Published:Updated:

அப்டேட்டே தேவையில்லை... ஆனாலும் அப்டேட்டட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்டேட்டே தேவையில்லை... ஆனாலும் அப்டேட்டட்!
அப்டேட்டே தேவையில்லை... ஆனாலும் அப்டேட்டட்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மெர்சிடீஸ் பென்ஸ் E220D

பிரீமியம் ஸ்டோரி

மெர்சிடீஸ் பென்ஸ் E-க்ளாஸ் E220d... தனது செக்மென்ட்டிலேயே டாப் செல்லிங் காராக இருக்கும் இதற்கு, தற்போதைய சூழலில் எந்த அப்டேட்டும் தேவைப்படவில்லை என்றே சொல்லலாம்.

அப்டேட்டே தேவையில்லை... ஆனாலும் அப்டேட்டட்!

ஏனெனில் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது LWB (லாங் வீல்பேஸ்) செட்-அப்பில் வந்த இந்த செடானின் பின்பக்க இருக்கையை, 37 டிகிரி வரை சாய்க்க முடியும். மேலும் சொகுசான ஓட்டுதல் அனுபவம், சிறப்பான இன்ஜின், அட்டகாசமான கேபின் தரம் எனப் பல ப்ளஸ் பாயின்ட்களைக் கொண்டிருந்தாலும், விலை விஷயத்திலும் E-க்ளாஸ் E220d டிஸ்டிங்ஷன் அடித்ததுதான் மாஸ். இந்த நிலையில் ஏப்ரல் 1, 2020 முதலாக இந்தியாவில் BS-6 மாசு விதிகள் அமலுக்கு வருவதால், தனது மாடல்கள் அனைத்தையும் விரைவாக அதற்கேற்ப மாற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறது மெர்சிடீஸ் பென்ஸ்.

எனவே C-க்ளாஸ் மற்றும் CLS கார்களைத் தொடர்ந்து, E-க்ளாஸிலும் 2.0 லிட்டர் BS-6 டர்போ டீசல் இன்ஜினை இந்த நிறுவனம் பொருத்தியுள்ளது. எதிர்பார்த்தபடியே Diesel Particulate Filter, Selective Catalytic Reduction ஆகியவை இருந்தாலும், கூடவே AdBlue Dosing டேங்க் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது BS-4 எரிபொருள்தான் கிடைக்கிறது என்றாலும், முன்னே சொன்ன அம்சத்தின் உதவியுடன் அது BS-6 மாசு விதிகளுக்கேற்ப இயங்கும் என்பது ப்ளஸ். E-க்ளாஸின் பெட்ரோல் வேரியன்ட்டான E200-ம், BS6 மாசு விதிகளுக்கு ஏற்புடைய விதத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நாங்கள் இங்கே டெஸ்ட் டிரைவ் செய்திருப்பது டீசல் மாடல்தான். 3 லிட்டர் - 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் கொண்ட E-க்ளாஸ் E250d, பின்னர் வெளிவரலாம்.

அப்டேட்டே தேவையில்லை... ஆனாலும் அப்டேட்டட்!

காரில் என்னென்ன மாறியிருக்கின்றன?

முன்னர் Avantgarde  என அழைக்கப்பட்ட வேரியன்ட், தற்போது Expression எனப் பெயர் மாற்றம் கண்டிருக்கிறது. இதனுடன் புதிதாக Exclusive என்ற வேரியன்ட் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் பழைய மாடலைவிட அதிக சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் அதற்கான உதாரணம். முன்பிருந்த அனலாக் டயல்களுடன் ஒப்பிட்டால், இது கேபினை ஹை-டெக்காக மாற்றியிருக்கிறது. இதனுடன் E250d மாடலில் இருந்த 590W - 13 ஸ்பீக்கர்களைக் கொண்ட Burmester ஆடியோ சிஸ்டம், மென்மையாக மூடும் கதவுகள், பின்பக்கத்தில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் பின்பக்க ஆர்ம்ரெஸ்ட்டில் டச் ஸ்க்ரீன் இருக்கின்றன. இதைப் பயன்படுத்தி ஏசி, ஆடியோ, Sun Blinds, லைட்டிங் போன்றவற்றை அட்ஜஸ்ட் செய்யலாம்! பின்பக்க இருக்கைக்கு மெமரி வசதி வழங்கப்பட்டிருந்தாலும், அது முன்பக்க இருக்கைகளுக்கு மிஸ்ஸிங் என்பது நெருடல்.

அப்டேட்டட் இன்ஜினின் பர்ஃபாமன்ஸ் எப்படி?

BS-6 மாசு விதிகளுக்கு அப்கிரேடு ஆகியிருந்தாலும், இந்த OM 654 இன்ஜின் வெளிப்படுத்தும் 194bhp பவர் மற்றும் 40kgm டார்க்கில் எந்த மாறுதலும் இல்லை; முன்பைப் போலவே இது ஸ்மூத்தாகவும் சைலன்ட்டாகவும் இயங்குகிறது. ஆனால் பிஎம்டபிள்யூ 520d மற்றும் ஜாகுவார் XF ஆகிய கார்களுடன் ஒப்பிடும்போது, இந்த டர்போ டீசல் இன்ஜின் அத்தனை Rev-Happy கிடையாது. 0 - 100கிமீ வேகத்தை 9.,24 விநாடிகளில் எட்டிப்பிடிக்கிறது E-க்ளாஸ் E220d.

 இது முந்தைய மாடலைவிட 0.4 விநாடிகள் அதிகம் என்பதுடன், முன்பு காணக் கிடைத்த மிட் ரேஞ்ச் பன்ச்சும் மிஸ்ஸிங். இருக்கின்ற பவர் முன்பைவிட சீராக வெளிப்படுவதால், கியர்களுக்கு இடையேயான வேகத்திலும் இந்தக் குறைபாடு எதிரொலிக்கிறது.

அப்டேட்டே தேவையில்லை... ஆனாலும் அப்டேட்டட்!

முதல் தீர்ப்பு

இன்ஜினின் மாசு அளவுகள் மாறியிருந்தாலும், காரின் ஓட்டுதலில் அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இவ்வளவு பெரிய காரின் ஸ்டீயரிங், துடிப்புடன் செயல்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் சஸ்பென்ஷன் மென்மையாக செட் செய்யப்பட்டிருப்பதால், அதிக வேகத்தில் செல்லும்போது கார் கொஞ்சம் ஆட்டம் போடுகிறது. ஆனால், குறைவான வேகங்களில் இந்த செட்-அப்தான் சொகுசான பயணத்துக்கு வழிவகுக்கிறது.

BS-6 இன்ஜின் மற்றும் புதிய வசதிகள் காரணமாக, தனது வகையிலேயே காஸ்ட்லியான மாடலாக மாறிவிட்டது E-க்ளாஸ் E220d. இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையான 62.50 லட்ச ரூபாய். Exclusive வேரியன்ட், Expression வேரியன்ட்டைவிட 4 லட்ச ரூபாய் விலை அதிகம்! பிஎம்டபிள்யூ 520d இதைவிடக் குறைவான விலையில் கிடைத்தாலும், E-க்ளாஸ் E220d விட 620d GT காரின் விலை 1.4 லட்ச ரூபாய் அதிகம்! மெர்சிடீஸ் பென்ஸின் இந்த செடான், 6 சிலிண்டர் இன்ஜின் மற்றும் அதிரடியான ஓட்டுதலை வழங்காது; ஆனால் இதுபோன்ற கார்களின் முக்கியத் தேவையான பின்பக்க இடவசதி மற்றும் சொகுசில், அதன் வகையில் இப்போதைக்கு இந்த மெர்சிடீஸ் பென்ஸ் காரை வீழ்த்தமுடியாது என்றே தோன்றுகிறது.

- தொகுப்பு: ராகுல் சிவகுரு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு