2005-ல் `ஏஸ்' என்ற இலகு ரக சரக்கு வாகனத்தை டாடா மோட்டர்ஸ் அறிமுகப்படுத்திய போதுதான், இது போன்ற வாகனங்களுக்கு மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது என்பதே தெரிய வந்தது. அறிமுகப்படுத்தப்பட்ட 14 ஆண்டுகளில், 23 லட்சத்துக்கும் அதிகமான ஏஸ் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது டாடா மோட்டர்ஸ். `குட்டி யானை' என்று செல்லமாகக் குறிப்பிடும் அளவுக்கு அது நாடு முழுதும் பிரபலமானதால், டாடாவின் போட்டியாளர்கள் பலரும் `குட்டி யானை'யைப்போலவே பலவிதமான இலகு ரக சரக்கு வாகனங்களை அறிமுகப்படுத்த, சிறிய ட்ரக்குகளின் தேவை அதிகமாகியிருப்பதால், தனது அடுத்த மாடலான இன்ட்ராவை, இப்போது களமிறக்கியிருக்கிறது டாடா.

இன்ட்ராவை உருவாக்க 4 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது டாடா மோட்டார்ஸ். இதற்காக இந்தியா முழுவதும் சுற்றி, ஓட்டுநர்களின் கருத்துகளைக் கேட்டு டிசைன் செய்திருக்கிறார்கள். டாடா ஏஸ் செம ஹிட் என்றாலும் டிரைவருக்கு அதில் அதிக வசதிகள் இல்லை. “எவ்வளவு அடிச்சாலும் தாங்கும்டா” என்பதுதான் அதன் அடையாளம். ஆனால் பல ஓட்டுநர்கள், இந்தச் சிறிய டிரக்குகளை லோடு ஏற்ற மட்டும் பயன்படுத்துவதில்லை. குடும்பத்துடன் சுற்றுலா செல்லவும் பயன்படுத்துவதுண்டு. அதனால் `காரிலிருக்கும் சில சொகுசு விஷயங்கள் இதிலிருந்தால் நல்லது' என்ற வாடிக்கையாளர்களின் எண்ணம்தான் டாடா இன்ட்ரா பிறந்த இடம்.

பாடி நிறத்தில் பம்பர், ஸ்டைலான ஹெட்லைட்ஸ், டாடாவின் ஸ்பெஷலான க்ரோம் கிரில், 14 இன்ச் ரேடியல் டியூப்லெஸ் டயர்கள் என முதல் பார்வையிலே ஈர்க்கிறது இன்ட்ரா. டிரைவர் கேபின் செம சொகுசாக இருக்கிறது. கியர் லீவரை டேஷ்போர்டிலேயே வைத்துவிட்டதால், கேபினில் அதிக இடம் கிடைத்திருக்கிறது. லோடு அடிக்கும் கேப்பில் தூங்க நினைத்தால், இரண்டு சீட்டுகளிலும் கால் நீட்டிப் படுத்துத் தூங்கலாம்! அதன்படி சீட்டை வசதியாக வடிவமைத்திருக்கிறார்கள். ஏ.சி-யும் இருக்கு பாஸ்! 1.4 லிட்டர் DI இன்ஜின் வெளிப்படுத்தும் 70bhp பவர் மற்றும் 14 kgm டார்க், இன்ட்ராவை பவர்ஃபுல் சிறிய டிரக்காக மாற்றியிருக்கிறது.

Loading Deck-தான் டிரக்குகளின் ஆதாரம். அதிக லோடு ஏற்ற முடிந்தால் அதிக வருமானம்... இன்ட்ராவின் லோடிங் டெக் மிகப்பெரியது. (2512 மிமீ X 1604மிமீ). டாடா ஏஸ் மாடலில் வாடிக்கையாளர்களே அதன் சஸ்பென்ஷனை மாற்றியமைத்து, அதிக லோடு ஏற்றியதாகச் சொல்லியிருந்தார்கள். எனவே இதில் டாடாவே சஸ்பென்ஷன் திறனை அதிகரித்துத் தந்திருக்கிறது. அதிகபட்சமாக 80 கி.மீ வேகம் வரை இன்ட்ரா செல்கிறது.

கார்களில் மட்டுமே இருந்த கியர் அட்வைஸர் சிஸ்டம் இப்போது இன்ட்ராவிலும்! எரிபொருளை மிச்சமாக்க எந்த கியரை எப்போது மாற்ற வேண்டுமென இது அறிவுறுத்தும்.

இதுவும் காம்பேக்ட் ட்ரக்தான் என்றாலும், டாடா ஏஸுக்கு மாற்றான வாகனம் அல்ல. இதன் விலை சற்றே அதிகமாக இருந்தாலும், அதிக வருமானம் ஈட்டித்தரும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு விலையின் சுமை தெரியாது என்று சொல்கிறது டாடா மோட்டர்ஸ்.

இன்ட்ரா பற்றி டாடா சொல்வதையும் அதன் வசதிகளையும் வைத்துப் பார்த்தால், இது குட்டிக் குதிரையாக இருக்குமென நம்பலாம்.

- கார்க்கிபவா; படங்கள்:கே.ராஜசேகரன்