Published:Updated:

வெலவெலக்க வைக்கும் வசதிகளுடன் வெலர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வெலவெலக்க வைக்கும் வசதிகளுடன் வெலர்!
வெலவெலக்க வைக்கும் வசதிகளுடன் வெலர்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ரேஞ்ச்ரோவர் வெலர்

பிரீமியம் ஸ்டோரி

புனேவில் அமைந்திருக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர் தொழிற்சாலையில்தான், வெலர் அசெம்பிள் செய்யப்படுகிறது. எனவே, காரின் விலை முன்பைவிடக் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இங்கே நீங்கள் பார்க்கும் P250 R-Dynamic S வேரியன்ட்டின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை 72.47 லட்சம் ரூபாய்தான். அதாவது, முன்பு இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மாடலின் விலையைவிட இது 13 லட்சம் ரூபாய் குறைவு. ஒருபுறம் விலை குறைந்திருந்தாலும், மறுபுறத்தில் முன்பைவிட அதிக சிறப்பம்சங்களை வெலரில் வழங்கியிருக்கிறது லேண்ட்ரோவர். இந்த மேக் இன் இந்தியா லக்ஸூரி எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

வெலவெலக்க வைக்கும் வசதிகளுடன் வெலர்!

25-ல் இருந்து 2...

வெலரின் விலையைக் குறைத்த கையோடு, வேரியன்ட்களின் எண்ணிக்கையையும் சுருக்கிவிட்டது லேண்ட்ரோவர் (25-ல் இருந்து 2). தவிர, 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனையும் இந்த நிறுவனம் நீக்கிவிட்டது. எனவே, இன்ஜினியம் சீரிஸின் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல்/டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களை மட்டுமே, இனி R-Dynamic S வேரியன்ட்டில் வாங்க முடியும். இதன் பெயருக்கு ஏற்றபடியே, ஸ்போர்ட்டியான பம்பர்கள் மற்றும் பானெட் வென்ட்கள் காரில் இடம்பெற்றிருக்கின்றன. கான்ட்ராஸ்ட் லுக்குக்காக, ரூஃப் கறுப்பு நிறத்தில் இருக்கிறது. இதற்கு மேட்ச்சாக அலாய் வீல்களையும் கறுப்பு நிறத்தில் லேண்ட்ரோவர் கொடுத்திருக்கலாம்.

வசதிகள் எல்லாம் புதுசு!

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டாலும், லேண்ட்ரோவரின் லேட்டஸ்ட் அம்சங்கள் அனைத்தும் இங்கே தொடர்வது ப்ளஸ். இரட்டை டச் ஸ்கிரீன் கொண்ட டச் ப்ரோ டுயோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அதற்கான உதாரணம். பயன்படுத்த எளிதாகவே இருந்தாலும், சாலையில் இருந்து பார்வையை விலக்கித்தான் கீழே இருக்கும் ஸ்க்ரீனை உபயோகப்படுத்த வேண்டும் என்பது நெருடல். காரின் சைஸுடன் ஒப்பிடும்போது இடவசதி குறைவுதான்.

ஸ்லைடிங் பனோரமிக் சன்ரூஃப், கை/கால் அசைவுகளால் கன்ட்ரோல் செய்யக்கூடிய டெயில்கேட், பலவிதமாக மாற்றக்கூடிய ஆம்பியன்ட் லைட்டிங், 4 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, 360 டிகிரி பார்க்கிங் கேமரா, பார்க் அசிஸ்ட், டிஜிட்டல் டயல்கள் ஆகியவை இந்திய மாடலில் புதிது. காரின் ஆஃப் ரோடு எலெக்ட்ரானிக்ஸ் செட்-அப், டெரெய்ன் ரெஸ்பான்ஸ் 2-க்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது வெலரின் இன்ஜின் - கியர்பாக்ஸ், ஸ்டீயரிங் - சஸ்பென்ஷன் ஆகியவற்றின் செட்டிங்கை, நிலப்பரப்புக்கு ஏற்ப மாற்றியமைக்கும்.

வெலவெலக்க வைக்கும் வசதிகளுடன் வெலர்!
வெலவெலக்க வைக்கும் வசதிகளுடன் வெலர்!

ரேஞ்ச்ரோவர் அலைபாயுதா?

திருப்பங்களில் காரைச் செலுத்துவது நல்ல அனுபவமாகவே இருந்தாலும், மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது வெலர் கொஞ்சம் பக்கவாட்டில் அலைபாய்வதுபோல தோன்றுகிறது. ஒருவேளை இறுக்கமான சஸ்பென்ஷன் செட்-அப் காரணமோ? R-Dynamic S வேரியன்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 250bhp பவர் மற்றும் 36.5kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. ஸ்மூத்தாக இயங்கும் இந்த 4 சிலிண்டர் இன்ஜின், தன்வசம் இருக்கும் செயல்திறனை ஸ்மூத்தாகவும் சைலன்ட்டாகவும் வெளிப்படுத்துகிறது. சீராக இயங்கும் இந்த பெட்ரோல் இன்ஜினுடன் ஒப்பிட்டால், டீசல் இன்ஜினின் பர்ஃபாமன்ஸ் மற்றும் ரிஃபைன்மென்ட் குறைவுதான்.

முதல் தீர்ப்பு

கான்செப்ட் கார் போன்ற தோற்றம், வருங்கால டிசைனில் இருக்கும் கேபின், லேண்ட்ரோவர் கார்களுக்கே உரித்தான கட்டுமானத் தரம் எல்லாம் செம! முன்பை விட விலையும் குறைவு (91.56 லட்சம் ரூபாய், சென்னை ஆன் ரோடு விலை). ஆனால் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, இந்த விலை அதிகம்தான் எனத் தோன்றுகிறது. அதேநேரம் லக்ஸூரி எஸ்யூவி வேண்டும் என்பவர்களுக்கு, ஸ்டைலான ஆப்ஷன் வெலர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு