர்க்கிடெக்ச்சர் பிளாட்ஃபார்மில் தயாராகி இருக்கிறது புதிய X5.

கிட்னி கிரில், பம்பர், ஹெட்லைட், டெயில் லைட் என்று டிசைனில் நல்ல மாற்றங்கள். ஆனால், பெரிதாகத் தெரியவில்லை. காரணம், எல்லாம் அளவில் பெரிதாகி இருக்கிறது. அவ்வளவுதான்.

அடாப்டிவ் சஸ்பென்ஷன், இப்போது பிஎம்டபிள்யூவின் ஃபேவரைட்டாகி விட்டது. அதாவது சாலைகளுக்கு ஏற்றபடி இதன் டேம்பர் செட்-அப்கள் மாறிக்கொள்ளும். கூடவே X டிரைவ் எனும் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம்... ஆஃப்ரோடிலும் அசத்தலாம். இன்டீரியரில் ஏகப்பட்ட மாற்றங்கள். 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன், ‘பப்ஜி’யே விளையாடலாம்போல. அத்தனை பெரியது. பின் பக்கப் பயணிக்கும் டச் ஸ்க்ரீன் வசதி கொடுத்திருக்கிறார்கள். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஒரே டிஜிட்டல் மயம். 3-வது வரிசை சீட்டை ஆப்ஷனாகக் கொடுத்திருக்கிறார்கள். இது பயன்பாட்டிலும் சூப்பர். 650 லிட்டர் பூட் ஸ்பேஸ் என்பதால், பெரிய டூர் அடிக்கலாம். 60:40 ஸ்ப்ளிட் சீட்களை மடித்துவிட்டால் படுத்துக்கொண்டே பயணிக்கலாம். டிக்கி கதவுகளும் ஸ்ப்ளிட்தான்.

மொத்தம் 3 மாடல்களில் வருகிறது X5. இரண்டு டீசல்; ஒரு பெட்ரோல். M ஸ்போர்ட் மட்டுமே பெட்ரோல் வேரியன்ட். ஸ்போர்ட், Xலைன் - இரண்டும் டீசல் மாடல்கள். 3 லிட்டர், 6 சிலிண்டர் (வாவ்!) டர்போ டீசலின் பவர் 265 bhp - டார்க் 62 kgm. டீசலைவிட பெட்ரோலின் பவர் மிக அதிகம். அதாவது 340 bhp பவரும், 45 kgm டார்க் என அதிரடிக்கிறது. பாரபட்சம் பார்க்காமல், எல்லாவற்றிலுமே 8 ஸ்பீடு ஆட்டோ கியர்பாக்ஸ் கொடுத்திருக்கிறது பிஎம்டபிள்யூ.

X5-ல் பிடித்த விஷயம்: பார்க்கிங் அசிஸ்ட் தொழில்நுட்பம். காரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாலே போதும், பேரலல் பார்க்கிங்கில் தானாகவே பார்க் செய்து கொள்ளும். 6 காற்றுப்பைகள், DSC, CBC, டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, சைடு கொலிஷன் அலெர்ட் என்று வழக்கம்போல பாதுகாப்பு வசதிகள் உண்டு.

எக்ஸ் ஷோரூம் ரூ.72.9 லட்சத்தில் ஸ்போர்ட் டீசல் வேரியன்ட் ஆரம்பித்து, X-லைன் டீசலும், M ஸ்போர்ட் பெட்ரோலும் 82.4 லட்சம் வரை நிர்ணயம் செய்துள்ளார்கள். ஒரு கோடி ரூபாய் வரை பட்ஜெட் வைத்திருப்பவர்கள், சொகுசான ஆஃப்ரோடிங்குக்குத் தயாராகுங்கள்!

- ஜெஃப்ரின் ஆல்டோ.ஜோ