தற்போது விற்பனையில் இருக்கும் ஆல்ட்டோ 800, 2012-ல் வந்த மாடல். இந்த 7 ஆண்டுகளில் அவ்வப்போது சிறிய அப்டேட்டுகளைக் கொடுத்த மாருதி சுஸூகி, இப்போது ஆல்ட்டோவுக்கு மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஆல்ட்டோவின் இன்ஜின் BS-VI விதிமுறைகளுக்கு ஏற்ப மாறிவிட்டது. பாடி ஷெல்லை, கிராஷ் டெஸ்ட்டுக்குத் தாக்குப் பிடிக்கும்படி மாற்றி விட்டார்கள் இனி ஆல்ட்டோ 800, வெறும் `ஆல்ட்டோ’ என்றே அழைக்கப்படும்.

வெளிப்புறம்

ஹெட்லைட்ஸ், பாடி பேனல்கள், கதவு, டெயில் கேட், பின்பக்க பம்பர் எல்லாம் பழைய ஆல்ட்டோவில் இருப்பதே! பெரிய ஏர்டேம், தேன்கூடு டிசைனில் மெஷ் என முன்பக்க பம்பர் புதிது. DRL-க்கு இப்போது பம்பரில் இடம் இருக்கிறது. ஆனால் அது ஆக்சஸரியாக மட்டுமே கிடைக்கும். தற்போது இருப்பதைவிட புதிய கார் 50 மிமீ நீளம் அதிகமாகிவிட்டது. ஏப்ரல் 1, 2020 முதல் கிராஷ் டெஸ்ட் கட்டாயமாவதால் ஆல்ட்டோவின் முன்பக்கத்தை வலுவாக்கி இருக்கிறார்கள். 2 காற்றுப்பை, ABS, EBD, ரியர் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் போன்றவை இனி எல்லா வேரியன்ட்களிலும் கிடைக்கும்.

காரின் உள்ளே என்ன மாற்றம்?

காருக்குள்ளேயும் பெரிய மாற்றம் நடந்துள்ளது. ஆட்டோ K10-ல் இருக்கும் கறுப்பு-பீஜ் இரட்டை வண்ண டேஷ்போர்டு வருகிறது. டோர் பேட் மற்றும் சீட் ஃபேப்ரிக் மாறியுள்ளது. ஸ்டீயரிங் வீலும் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் அதேதான். ஸ்டாண்டர்டு வேரியன்ட்டில் எந்த வசதியுமே கிடையாது. LXi வேரியன்ட்டில் ஏசி, பவர் ஸ்டீயரிங், முன்பக்க பவர் விண்டோ கிடைக்கிறது. VXi வேரியன்ட்டில் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், கீ-லெஸ் என்ட்ரி, புளூடூத், யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட் வசதிகொண்ட 2-DIN ஸ்மார்ட் ப்ளே ஆடியோ பிளேயர் கிடைக்கிறது. போட்டியாளரான ரெனோ க்விட்டில் கிடைப்பதுபோல டச் ஸ்கிரீன் சிஸ்டம் இதில் இல்லை.

இன்ஜின்

பழைய காரில் இருக்கும் அதே 796சிசி, 3 சிலிண்டர் F8D பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் புதிய ஆல்ட்டோவிலும். எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்டில் சில சாஃப்ட்வேர் மாற்றங்களைச் செய்துள்ளார்கள். ஆல்ட்டோ K10-ல் இருக்கும் AMT ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இங்கே கிடையாது. BS-VI மாசுக் கட்டுப்பாடு அளவுகளைப் பெற புதிய எக்ஸாஸ்ட் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 48bhp பவர் மற்றும் 6.9Kgm டார்க்கில் எந்த மாற்றமும் இல்லை. இந்த அப்டேட்டின் மூலம், ஆல்ட்டோ இன்னும் ஸ்மூத்தாக மாறிவிட்டது.

ஐடிலிங்கில் வைப்ரேஷனே தெரியவில்லை. இன்ஜின் சத்தமும் முன்பைவிட குறைவு. ஆனால் இன்ஜின் முன்பைவிட மந்தமாக இயங்குகிறது. த்ராட்டில் ரெஸ்பான்ஸும் ஷார்ப்பாக இல்லை. அதிலும் ஏசியை ஆன் செய்து ஓட்டினால் இன்னும் மோசம். முன்பு போல பவர் டெலிவரி ஸ்மூத்தாக இல்லை. வேகமாகச் சென்றால் ஜெர்க் கொடுக்கிறது. கிளட்ச் லைட்டாக இருப்பதோடு, டிராவலும் குறைவுதான். ஸ்மூத்தான 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், காரை சிட்டியில் ஓட்டுவதற்குச் சுலபமாக்குகிறது. BS-VI இன்ஜின் மற்றும் அதிக எடையால் காரின் அராய் மைலேஜ், லிட்டருக்கு 24.7 கிமீ-யில் இருந்து 22.05 கிமீ-யாகக் குறைந்துவிட்டது.

இன்னும் ஆல்ட்டோதான் ராஜா!

ஆல்ட்டோ, 25,000 முதல் 38,000 வரை விலை கூடியுள்ளது. பர்ஃபாமன்ஸ் போதுமான அளவுக்கு இருந்தாலும், இன்னுமே பெரிய கேபின், சொகுசான டிரைவிங் மிஸ்ஸாகிறது. மைலேஜ் மற்றும் ரன்னிங் காஸ்ட், நிச்சயம் முன்புபோல இருக்காது. ஆனால் மற்ற கார்களை ஒப்பிடும்போது, இன்னமும் ஆல்ட்டோவின் பலத்தில் எந்தக் குறையும் இல்லை.

தொகுப்பு: ரஞ்சித் ரூஸோ