Published:Updated:

SPY PHOTO - ரகசிய கேமரா - அட... புது i20 காரா இது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
SPY PHOTO - ரகசிய கேமரா - அட... புது i20 காரா இது?
SPY PHOTO - ரகசிய கேமரா - அட... புது i20 காரா இது?

SPY PHOTO - ரகசிய கேமரா - அட... புது i20 காரா இது?

பிரீமியம் ஸ்டோரி

PI3 எனும் குறியீட்டுப் பெயரைக் கொண்டிருக்கும் ஹூண்டாயின் i20 காரை டெஸ்ட்டிங்கில் படம் பிடித்திருக்கிறார்கள், மோ.வி வாசகர்களான ஆர்.சாம் மேத்யூ பிரவீன் (சேலம்) மற்றும் செந்தில்குமார் (ஊட்டி).

காரின் ப்ரொஃபைல், தற்போதைய i20-யை நினைவுபடுத்துகிறது. வென்யூபோலவே, பின்பக்க நம்பர் பிளேட் பின்பக்க பம்பரில் இருக்கும். புதிய மாடலும் 4 மீட்டருக்குட்பட்ட சைஸ்தான். இடவசதியை அதிகரிக்கும் நோக்கில் அகலம் அதிகரிக்கப்படலாம். LED புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED DRL இருக்கலாம். புதிய கிராண்ட் i10 காரின் கேபினில் இருக்கும் பாகங்கள், இந்த i20 காரில் பயன்படுத்தப்படலாம். ப்ளூலிங்க் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அதற்கான உதாரணம்.

SPY PHOTO - ரகசிய கேமரா - அட... புது i20 காரா இது?

வென்யூவில் இருக்கும் இன்ஜின் - கியர்பாக்ஸ்தான் இங்கேயும். ஆனால், இந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 100bhp/120bhp என எந்த ட்யூனிங்கில் வெளிவரும் என்பது போகப்போகத்தான் தெரியும். அதேபோல இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன், 7 ஸ்பீடு ட்வின் கிளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷனல்; பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டு அம்சமாக இருக்கும்.

ஸ்பை படங்களில் இருக்கக்கூடிய காரில், சன்ரூஃப் மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல்கள் இருந்தன. இது BS-6 அவதாரத்தில் வெளிவருவதால், மூன்றாம் தலைமுறை i20 காரின் விலை, தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட அதிகமாகவே இருக்கும்.

i20 காரைப் படம் எடுத்து அனுப்பிய வாசகர்கள் மேத்யூ பிரவீன், செந்தில்குமாருக்கு, ஓர் அற்புதமான பரிசு காத்திருக்கிறது.

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002.
email: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு