Published:Updated:

வேலட் பார்க்கிங் டிரைவர் ஆகணும்!

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வேலட் பார்க்கிங் டிரைவர் ஆகணும்!
வேலட் பார்க்கிங் டிரைவர் ஆகணும்!

வேலட் பார்க்கிங் டிரைவர் ஆகணும்!

பிரீமியம் ஸ்டோரி

“க்ராஷ் டெஸ்ட்ல 5 ஸ்டார் வாங்குன கார்தானே இது?’’ - மோட்டார் விகடன் அலுவலக வாசலில் நின்றுகொண்டிருந்த டாடா நெக்ஸான் காரைப் பார்த்துவிட்டு, ஆருஷ் பழனியப்பன் சொன்ன கமென் ட்தான் இது. இந்த கார் எக்ஸ்பெர்ட்டுக்கு வெறும் 9 வயதுதான். ‘`கார்கள் என்றாலே ஆருஷ்க்குக் கொள்ளைப் பிரியம். இரண்டரை வயசுலயிருந்தே ஒரு காரின் லோகோவையும் ப்ரொஃபைலையும் பார்த்தே அந்த கார் பேரை கரெக்ட்டா சொல்லிடுவான்.

வேலட் பார்க்கிங் டிரைவர் ஆகணும்!

5 வயசுலேயே ஆட்டோமொபைல் பத்திரிகைகளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டான். ஸ்கேல் மாடல் கார்கள்னா அவ்ளோ பிடிக்கும்’’ என்கிறார் ஆருஷின் அம்மா முத்துலட்சுமி. சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து நமது அலுவலகத்துக்கு வருவதற்கு, இந்தச் சிறுவன் தானாகவே ஜிபிஎஸ் செட் செய்து வந்திருக்கிறான். இவனிடம் பேப்பர் பேனா கொடுத்து எதையாவது வரையச் சொன்னால், தனது வீட்டில் இருக்கும் காரின் நம்பர் ப்ளேட்டை வரைந்து நம்மிடம் கொடுத்தான் அழகாக!

வீட்டில் கார்கள் இருந்தாலும், டாக்ஸியில் பயணிப்பதைத்தான் அதிகம் விரும்புகிறான். கேட்டால் ‘`ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கார்ல போலாம்ல’’ என்கிறான். ‘’எதிர்காலத்தில் என்னவாக வர விரும்புகிறாய்?’’

என்ற கேள்விக்கு ‘’வேலட் பார்க்கிங் டிரைவர் ஆக வேண்டும்’’ என்கிறான் சிரித்துக் கொண்டே! (அப்போதுதான் பல விதமான கார்களை தினமும் ஓட்ட முடியுமாம்)! மும்பையில் பெற்றோருடன் வசிக்கும் ஆருஷ் பழனியப்பன், டிசைனர் திலிப் சாப்ரியாவை மிகவும் பிடிக்கும் என்கிறான். இதனாலேயே பின்னாளில் டிசைன் தொடர்பான படிப்பைத் தேர்வு செய்ய விரும்புவதாகவும், சமீபத்தில் வந்த கார்களில் டாடா ஹேரியர் மற்றும் மஹிந்திரா XUV3OO மிகவும் ஸ்டைலாக இருப்பதாகவும் சொன்னான். வருங்கால டிசைனர் வளர்ந்து கொண்டிருக்கிறார்.

- படம்:  பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு