`இந்தியர்களின் மனதைக் கவ்விக்கொண்ட சில கார்களில் ஃபியட் முதன்மையானது' என்று பேச ஆரம்பித்தார் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்பின் செயலாளர் கைலாஷ். சமீபத்தில் நடைபெற்ற ஃபியட் கிளாஸிக் கார் கிளப்பின் (FC4) இரண்டாம் ஆண்டுக் கொண்டாட்டத்தில் கைலாஷுடன் கலந்துகொண்டு நாஸ்டால்ஜியாவைக் கிளறவிட்டோம்.

FC4 பற்றிய சிறிய அறிமுகம்.

`ஃபேஸ்புக் மூலம் கனெக்ட் ஆன சன்ஜித், மனு பிரசாத், கல்யாண் மற்றும் ஜான் வீஸ்லி - தங்களது ஃபியட் 1100 காரோடு மெரினா ஒரு நாள் கடற்கரையில் சந்தித்தார்கள். பரஸ்பரமாக கார் பிரியத்தைப் பகிர்ந்து கொண்ட பிறகு, `இனிமேல் ஒவ்வொரு மாதமும் இப்படிச் சந்திக்கலாம்’ என முடிவெடுத்தார்கள். இப்படித்தான் ஆரம்பித்தது FC4 கிளப்பின் வரலாறு.

``ஒவ்வொரு முறையும் மெரினா பீச்சில் சந்திக்கும்போது யாராவது வந்து பேசுவாங்க. `எங்ககிட்டயும் ஃபியட் கார் இருக்கு. நாங்களும் உங்க மீட்டிங்குக்கு வரலாமா? இதே கார் எங்க வீட்ல இருக்கு. பார்ட்ஸ் எங்க வாங்குறதுனு தெரியலை. இந்த காருக்கு மெக்கானிக் இருக்காங்களா... அவரைப் பற்றிச் சொல்றீங்களா?’னு விசாரிப்பாங்க’’ என்கிறார் இந்த கிளப்பின் நிறுவனர் சன்ஜித்.

சென்னையில் இருந்த ஃபியட் கார் கிளப் கலைந்தவுடன், அந்த கிளப்பில் இருந்த சந்தோஷ் என்ற நண்பர், `நாமே ஒரு கிளப் தொடங்கலாம்’ என்று சொல்ல, உருவானதுதான் FC4. தற்போது சென்னையில் உள்ள ஒரே பதிவுசெய்யப்பட்ட ஃபியட் வின்டேஜ் கார் கிளப் இதுதான். கடந்த ஆண்டு 18 உறுப்பினர்களுடன் சந்தித்த இந்த கிளப்பில், இப்போது 26 பேர் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை `இத்தாலியன் ஜாப்’ படத்தை இந்தியாவில் எடுத்திருந்தால், ஆஸ்டின் கூப்பருக்குப் பதிலாக ப்ரீமியம் பத்மினியைத்தான் பயன்படுத்தியிருப்பார்கள். அப்படி ஒரு க்யூட்டான டிசைன். இப்போது இருக்கும் ஃபியட் 500 காருக்கு அடித்தளமிட்டதே டோப்போலினோ எனும் மாடல்தான். 1936-ல் வந்த இதுதான் சிறிய சிட்டி கார்களுக்கு முன்னோடி. இது வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் VW பீட்டிலே விற்பனைக்கு வந்தது.

ப்ரீமியர் பத்மினி எல்லோருக்கும் தெரியும்... `பிரசிடென்ட்' கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஃபியட் 1100 காரை இந்தியாவில் தயாரித்து அசெம்பிள் செய்ய முடிவெடுத்த ப்ரீமியர் நிறுவனம், இந்த காருக்கு வைத்த பெயர் `பிரசிடென்ட்’. இரண்டு ஆண்டுகள் மட்டுமே விற்பனையில் இருந்த இந்த காரைப் பார்ப்பது அரிதிலும் அரிது. இந்திய அரசுக்கு ஒரு பிரசிடென்ட் இருந்தால் போதும் எனச் சொன்னதால், இந்த காரின் பெயரை `பத்மினி’ என்று மாற்றினார்கள். தனவான்களின் செல்லமாக இருந்த ஃபியட் கார்களை பாமரர்களும் பயன்படுத்தக் காரணம், ஃபியட் 1100. `குறைந்த விலை கார்தானே’ என சாதாரணமாக இல்லாமல், நேர்த்தியாகச் செய்யப்பட்டது இந்த கார். 1953-ல் வந்த இதில், ஃபியட் டிசைன் செய்த ஃபேன் பெல்ட்டின் சைஸ் 2000-ம் வரை மாற்றப்படவே இல்லை.

ஃபியட் கார்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், ஃபுல்ஸ்டாப்பை மறந்து விடுகிறார்கள் இந்த கார் பிரியர்கள். இந்தச் சந்திப்பில் FC4-க்கு மட்டுமல்ல கொண்டாட்டம், வின்டேஜ் கார்களுடன் எங்கள் நாளும் கொண்டாட்டமாகவே முடிந்தது.

- ரஞ்சித் ரூஸோ; படங்கள்: துளசிதரன்