Published:Updated:

இது ஈஸியான எக்ஸ்யூவி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா எக்ஸ்யூவி300 AMT டீசல்

பிரீமியம் ஸ்டோரி

க்ஸ்யூவி300 கார் விற்பனைக்கு வந்தபோது, ‘ஆட்டோமேட்டிக் மாடல் விரைவில் வரலாம்’ என்று மஹிந்திரா சொன்னது.  இப்போது அதைச் செய்துவிட்டது. எக்ஸ்யூவி300 AMT-யை, தன் டாப் டீசல் மாடலான W8(O)-வில் அறிமுகப்படுத்திவிட்டது மஹிந்திரா.

இது ஈஸியான எக்ஸ்யூவி!

AMT கியர்பாக்ஸுக்குப் புகழ்பெற்ற, ‘மேக்னெட்டி மெரல்லி’ தொழிற்சாலையில் தான் இதற்கான கியர்பாக்ஸ் தயாரிக்கப்படுகிறது. டீசல் AMT எக்ஸ்யூவி300-ல் ஒரு சின்ன டிரைவ். எப்படி இருக்கிறது டீசல் ஆட்டோமேட்டிக்?!

மேனுவல் மாடலுக்கும், ஆட்டோமேட்டிக் மாடலுக்கும் வெளித்தோற்றத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. டாப் மாடலில்தான் AMT என்பதால்... டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஹீட்டட் ORVM, ஸ்மார்ட் வாட்ச், சன்ரூஃப், 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், புரொஜெக்டர் LED ஹெட்லைட்ஸ், DRL, டச் ஸ்க்ரீன் (ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார் ப்ளே), ஆட்டோ ஹெட்லைட்ஸ், ஆட்டோ வைப்பர், ESP, ஹில் லாஞ்ச் அசிஸ்ட், 7 காற்றுப்பைகள்... என்று ஏராளமான வசதிகள்.

கறுப்பு மற்றும் பீஜ் நிற இன்டீரியர், டிரைவிங் பொசிஷன், வெளிப்பக்க விஸிபிலிட்டி எல்லாமே அதே! ‘அட’ என நம்மைப் புதிதாகக் கவர்வது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் லீவர். ‘நியூட்ரல்’ வலதிலும், ‘ரிவர்ஸ்’ வலது அடிப்பக்கத்திலும், A/M இடது பக்கத்திலும் செட் செய்திருக்கிறார்கள். AMT என்பதால் க்ளட்ச் பெடல் இல்லை. அந்த இடத்தில் அகலமான டெட் பெடல் இருப்பதால், காலை வசதியாக வைத்துக் கொண்டு பயணிக்கலாம். மேனுவல் எக்ஸ்யூவி ஓட்டுபவர்கள் பொறாமைப்படும் விஷயம் இது.

டீசல் மேனுவலில் உள்ள அதே 1.5 லிட்டர், 117 bhp பவர் மற்றும் 30kgm டார்க் கொண்ட 4 சிலிண்டர் இன்ஜின்தான் இந்த AMT-யிலும். கியர் லீவரை ‘A’-வில் தள்ளிவிட்டு, பிரேக்கில் இருந்து காலை எடுத்தால்... க்ரீப் மோடு பக்காவாகத் தெரிகிறது. அதாவது, கார் தானாகவே நகர்கிறது. பம்பர் டு பம்பர் டிராஃபிக்கில், மலைச்சாலைகளில் ஏறும்போது இது வசதியாக இருக்கும். ஆனால் க்ரீப்பிங்கின்போது சின்ன ஜெர்க் தெரிந்தது.

இது ஈஸியான எக்ஸ்யூவி!

இந்த 6 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ்,  நாம் இடும் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுகிறது. ‘பவரே வா’ என்று நாம் டிமாண்ட் செய்து ஆக்ஸிலரேட்டர் மிதிக்கும்போது, பக்காவாக கியர்கள் டவுன்ஷிஃப்ட் ஆகி, தேவையான சக்தியைக் கொடுக்கின்றது. இதுவே ஹைவேஸில் க்ரூஸிங்கில்... ஓவர்டேக்கிங்கின்போது, உதாரணத்துக்கு 6-வது கியரில் இருந்து சட்டென 3-வது கியர் வர தாமதமாகிறது. அதனால், ஓவர்டேக்கிங்கில் மேனுவல் டிப்ட்ரானிக் மோடுதான் பெஸ்ட். அதற்காக, மேனுவலை - ஆட்டோமேட்டிக்போல் ‘க்விக்’ ரெஸ்பான்ஸ் என்று சொல்ல முடியவில்லை. ஆனால், காரை கன்ட்ரோலாக வைத்திருக்க உதவுகிறது.

இந்த AMT-யில் ஹில் ஹோல்டு அசிஸ்ட்டும் உண்டு. மலைச்சாலைகளில் ஏறும்போது, கார் பின்னால் நகராது.  டிரைவர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் - மலைச்சாலைகளில் கீழே இறங்கும்போது, வேகம் அதிகரிக்கும்தானே! அப்போது கியர் அப்ஷிஃப்ட் ஆகாமல், குறைந்த கியரிலேயே கார் இறங்குவதோடு அது நமது கட்டுப்பாட்டிலும் இருக்கும். பிரெஸ்ஸாவில் இல்லாத க்ரூஸ் கன்ட்ரோல் வசதியெல்லாம் இதில் கொடுத்திருக்கிறார்கள்.

மேனுவல் மாடலைவிட சுமார் 70,000 ரூபாய் விலை அதிகமாக எடுத்து வைத்தால்... ஈஸி டிரைவ், சொகுசு, ஏகப்பட்ட வசதிகள், மைலேஜில் கையைக் கடிக்காத இந்த எக்ஸ்யூவி AMT-யில் உற்சாகப் பயணம் போகலாம்.

தொகுப்பு: தமிழ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு